Posts Tagged ‘விடுதலைப்புலி’

சிவனும், விஷ்ணுவும், புத்தனும், அல்லாவும், ஏசுவும் எங்கே போன…

ஜனவரி 4, 2010

தலைப்பு : தமிழீழம் குறித்து தமிழகத்தில் ஓட்டெடுப்பு மற்றும் இலங்கை பிரச்சினை திட்டமிட்டு திசை திருப்பபடுகிறது – வைகோ

தலையங்கம் :

வைகோ சொன்னதை போல கடந்த ஆண்டு , எந்த இனத்திற்கும் ஏற்படாத அல்லது இனி எந்த இனத்திற்கும் ஏற்பட போகாத பேரழிவு தமிழ் இனத்திற்கு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டே தொடங்கிய தொடர் போரில் போராளிகளை கொல்கிறோம் என்று கொத்துகொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

போராளிகள் வீழ்ந்தது இந்திய சீன மற்றும் இலங்கையின் போர் துரோக நடவடிக்கையின் காரணமாகத்தானே ஒழிய வேறல்ல இலங்கை பெற்றது வெட்கப்படத்தக்க வெற்றி. போரில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையும் வேதியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களையும் கொண்டு கோது கொத்தாக தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது.

அந்த தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பிரயோகிக்க அசிங்கம் பிடித்த இரண்டு அரசாங்கங்களும் உறுதுணையாக இருந்தது (ஒன்று இந்தியா மற்றொண்டு சீனா) ஒரு அரசாங்கம் கண்டும் காணாமல் இருபது போல உள்ளே வெளியே நாடகம் ஆடியது (தமிழக அரசாங்கம்).உலகில் தமிழினத்தை தவிர எந்த இனமும் இப்படி கொல்ல்லபட்டிருக்க முடியாது.

போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் இத்துணை நாளும் மக்களை காத்தவர்கள் என்பதை உலகிற்கு வெளிகாட்டிய ஆண்டு 2009.

உலகின் மிகபெரிய அவலமாக போர் குற்றம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆண்டும் 2009.

இந்த நேரத்தில் ஈழ நேசன் இல் வந்த கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டுவது நல்லது என்று நினைக்கிறன்.

அந்த கட்டுரை வெள்ளை கொடி ஏந்தி நடந்து வந்த நடேசன் புலித்தேவன் மற்றும் ரமேஷ் முதலான காயம்பட்ட, சரணடைய வந்த போராளிகள் மற்றும் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை ராணுவம் கொன்றது பற்றியது.

மேலும் அந்த முழு கட்டுரை இங்கே,

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார்

சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி (செயற்கை கோள்) தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. – சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் படி நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 – 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (400 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா – என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் ”சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள். "

நண்பர்களே எத்துனை கொடுமைகளை நம் சக தமிழ் பேசும் தோழர்கள் பெற்றுள்ளார்கள். புத்தாண்டை நாம் எந்த சந்தோசத்தில் வரவேற்பது. இன்னும் இரண்டு லக்ஷம் பேர் திறந்த வெளி சிறையில், பிள்ளையின் ரொட்டிக்காக கற்பை விலை கேட்கும் சிங்கள இன வெறியனின் கட்டுப்பாட்டில் நமது தாய், தங்கைகள் உறவுகள்.

போதுமடா கொடுமைகள். இறைவன் என்று ஒருவன் இருப்பது நிச்சயமானால் , இயற்கையின் நியதி உண்மையானால் சிங்களவனின் இலங்கை அழியும். அழியவேண்டும். அதற்க்கு துணை போன இந்திய அரசாங்கம் அதற்க்கான தண்டனையை பெறும் அல்லது பெறவேண்டும் . உளமறிந்து துரோகம் செய்தவர்கள் ஊரறிய அழியவேண்டும் அல்லது அழிவார்கள்.

இது நடந்தால் சிவனும், விஷ்ணுவும், புத்தனும், அல்லாவும், ஏசுவும் இருக்கிறார்கள் அல்லதென்றால் அனைத்தும் கடவுள்களும் வேசிக்கு பிறந்த போலிகளே.

Advertisements

எம்.ஜி.ஆருடனான விடுதலைப்புலிகளின் கடைசி சந்திப்பு

நவம்பர் 15, 2009

உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.

பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது – அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது’ என்று ஆத்திரத்துடன் கூறினார்.

"நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் – ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்’ என்று அவர் குரலை உயர்த்தினார்.

பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி’ என்றார்.

தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் – இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்’ என்றார்.

"அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.’

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார்.

""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது” என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்’ என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:

""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி – நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?” என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்’ என்றார்.

தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்” என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது” என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் – பழ.நெடுமாறன் – 29-8-2009)

இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர்.

"விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று’ என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை’ நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு:

""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.”

""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார் இந்தியத் தூதுவர்.

""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.

""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என்றார் யோகி.

""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை” என்றார் யோகி.

வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்றார் தீட்சித்.

இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்” என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.

தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.

முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார். ""அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டுச் சென்றோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.

-பாவை சந்திரன்-

எம்.ஜி.ஆரின் துணிவும், தெளிவும்!

நவம்பர் 15, 2009

ஈழத் தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். நடத்திய பேரணி

ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து ஜெயவர்த்தனா செயல்படுவதன் மூலம் இனி பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்பது உறுதியாயிற்று. இதன் காரணமாக தமிழர்கள் பகுதியில் பயம் தொற்றிக் கொண்டது.

போராளிகள் இயக்கங்களில் களத்தில் நிற்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகிய இரண்டு அமைப்புகளையும் பலப்படுத்துவது என்றும், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்துவது என்றும் எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். விடுதலைப் புலிகளுக்கு 3 கோடி ரூபாயும், ஈரோஸ் அமைப்புக்கு ரூ.1 கோடி ரூபாயும் வழங்குவது என்றும் முடிவு செய்து அவ்வமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கீகரிப்பது மட்டுமல்ல, அந்த அமைப்பிலுள்ள பெண் வீராங்கனைகளையும் சட்டமன்றத்தில் பாராட்டியது முக்கிய வரலாற்று நிகழ்வாகும். எந்தெந்த விஷயங்களை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வரை ஆலோசித்து முடிவு செய்து, அவ் விளக்கத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சார்பில், பண்ருட்டி ராமச்சந்திரன் அளிக்க உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்றப் பேரவையில் 27.4.1987 அன்று பண்ருட்டி ராமச்சந்திரன் நிகழ்த்திய உரை வருமாறு:

""இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசும் அவர்களோடு நெருங்கிய நண்பர்களும் அதை அறிந்தோ அறியாமலோ, அதேபோல இந்திய திருநாட்டிலேயுள்ள சில பத்திரிகைகளும், சில நேரங்களில் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் கூட சில சம்பவங்களைச் சரியான முறையில் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில்லை. ஆகவே, அந்த பனிப்படலத்தை நீக்கி, உண்மை நிலையை விளக்க வேண்டுவது இந்த அரசின் தலையாய கடமையாகும்.

இலங்கை அரசை எடுத்துக்கொண்டால் கடந்த கால அனுபவம் என்னவென்றால், இன வெறியையும், மத வெறியையும், மொழி வெறியையும் மையமாக வைத்து செயல்படுகின்ற ஓர் அரசைத்தான் நாம் இலங்கையில் பார்க்கிறோம். இதற்கு ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை.

சில தினங்களுக்கு முன் இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் பிரதம அமைச்சர் பிரேமதாசா, அண்மையில் திருகோணமலையிலும், கொழும்புவிலும் நடந்து விட்ட வெடிகுண்டு சம்பவங்கள் பற்றி பேசினார். அவர் பேசியதில் தவறு இல்லை. ஆனால் அவர் பேசியபோது இலங்கை அரசினுடைய உண்மையான சொரூபம், (ட்ரு கலர்ஸ்) என்ன என்பதை நாமெல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசியிருக்கிறார். அவர் பேசுகின்ற பொழுது சொன்னது:

எமது மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இல்லை” இந்த "எமது மக்கள்’ என்றால் யார்?

இதுவரையில் ராணுவத்தினாலும், காவல் துறையினராலும் வடபுலத்திலேயும், கிழக்கு மாகாணத்திலேயும் கொல்லப்பட்ட தமிழர்கள் அல்ல.

திருகோணமலையிலே, கொழும்புவிலே நடந்த வெடிகுண்டு சம்பவங்களின் விளைவாக சிங்களவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றவுடன் ஒரு நாட்டின் அரசு, அந்த அரசின் சார்பிலே பேசுகின்ற பிரதமர் என்ன சொல்லுகின்றார் என்றால், "எமது மக்கள்’ என்று.

"எமது மக்கள்’ என்றால் யார்?

எமது மக்கள் என்பது சிங்களவர்கள் என்றால் ஏனைய தமிழ் மக்கள் யார்?

அவர்கள் அந்த நாட்டு மக்கள் அல்லவா? மண்ணின் மைந்தர்கள் அல்லவா?

மேலும் அவர் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்பொழுது (இந்தியாவோடு நட்புறவு வேண்டுமென்பதற்காக எமது மக்களை நாங்கள் கைவிடமாட்டோம்) என்று கூறுகிறார். ஆகவே அவர் சிங்களவர்களின் பிரதமராக இருக்கிறாரே தவிர, சிங்களவர்களின் பிரதிநிதியாக இருக்கிறாரே தவிர, இலங்கையிலே உள்ள அனைத்து மக்களினுடைய பிரதமராக இருக்கிறாரா என்பதை நாம் தயவுசெய்து எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

எப்பொழுது ஒற்றுமை வரும்? எல்லோரும் ஒன்று என்கின்ற எண்ணம் ஏற்படுகின்றபொழுது ஒற்றுமை வரும். அவர்களே ஒன்றாக நினைக்காமல் தமிழ் மக்களை வேறாக நினைக்கின்ற பொழுது நீங்களும் நானும் சேர்ந்தா இலங்கையில் ஒற்றுமையை உருவாக்கப் போகிறோம்? இதை இலங்கையிலே இருக்கின்ற சிங்கள மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அந்த மக்களின் சார்பிலே நடைபெறுகிற ஒரு அரசின் சார்பில் ஜெயவர்த்தனா இன்றைக்குப் பேசுகிறபொழுது(நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைக்குத் தயாராய் இருக்கிறோம்) என்று கூறுகிறார்.

ஆனால் இதே ஜெயவர்த்தனா 1983-ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்றபொழுது, மக்களுக்கு விடுத்த அறிக்கையிலே அவர் பேசுகிறபொழுது சிங்கள மக்களை எண்ணித்தான் "எமது மக்கள் ஆபத்துக்கு உள்ளானால் நான் சும்மா இருக்க முடியுமா? எமது மக்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்டார்.

இவர்கள் ‘‘ஞன்ழ் டங்ர்ல்ப்ங்’’ எமது மக்கள் என்கின்றார்களே. அப்படியானால் ஏனைய மக்கள் யார்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்லவா? இந்த உள்ளுணர்வு அவர்களுக்கு இருக்கின்றவரை அவர்கள் பேச்சுவார்த்தையிலே ஈடுபடுகிறோம் என்று சொல்வதை எந்த அளவிற்கு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

பிரேமதாசா இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகிறபொழுது, "எங்களுடைய எதிரிகளை அவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களானால் நாங்கள் வேறுபுறத்திற்குத் திரும்புவோம்’ என்று சொல்கிறார்.

ஆகவே, அங்குள்ள தமிழ் மக்களை அங்குள்ள குடிமக்களாக அவர்கள் கருதவில்லை. அந்த நாட்டு மக்களாக எண்ணவில்லை. அவர்கள் உள்ளக்கிடக்கையை அவர்களாகவே ஆத்திரம் வந்தவுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த உள்ளத்தில் தமிழ் மக்களை அந்நிய மக்களாகப் பகைவர்களாகக் கருதுகிறார்களே தவிர வேறு அல்ல.

அப்படிக் கருதுகின்ற வரையிலும் எப்படி அந்த நாட்டிலே ஒற்றுமை வளரும்? எப்படி இறையாண்மை இருக்கும்? அதை நாம் போய் எப்படி உருவாக்க முடியும் என்பது நிச்சயமாக இந்த அரசுக்குத் தெரியவில்லை.

அந்நாட்டுப் பிரதமர் பிரேமதாசா மேலும் கூறுகிறார். ""அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயார் இல்லை. அரசியல் தீர்வு வேண்டுமென்று எந்த நண்பராவது சொன்னால் அந்த நண்பர்தான் எங்களது மிகப் பெரிய எதிரி” என்கிறார். அரசியல் தீர்வு என்று சொல்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ரர்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; ஊண்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; க்ஷண்ஞ்ஞ்ங்ள்ற் ங்ய்ங்ம்ஹ் என்கிற உணர்வு வருகிறது என்றால் இந்திய அரசையும், நம்மையும் பற்றி அவர்கள் எத்தகைய மனப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவேதான் அங்கே இலங்கை மக்களின் சார்பிலே நடைபெறுகின்ற அரசினுடைய அதைப் பொறுத்துத்தான் பேச்சுவார்த்தையுடைய தன்மைகள் அமையும். பேச்சுவார்த்தையே கூடாது என்பது நமது நோக்கம் அல்ல.

ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, உண்மையிலேயே அவர்கள் ராணுவத் தீர்விலேதான் மிகுந்த நம்பிக்கை வைத்து அதற்குத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்முடைய கணிப்பு, கருத்து.

அதை முதல்வர் பாரதப் பிரதமரிடமும் இந்திய அரசிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் பாரதப் பிரதமரைச் சந்தித்து முதல்வர் கடிதம் கொடுத்தபோதும் தெளிவாகச் சொன்னார்கள். பிரதமர் எடுத்த பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு,

நமது முதல்வர் கடிதத்தில் கூறுவதாவது:

""உங்களுடைய உண்மையான முயற்சிகளுக்கு மாறாக, இலங்கை அரசு அரசியல் தீர்வை விரும்பவில்லை. அதற்கு மாறாக ராணுவத் தீர்வுக்கு அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.

அதோடு மட்டுமல்ல, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திலே இருந்தபோது நம்முடைய முதல்வர் பாரதப் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்கள். 9-3-1987 அன்று கொடுத்த அந்தத் தந்தியில் எங்களுக்கு வருகின்ற தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை அரசானது ராணுவத் தீர்வை நடத்துவதற்கு முடிவு எடுத்து விட்டது என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் எழுதிய கடிதத்தில்,

யாழ்ப்பாணம் பகுதியிலே இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் மீது இலங்கை அரசு முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் மீது முப்படைகளையும் ஏவியிருக்கிறார்கள். ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள். விமானம் மூலம் குண்டு வீசுகிறார்கள். தமிழர்கள் தப்பித்து வெளியே செல்ல முடியாமல் கடல் வழியையும் தடை செய்கிறார்கள்.

""இலங்கை அரசியல் தீர்வுக்குப் போராடவில்லை. எங்கள் நாட்டின்

ஒற்றுமையையும் இறையான்மையையும் பாதுகாக்கப் போராடுகிறோம். அமைதிக்குப் பிறகுதான் பேச்சுவார்த்தை” என்று இலங்கைப் பிரதமர் பேசுகிறார்.

அமைதியை ஏற்படுத்தியபின்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றால் அமைதி எப்போது ஏற்படும்? நான் கேட்க விரும்புவதெல்லாம், இந்த அரசு கேட்பதெல்லாம் அமைதி என்றால் சுடுகாட்டு அமைதியா? என்பதுதான்

பாவை சந்திரன்