Posts Tagged ‘தமிழக மீனவர்கள்’

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தவில்லை: ப.சிதம்பரம்

ஒக்ரோபர் 4, 2009
கடந்த 9 மாதங்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
நடத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கோவை அருகே தொண்டாமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த 9 மாதங்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்
துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இலங்கை எல்லைக்குள் தமிழக மீனவர்கள்
வந்துவிட்டதாக இலங்கை கடற்படையினர் புகார் கூறுகின்றனர். தமிழக மீனவர்கள்
இலங்கை கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்கின்றனர். கடலில் எல்லையை எப்படி
பார்ப்பது என்று தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே நாங்கள் கூறியது என்னவென்றால், தவறுதலாக தமிழக மீனவர்கள் இலங்கை
எல்லைக்குள் நுழைந்தால், அவர்களை கைது செய்து எங்களிடம் ஒப்படைக்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அதையும் மீறி தமிழக மீனவர்கள் மீது
தாக்குதல் நடத்தினால் அது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது
குறித்து அந்நாட்டு அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

செய்தி : நன்றி : நக்கீரன்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௧௭௭௮௨

இவனைப்போன்ற தமிழ் இன துரோகிகள் பதவியில் இன்னும் விட்டு
வைத்திருக்கிறோமே….

இவனைப்போன்றவர்கள் தான் தமிழ் இனத்தின் அவமானசின்னம்…

Advertisements