Posts Tagged ‘கனிமொழி’

இலங்கை தமிழர்களது விடயத்தில் தமிழகம் நே ரடியாக தலையிட முடியாதாம் – கனிமொழியின் கண்ட ுபிடிப்பு

ஒக்ரோபர் 15, 2009

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையிலும் தற்போது அகதிமுகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் தமிழக அரசாங்கத்தினால் நேரடியாக தலையிட முடியாத நிலை உள்ளது. இந்திய மத்திய அரசின் ஊடாகவே அகதிமுகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வலியுறுத்தல்களை மேற்கொள்ள முடியும். என கூறியுள்ளார்.இலங்கை விஜயத்தின் போது வன்னியில் அகதிமுகாம்களை நாம் பார்வையிட்டோம். அகதி முகாம்களில் வாழும் மக்களுடன் நாம் உரையாடினோம். தம்மை முகாம்களில் இருந்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோருகின்றனர். இவர்களது விடுதலை தொடர்பாக அரசாங்க பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது வலியுறுத்த உள்ளோம். அதேபோன்று தாயகம் திரும்பியதும் தமிழக அரசின் ஊடாக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்.

Advertisements

கண்ணீர் கேள்வியால் தடுமாறிய தமிழக எம்.பி. க்கள்! – ஜூனியர் விகடன்

ஒக்ரோபர் 14, 2009
”இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல… தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!” என்ற விளக்கங்களுக்கு இடையே ஐந்து நாள் பயணமாக இலங்கையில் இருக்கிறார்கள் நம்மூர் எம்.பி-க்கள்! ‘வருவது யார் சார் பாக இருந்தாலும் சரி… வேதனைகளைக் கொட்டித் தீர்ப்போம்’ என்று முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் இவர்களுக்காகவேஆவலோடு காத்திருந்தார்கள். இலங்கையின் தமிழ் எம்.பி-க்களும் சிங்கள அரசின் திட்டமிட்ட இனவெறித் தாண்டவங் களைப் பட்டியலிடக் காத்திருந்தார்கள்.

p4b.jpg

திங்கள் கிழமையன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க இந்த எம்.பி-க்கள் குழு நேரமும் குறித்துவிட்ட நிலையில்… கோபாவேசத்தில் பொங்கத் தொடங்கிவிட்டார்கள் ஈழத் தமிழர்கள்.

கொழும்பில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள், ”முகாம்களில் வதைபடும் தமிழ்

மக்களின் வேதனைகளை அறியத்தான் தமிழக எம்.பி-க்கள் இங்கே வருகிறார்கள் என நினைத்தோம். ஈழ விவகாரத்தில் அக்கறை கொண்ட கனிமொழியும், திருமாவளவனும் அந்தக் குழுவில் இருந்ததால், மத்திய அரசின் பார்வைக்கு மக்கள் வேதனைகள் கொண்டு போகப்படும் என நம்பினோம். ஆனால், மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. ‘எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?’ எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி… சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்!

இலங்கையின் தமிழ் எம்.பி-க்களை ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசிய தமிழக குழு, முகாம்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான கொடுமை களையும் குறித்துக் கொண்டது. முகாம்களில் இருக்கும் இளைஞர்கள் சித்ரவதை செய்யப் பட்டும், இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கொல்லப்படுகிற விஷயங்களைக் கேட்ட தமிழக எம்.பி-க்கள் ஒரு கட்டத்தில் கண்கலங்கினார்கள். ஆனால், ‘அப்படியெல்லாம் நடக்கிறதா?’ என பெயரளவுக்குக்கூட முகாம் மக்களிடம் ஆறுதலாக அவர்கள் விசாரிக்கவில்லை. சித்ரவதை நிகழ்த்தப்படும் முகாம்களை நேரடி ஆய்வு செய்வதற்கு பதிலாக, சிங்கள அரசு சுட்டிக் காட்டிய முகாம்களுக்கே அந்த குழு சென்றது. அங்கிருந்த மக்களிடம்கூட பெரிதாக ஏதும் விசாரிக்கவில்லை.

p4a.jpg

வவுனியாவில் உள்ள எட்டு முகாம்களுக்குச் சென்ற எம்.பி-க்கள் குழு, ‘சிங்கள அரசு எங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பூரண சுதந்திரத்தோடு நாங்கள் சுற்றிப் பார்த்தோம்’ என மீடியாக்களிடம் முழங்கியது. தண்ணீரைக்கூட அளந்து கொடுக்கும் சிங்கள அரசின் சித்ரவதைகள் பற்றி எலும்பும் தோலுமாகச் சிதைந்து கிடக்கும் எங்கள் மக்களைக் கண்ணால் காணும்போதே தெரியும். அப்படியிருந்தும் சிங்கள அரசால் பயிற்று விக்கப்பட்ட சிலர் ஒப்பித்த விஷயங்களை மட்டுமே கேட்டு, தமிழக எம்.பி-க்கள் ஏமாறலாமா?

இதோடு கிழக்கு மாகாணத்தின் முதல்வரான பிள்ளையான், இலங்கை மந்திரியான டக்ளஸ் தேவானந்தா போன்றோரையும் சந்திக்க வைத்த சிங்கள அரசு, தமிழக p4.jpgஎம்.பி-க்களிடத்தில்தவறான தகவல்களை அவர்கள் மூலம் பரப்பியுள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகக் குழுவால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு விளங்கிவிட்டது!” என்று வேதனையைக் கொட்டித் தீர்த்தனர் இந்ததமிழ்உணர்வாளர்கள்.

இதற்கிடையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற தமிழக எம்.பி-க்கள் குழுவை, அங்கிருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஆவேசப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர், ”ஆறுமுகம் தொண்டமானுடன் யாழ்ப்பாணம் கோட்டையில் ஹெலி காப்டரில் வந்திறங்கியது எம்.பி-க்கள் குழு. தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேசினார்கள். ‘போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்?’ என ஒரு மாணவன் கண்ணீரோடு கேள்வி எழுப்ப, அடுத்த கணமே மற்ற மாணவர்களும் ஆவேசப்பட ஆரம்பித்து விட்டார்கள். ‘இந்தியாதான் போரை நடத்தியது. அதனைத் தமிழகம் தட்டிக் கேட்கவில்லை’ என கோஷங்கள் கிளம்ப… சில மாணவர்கள் தி.மு.க-வின் இரண்டு முக்கிய எம்.பி-க்களை முற்றுகையிட்டு, ‘ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிபோகக் காரணமாக இருக்கப் போகிறீர்கள்?’ என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். கனிமொழி, ‘உங்களின் உணர்வுகளை அவசியம் மத்திய அரசுக்குத் தெரியப் படுத்துகிறேன்’ என்றார்.

p6b.jpg

இதற்கிடையில், ‘உங்களிடம் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மக்களின் நிலையை இந்தக் கடிதத்தில் சொல்லி இருக்கிறோம். இதை இந்திய பிரதமரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள்’ எனச் சொல்லி அகதி முகாம்களின் நிலையை அவசரகதியில் எழுதி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், தமிழக குழுவிடம் கடிதம் ஒன்றைக் கொடுத் தார்கள். அதில், ‘முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களை தயவுசெய்து நேரில் போய்ப் பாருங்கள். அவர்களின் நிஜமான வலியை உணருங்கள். அலைந்து திரியும் எம்மக்களுக்கு வாழ்வுரிமை பெற்றுக் கொடுங்கள்’ என உருக்கமாக வேண்டி இருந்தார்கள். இதற்கெல்லாம் தமிழக எம்.பி-க்கள் எந்தள வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் என்று அவர்கள் இந்தியா திரும்பியதும் பார்க்கத்தானே போகிறோம்!” என்றார்கள் பத்திரிகையாளர்கள்.

p6a.jpg

பதற வைத்த மனித வெடிகுண்டு! ஈழப் போரில் விடுதலைப் புலிகளை வேரோடு அழித்து விட்டாலும், சிங்கள அரசின் நிம்மதிக்கு இப்போது வரை கியாரண்டி கிடைத்தபாடில்லை. போரில் தப்பிய புலிகள் கொழும்பில் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கும் p6.jpgசிங்கள அரசு, தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழக எம்.பி-க்கள் குழு இலங்கை வருவதாகத் தகவல் தெரிந்த மாத்திரத்தில், கொழும்பு பகுதியில் மனித வெடிகுண்டாக பதுங்கி இருக்கும் சிலரை தீவிரமாகத் தேடத் தொடங்கியது சிங்கள அரசு. ”அப்துல் சலாம் பாத்திமா யாஸ்மின் என்கிற பெண்மணி கொழும்பில் மனித வெடிகுண்டாக உலவி வருவதாக ராணுவத்துக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்திய உளவுத் துறையினர் இதுபற்றி விசாரித்ததும், அந்தப் பெண் வளைக்கப்பட்டு விட்டதாக சிங்கள அரசு தகவல் சொல்லியது. ஆனாலும், அந்தத் தகவலை நம்பாமல் தமிழக எம்.பி-க்கள் பயணத்தின்போது, இந்திய உளவு அதிகாரிகளும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்!” என்றார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.

p5.jpg

தமிழக எம்.பி-க்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ”தமிழக குழுவுக்கு போகிற இடமெங்கும் எதிர்ப்பு நிலவியது. ஈழப் போருக்கு பிரதான காரண மாக காங்கிரஸையும் தி.மு.க-வையும்தான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் கோபம் இன்னும் ஆறவில்லை. வவுனியா முகாமுக்கு தமிழக எம்.பி-க்கள் சென்றபோது, அங்கிருந்த மக்கள் பலரும் பேசவே தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும், ‘சீக்கிரமே மழை சீஸன் வரப் போகிறது. அதற்குள் எங்களை இங்கிருந்து சொந்த இடத்துக்கு அனுப்பி வையுங்கள். இல்லையேல் மழையே எங்களின் உயிரைக் குடித்துவிடும்!’ எனக் கெஞ்சினார்கள். முகாமில் இருந்த குழந்தைகளின் நிலையைக் கண்டு எம்.பி-க்கள் கண் கலங்கிப் போனார்கள். ஒரு எம்.பி. அடக்க முடியாமல் கதறி அழுதார். உலக நாடுகளின் உதவிகளை இழந்து தவிக்கும் இலங்கை அரசோ, தமிழக எம்.பி-க்கள் கொடுக்கும் அறிக்கை மூலமாகத் தங்களின் கறையைத் துடைத்து வீசிவிட முடியும் என நம்புகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்குமென்று!” என்றார்கள். 10 பேர் குழுவில் இடம்பெற்ற ஒரு எம்.பி-யிடம் பேசினோம். ”எக்காரணம் கொண்டும், தனிப்பட்ட முறையில் மீடியாக்களிடம் பேசக் கூடாது என எங்களுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் மீறிச் சொல்வதானால், முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலையைக் கண்டு நெஞ்சே கலங்கிப் போனது. போதுமான உணவோ, மருத்துவ வசதியோ இல்லாமல் அங்கே தவிக்கிற மக்களின் நிலையைக் கண்டிப்பாக தமிழக முதல்வரிடம் எடுத்து வைப்போம்!” என்றார் அவர்.

இந்த இதழ் முடியும் தறுவாயில் மூன்றுநாள் பயணம்தான் முடிந் திருக்கிறது. அடுத்த இரண்டு நாட் களில் ஏதும் அற்புதம் நடக்குமா என்று காத்திருப்போம்!

சீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி

ஒக்ரோபர் 6, 2009

சுவருமுட்டி சுந்தரம் வேற எதாவது தகவல் இருக்கா என்றார்.

“நிறைய இருக்கு …..18-ம் தேதி மதுரையில இயக்குனர் சீமான் தலைமையில நாம் தமிழர் இயக்கம் பட்டைய கிளப்புது. மதுரையில ஆரம்பிச்சு அப்படியே ஒவ்வொரு மாவட்டமா நடத்திகிட்டு வரப்போறாராம். மதுரையில் நடக்குற கூட்டத்துக்கு இளைஞர்களின் வரவேற்பு வெகு ஜோராம். கட்டுக்கடங்காம திரண்டிருக்காங்க. அவர்களின் ஒரே உற்சாகம் தலைவர் பிரபாகரன் எப்போ வருவார். மீண்டும் எப்போ போராட்டத்தை முன்னெடுப்பாருங்கிறதுதான். அதுக்கு ஒரே பதில் இப்போதைக்கு ஒரு வருடம் அது பற்றி ஏதும் கேட்காதீங்க, பேசாதீங்க. ஒரு வருஷம் வரைக்கு நாம் நமது இயக்கத்தை பட்டிதொட்டி எல்லாம் வளக்கனும். பல லட்சக்கணக்கில் இளைஞர்களை திரட்டனும். வலுவான ஒரு அமைப்பை உறுவாக்கனும். இது நடந்து முடியுறதுக்கும் தலைவர் பிரபாகரன் வெளிய வர்றதுக்கும் சரியா இருக்கும். அதுக்கு பிறகு உங்களுக்கான பதிலை அவரே பேசுவாருன்னு சொல்லியிருக்கார். இளைஞர் பட்டாளம் உற்சாகத்தோட இருக்கு.” என்ற சித்தன் இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. திமுக தரப்பு இதை அவ்வளவா ஏத்துக்க முடியாம இருக்கு. ஈழ மக்களுக்கான குரல் என்றால் அது கனிமொழி செய்யுறதா மட்டும் இருக்கனும்னு கலைஞர் விரும்புறார். கனியோட வளர்ச்சிக்கு சீமான் முட்டுக்கட்டையா இருப்பாருன்னு நினைக்குறாய்ங்க. அதனால இப்பவே அதுக்கு முட்டுக்கட்டைய போடுற வேலையும் தொடங்கியிருக்காராம். அதாவது சீமான் கூட்டத்துக்கு பக்கபலமா இருக்குற ஆளுங்கள ஓரு கட்டத்துல பிரிச்சு வெளியே கொண்டு வந்துடறது. இல்லே சீமான் மேல படிப்படியா வழக்கு போட்டு முடக்குறது. இதுக்கு எதிர்ப்பு இருந்தா, கைது படலத்தப்பவே மறு பக்கம் ஈழத் தமிழர்களுக்காக உண்மையான ஆதரவு போராட்டம்னு கனிமோழி மூலமாகவோ, இல்ல சீறும் சிறுத்தை மூலமாகவோ நடத்திடறது. அப்படி செய்தா உண்மையான போராட்டம் காலியாயிடும் இல்லையா.. இப்படி நிறைய உள்ளடி வேலையும் திட்டமா வச்சிருக்காங்கன்னு சேதி கசிஞ்சிருக்கு. பொருத்திருந்து பார்ப்போம்” என்றார்.

அடப்பாவிங்களா, இப்பத்தான் உறுப்படியா மரக்கன்னு நடற வேலையே தொடங்குது. அதுக்குள்ள சுடுத்தண்ணி ஊத்துற திட்டத்தை வச்சிருந்தா நாடு உறுப்படுமா?

நாடு உறுப்படுறதா முக்கியம், தன் குடும்பம் உறுப்படறதுதான முக்கியம். மத்திய அரசு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி வச்சாதான நல்லா இருக்க முடியும். எப்படியோ தன் மகள் கனி மூலமா நல்லத செய்யுறதா காய் நகர்த்தி கடைசியில அங்க அதிகாரமே இல்லாத ஒரு பொம்மை முதல்வர் ஆட்சியை கொண்டுவந்துட வச்சிடறதுதான் முக்கியம். தமிழர்களுக்கு நல்லத செய்ததா ஒரு பேரு. அப்படியே எங்க சகுனி வேலைக்கெல்லாம் துணையா இருந்தீங்கன்னு சென்ட்ரல் அரசுகிட்டேயும் ஒரு நல்ல பெயர வாங்கிடுவாரு. அரசியல்ல சனுனிகளுக்குதான முக்கியத்துவம்.

———————————————————————————–
அன்பு நாம் தமிழர் பேரியக்க உறவுகளே..

மேலுள்ள செய்தியை பாருங்கள்.. நமக்கு எதிராக நயவஞ்சக கூட்டம் சதி செய்ய ஆரம்பித்துவிட்டது… நம் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு நாசவேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.. அவர்களுக்கு பதிலடி தரும் முகமாக அண்ணன் சீமான் அவர்களின் கரத்தை பலப்படுத்துவோம்..

நாம் தமிழர் பேரியக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவோம்.. உறவுகள் எண்ணிக்கையை பெருக்கவும்.. நம் இயக்க செய்திகளை பரப்பவும்.. நாம் வளர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பதை நிரூபிப்போம்…

வெல்க தமிழ் தேசியம்.. வாழ்க தேசியத்தலைவர்..
நன்றி : குமுதம்