Posts Tagged ‘இன அழிப்பு’

நாங்கள் மனிதரில்லை!

ஜூன் 22, 2010

நாங்கள் மனிதரில்லை!
பா. உதயகுமார் (நோர்வே)

ஒர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்

எலும்பும் சதையுமாக

எரிந்து கொண்டிருந்தது

முள்ளிவாய்க்கால்.

இறந்த தாயின் முலையில்

குழந்தை பால் குடிக்க

இழுத்து வந்து

நெருப்பு மூட்டினர்

இருளின் நடுவே

சிலுவை தாங்கி

இறைவன் வருவான்

என நிலவைப் பார்த்தோம்

கண்களை மூடி

இது உன் விதி என்றது

எங்களின் வீட்டினுள்

யூதர்கள் நுழைந்தனர்

யேசுவைக் கேட்டனர்

ஆயிரம் ஆயிரம் சிலுவையில்

அவர்களை அறைந்தனர்

அடையாளம் காட்ட யூடாஸ் வந்தான்

மாவீரன் கல்லறையில்

மீண்டும் இரத்தம் வடிய

உயிர்த்திருந்தவர்களை

இன்னெருமுறை

புதைத்தனர்

கனவுகள் உடைந்து

கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது

இரத்தமும் சதையுமாய்

எழுப்பிய சுவருக்குள்

எங்கள் முகங்கள்

எரிந்து கருகின.

முள்ளிவாய்க்கால் முழுமையாக

மூச்சிழந்தது

ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது

அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்

கங்கையில் மிதந்த

பிணங்களைப் போல்

எங்களின் வயல்களில்

பிணங்கள் நீந்தின

எல்லாமே எரிந்து முடிந்தது

மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து

எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க

அங்கு யாரும்

சாட்சிகள் இல்லை

எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர

எஞ்சியிருப்பதற்கு

எங்களிடம் ஒன்றுமில்லை

மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்

கரைந்த படி திரிய

நாறிக் கிடந்தன பிணங்கள்

நாங்கள் மனிதரில்லை என்றே

மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்

புத்தரின் காவியினால்.

தாகம் தீர்த்தது சத்திய சோதனை

எங்களின் குருதியினால்.

மா.கெம்புகுமார். பி,ஏ, பி,எல்,
வழக்குரைஞர்
9245581684

Advertisements

சிவனும், விஷ்ணுவும், புத்தனும், அல்லாவும், ஏசுவும் எங்கே போன…

ஜனவரி 4, 2010

தலைப்பு : தமிழீழம் குறித்து தமிழகத்தில் ஓட்டெடுப்பு மற்றும் இலங்கை பிரச்சினை திட்டமிட்டு திசை திருப்பபடுகிறது – வைகோ

தலையங்கம் :

வைகோ சொன்னதை போல கடந்த ஆண்டு , எந்த இனத்திற்கும் ஏற்படாத அல்லது இனி எந்த இனத்திற்கும் ஏற்பட போகாத பேரழிவு தமிழ் இனத்திற்கு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டே தொடங்கிய தொடர் போரில் போராளிகளை கொல்கிறோம் என்று கொத்துகொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

போராளிகள் வீழ்ந்தது இந்திய சீன மற்றும் இலங்கையின் போர் துரோக நடவடிக்கையின் காரணமாகத்தானே ஒழிய வேறல்ல இலங்கை பெற்றது வெட்கப்படத்தக்க வெற்றி. போரில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையும் வேதியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களையும் கொண்டு கோது கொத்தாக தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது.

அந்த தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பிரயோகிக்க அசிங்கம் பிடித்த இரண்டு அரசாங்கங்களும் உறுதுணையாக இருந்தது (ஒன்று இந்தியா மற்றொண்டு சீனா) ஒரு அரசாங்கம் கண்டும் காணாமல் இருபது போல உள்ளே வெளியே நாடகம் ஆடியது (தமிழக அரசாங்கம்).உலகில் தமிழினத்தை தவிர எந்த இனமும் இப்படி கொல்ல்லபட்டிருக்க முடியாது.

போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் இத்துணை நாளும் மக்களை காத்தவர்கள் என்பதை உலகிற்கு வெளிகாட்டிய ஆண்டு 2009.

உலகின் மிகபெரிய அவலமாக போர் குற்றம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆண்டும் 2009.

இந்த நேரத்தில் ஈழ நேசன் இல் வந்த கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டுவது நல்லது என்று நினைக்கிறன்.

அந்த கட்டுரை வெள்ளை கொடி ஏந்தி நடந்து வந்த நடேசன் புலித்தேவன் மற்றும் ரமேஷ் முதலான காயம்பட்ட, சரணடைய வந்த போராளிகள் மற்றும் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை ராணுவம் கொன்றது பற்றியது.

மேலும் அந்த முழு கட்டுரை இங்கே,

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார்

சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி (செயற்கை கோள்) தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. – சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் படி நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 – 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (400 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா – என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் ”சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள். "

நண்பர்களே எத்துனை கொடுமைகளை நம் சக தமிழ் பேசும் தோழர்கள் பெற்றுள்ளார்கள். புத்தாண்டை நாம் எந்த சந்தோசத்தில் வரவேற்பது. இன்னும் இரண்டு லக்ஷம் பேர் திறந்த வெளி சிறையில், பிள்ளையின் ரொட்டிக்காக கற்பை விலை கேட்கும் சிங்கள இன வெறியனின் கட்டுப்பாட்டில் நமது தாய், தங்கைகள் உறவுகள்.

போதுமடா கொடுமைகள். இறைவன் என்று ஒருவன் இருப்பது நிச்சயமானால் , இயற்கையின் நியதி உண்மையானால் சிங்களவனின் இலங்கை அழியும். அழியவேண்டும். அதற்க்கு துணை போன இந்திய அரசாங்கம் அதற்க்கான தண்டனையை பெறும் அல்லது பெறவேண்டும் . உளமறிந்து துரோகம் செய்தவர்கள் ஊரறிய அழியவேண்டும் அல்லது அழிவார்கள்.

இது நடந்தால் சிவனும், விஷ்ணுவும், புத்தனும், அல்லாவும், ஏசுவும் இருக்கிறார்கள் அல்லதென்றால் அனைத்தும் கடவுள்களும் வேசிக்கு பிறந்த போலிகளே.

வீழ்வது விதையாகும் – உருகுவது ஒளியாகும்

ஒக்ரோபர் 4, 2009

அக்கினி குஞ்சாக மாறினான் பார்த்தீபன். அதை நல்லூரில் வைத்து போரட்டத்தீ
வளர்த்தான். பொந்தில் வைத்தால், காடுகளே வெந்து தணியும். ஆனாலும்,
இன்னமும் தணியவில்லை அவன் மூட்டிய பெருநெருப்பு.

இந்திய வல்லாதிக்கத்தின் வஞ்சக நகர்விற்கு எதிராக, போராட்ட வடிவத்தை
மாற்றிய தியாகி திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, உயிர் துறக்கும்
வரையான உன்ணாநிலைப் போரினை முன்னேடுத்தான். ரூபாய் நோட்டில் காந்தியை
வாழவைக்கு இந்திதேசம், விடுதலைப் புலிகளிள் அறவழிப் போராட்டத்தை கண்டு
சினமடைந்தது.எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும், இந்தியாவின் இலக்கு
மட்டும் மாறவில்லை. சொந்த நலனைக் காப்பாற்ற, தமிழ் மக்களின் எத்தகைய
போராட்ட வடிவங்களையும், இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு,
தியாகி திலீபனின் வீரச்சாவு மிகப் பெரிய சான்றாக வரலாற்றில்
பதியப்பட்டுள்ளது.
Thileepan2
இந்தியாவின் காந்திய முகமூடி கிழித்தெறியப்பட்டது நல்லுரில்தான். அணு
ஆயுதம் தாங்கிய காந்திதேசம், இன விடுதலையின் அறவழிப் போராட்டத்தை, குழி
தோண்டிப் புதைத்ததும் நல்லுரில்தான். அவனது இறுதிமூச்சு, தாயகக் காற்றில்
கரைந்து, இன்னமும் உயிர்ப்புடன் வாழ்வதை, இந்தி தேசம் உணர்வதாகத்
தெரியவில்லை. துறைமுகங்களில், அனல் மின் நிலையங்களில், மன்னார்
கடற்பரப்பில் பிணைக்க ப்பட்டுள்ள இந்திய நலன்கள், திலீபனின்
தியாகத்திற்கு பதில் கூறியே தீரவேண்டும்.

சிங்களத்தின் போலி வாக்குறுதிகளால், காந்தியை மறந்து பாரத தேசம். பன்னிரு
வேங்கைகளும் துடித்து மடிந்ததை கை கட்டி வேடிக்கை பார்த்தது.
முள்ளிவாய்க்காலிலும், பேரினவாதத்தின் முதுகுதடவல்கள் தொடர்ந்தன.
இந்தியாவின் சட்டிலைட் கண்கள், வன்னியை அளந்து, சிங்களத்திடம் உளவு
சொன்னது. நீட்டிய நேசக் கரங்களை வெட்டி வீழ்த்தப்பட்ட போதும்,
சிங்களத்தின் வாக்குறிதிகளால் மயங்கிக் கிடந்து இந்தியா.
இன்னமும் மயங்குகிறது. மயங்கிச் சரியும் போது, சிங்களத் தீவினில் சீனக்
கம்பளங்கள் விரிக்கப்பட்டிருக்கும்.

அன்று திலீபன் சொன்ன செய்தியை, இன்றுவரை இந்திய அதிகாரவர்க்கம் உணர்ந்து
கொள்ளவுமில்லை, உணரப் போவதுமில்லை.அகிம்சைப் போரில் கரும்புலியானவனே
தியாகி திலீபன். அவர் வெடித்துச் சிதறவில்லை. உயிர் பூவை உதிர்த்து,
மக்கள் மன உணர்வில் பெரும் வெடிப்பதிர்வுகளை உருவாக்கியவன்.சகல சமூக
ஒடுக்குமுறைகளையும், பூர்சுவா சிந்தனைகளையும் அறுத்தெறிந்து, மானுட
விடுதலையின் ஒரு பரிமாணமான தேசிய இன விடுதலையை வென்றெடுக்கும் ‘மக்கள்
புரட்சி’ குறித்தே அவன் பேசினான். ஒரே இன குழுமத்தினுள். சாதீய, மத
ஒடுக்குமுறையைக் காவித் திரிந்தவாறு, மக்கள் புரட்சியை நிகழ்த்த
முடியாது. ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் வியாபித்திருந்தலும், அவையாவும்
பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.

ஆகவே மக்களை அணிதிரட்டும் போது, அகநிலை முரண்பாடுகனையும் கருத்தில்
கொள்ளல் வேண்டும் அப்போதுதான் திலீபன் தரிசிக்க விரும்பும் மக்கள்
புரட்சியின் பூரண வடிவம் முழுமை பெறும். யுத்தம் என்பது இரத்தம் சிந்தும்
அரசியல் என்றால், சகல அயுதப் போராட்டங்களும் அரசியல் போராட்டத்தின்
வடிவங்களே. அவை கையாளும் அரசியல் கோட்பாடுகளை பொறுத்தே, அவற்றினை ‘மக்கள்
யுத்தம்’ என்றும் ‘ஆயுதக் கிளர்ச்சி’ என்றும் பிரித்துப்
பார்க்கப்படுகிறது. ஆனாலும் தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், திலீபனின் மக்கள் புரட்சிக்கான
அறைகூவல் உயிர்ப்புடன் இயங்குகிறது.

ஒடுக்குமுறை வடிவங்கள் வியாபித்தவண்ணமுள்ளது. வவுனியா வதைமுகாம், வடக்கு
– கிழக்கெங்கும் கிளைபரப்பி விரிகின்றது. இயல்பு வாழ்வினை மீட்டெடுக்கும்
போராட்டமா?, அல்லது தீர்வுத் திட்டங்களை அரங்கேற்ற, மேடைகள் தேடும்
நகர்வுகளா?
அல்லது இந்திய நலன் எதுவென்று ஆய்வு செய்யும் போக்குகளா?, அல்லது இவை
மூன்றும் இணைந்த புதிய தளமா? இவற்றில் தடம் பதிக்க முன், திலீபனின்
‘மக்கள் புரட்சி’ குறித்தும், அதை முன்னெடுக்கும் வழிமுறை பற்றியும்
சிந்திக்க வேண்டிய காலமிது.
shankar
ஆழ ஊடுருவிய சிங்களத்தின் மாயக்கரங்களால், கேணல் சங்கரும் இந்நாளில்
வீழ்த்தப்பட்டார். ஆயுதப் போராட்ட பரிமாணத்தை, வானளாவ உயர்த்திய,
உறுதிமிக்க விடுதலைப் போராளி அவர். வீழ்ந்த சங்கரும் விதையானார். உயிரை
உருக்கிய திலீபனும் ஒளியானான். அர்ப்பணிப்புக்கள் வீண்போகாது.
வீழ்த்தப்பட்ட விதைகள் மறுபடியும் முளைக்கும். அதேவேளை, சிங்களத்துடன்
இந்தியா செய்துகொண்ட உடன்படிக்கையே, தமிழ் மக்களிற்கான தற்காலிகத்
தீர்வினைக் கொண்டுவருமென்கிற வகையில், பழைய விதைகளும்
விதைக்கப்படுகின்றன.

அதாவது, இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கிய, தற்காலிக வட-கிழக்கு
இணைப்பு மாகாண சபையானது, சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தி
விடுமாம்.

ஆகவே, இந்தியா இல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க
முடியாதென்பதால், சிறீலங்காவின் இறையாண்மை பாதிக்காதவாறு, இந்தியா வரைந்த
மாகாண சபையை ஏற்று, குடியேற்றங்களைத் தடுக்க வேண்டுமாம். வேடிக்கையான
விவகாரமிது. இந்தியப்படை சூழ, திருமலையில் நடைபெற்ற மாகாண சபை
விவாதங்களில், காணி உரிமைக்கும், காவல்துறை நிர்மாணிப்பிற்கும், சுயாதீன
நிதிக் கையாள்கைக்கும், முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சிங்கள
ஆட்சியாளர்களுடன் நிகழ்த்திய சூடான விவாதங்களையும், மோதல்களையும் பலர்
மறந்து விட்டார்கள்.

மாகாண சபைக்கு, உரிமைகளை வழங்க மறுத்த சிங்களத்துடன் விடாக்கண்டன்
போக்கினால், ஈழப் பிரகடனம் செய்ய வேண்டிய நிலைக்கு வரதராஜப்பெருமாள்
தள்ளப்பட்டார். இவை தவிர, நிகழ்கால அனுபவங்களைப் பார்த்தால்,
பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும் இந்த உரிமைகளை வழங்க சிங்களம்
மறுக்கின்றது. ஆயுதக்குழுத் தலைவர் முதலமைச்சர் பிள்ளையான், அரசோடு
இணைந்திருந்தும் இவ்வுரிமைகளைப் பெறமுடியவில்லை.

ஆகவே சில தமிழக தலைவர்கள் உட்பட, எல்லோரிற்கும், கனவு காணும்
உரிமையுண்டு.
ஆனால் வரலாற்றில் பதிவான நிஜங்கள் மறுதலித்தவாறு, மீண்டும் ஒரு விசப்
பரீட்சையில் குதிக்கும்படி அறிவுரை வழங்குவது, இக்காலகட்டத்தில்
பொருத்தப்பாடான விடயமாகத் தோன்றவில்லை.13வது திருத்தச் சட்டத்திலும், அரச
பிரதிநிதியான கவர்னரை (அதிபர்) மீறி காணி, நிதி விவகாரங்களைக் கையாளும்
பூரண சுதந்திரத்தினை தமிழர்கள் அனுபவிக்க முடியாது. ஆனாலும் சிங்களம்
வழங்க விரும்புவது கிராமசபை அல்லது அதற்கு ஒருபடி மேலுள்ள பிரதேச சபை
மட்டுமே.மாகாண சபையில் பங்கெடுத்தாலும், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த
முடியாது. அதற்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுக்க முனைந்தால், சில
இந்தியக் கொம்பனிகளுக்குஅனல் மின் நிலையம் அமைக்க, தமிழர் நிலங்கனைள
பகிந்தளிர்த்து, அவர்களின் வாயையும் அடைத்துவிடும் சிங்களம். அவைதான்
இப்போது நடைபெறுகிறது. வன்னி நிலங்களை விவசாய ஆராட்சிக்கு வழங்கினால்.
இந்திய ஆளும் வர்க்கம் எம்மை திரும்பிக் கூடப் பார்க்காது.

இந்தியா அதிகம் வெருட்டினால், இருக்கவே இருக்கிறது பலம்மிக்க சீன தேசம்.
ஆகவே இந்திய பாதுகாப்பிற்காகவும், பொருளாதார நலனிற்காகவும் இன்னமும் பல
விட்டுக் கொடுப்புக்களை செய்யுமாறு சிலர் வலியுறுத்துகிறார்கள். திலீபனை
இழந்தது போதும். இத்தனை இலட்சம் மக்களையும் இழந்தது போதும். பரஸ்பர நலன்
என்பது ஒருவழிப் பாதையல்ல என்பது இந்திய மத்திய அரசுக்கு, தமிழ்நாடுதான்
எடுத்துக் காட்ட வேண்டும்.
சிங்களக் குடியேற்றத்தை விட, இந்தியா அபகரிக்கும், அபகரிக்க போகும்
தமிழர் நிலங்களும், கடற் பிரதேசங்களும் அதிகமென்பதை இவர்கள் உணர்வார்களா?
சீனா உள்நுழையாமல் இருப்பதற்கு, இன்னமும் பல விட்டுக் கொடுப்புக்கள்
செய்யும்படி இந்தியா எதிர்பார்கின்றதா?
இழந்தது போதும்.

இதயச்சந்திரன்

நன்றி : ஈழமுரசு