Archive for the ‘தமிழ்த்துரோகி’ Category

நாங்கள் மனிதரில்லை!

ஜூன் 22, 2010

நாங்கள் மனிதரில்லை!
பா. உதயகுமார் (நோர்வே)

ஒர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்

எலும்பும் சதையுமாக

எரிந்து கொண்டிருந்தது

முள்ளிவாய்க்கால்.

இறந்த தாயின் முலையில்

குழந்தை பால் குடிக்க

இழுத்து வந்து

நெருப்பு மூட்டினர்

இருளின் நடுவே

சிலுவை தாங்கி

இறைவன் வருவான்

என நிலவைப் பார்த்தோம்

கண்களை மூடி

இது உன் விதி என்றது

எங்களின் வீட்டினுள்

யூதர்கள் நுழைந்தனர்

யேசுவைக் கேட்டனர்

ஆயிரம் ஆயிரம் சிலுவையில்

அவர்களை அறைந்தனர்

அடையாளம் காட்ட யூடாஸ் வந்தான்

மாவீரன் கல்லறையில்

மீண்டும் இரத்தம் வடிய

உயிர்த்திருந்தவர்களை

இன்னெருமுறை

புதைத்தனர்

கனவுகள் உடைந்து

கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது

இரத்தமும் சதையுமாய்

எழுப்பிய சுவருக்குள்

எங்கள் முகங்கள்

எரிந்து கருகின.

முள்ளிவாய்க்கால் முழுமையாக

மூச்சிழந்தது

ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது

அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்

கங்கையில் மிதந்த

பிணங்களைப் போல்

எங்களின் வயல்களில்

பிணங்கள் நீந்தின

எல்லாமே எரிந்து முடிந்தது

மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து

எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க

அங்கு யாரும்

சாட்சிகள் இல்லை

எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர

எஞ்சியிருப்பதற்கு

எங்களிடம் ஒன்றுமில்லை

மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்

கரைந்த படி திரிய

நாறிக் கிடந்தன பிணங்கள்

நாங்கள் மனிதரில்லை என்றே

மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்

புத்தரின் காவியினால்.

தாகம் தீர்த்தது சத்திய சோதனை

எங்களின் குருதியினால்.

மா.கெம்புகுமார். பி,ஏ, பி,எல்,
வழக்குரைஞர்
9245581684

Advertisements

உலகத் தமிழ் மாநாடும் கருணாநிதியின் செம்மொழி மாநாடும்

ஜூன் 21, 2010

தமிழ் கூறும் நல்லுலகு இதுவரை 8 உலக தமிழர் மாநாட்டினைக் கண்டுள்ளது. உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஆகும் இப்போது அதன் தலைவராக இருப்பவர் ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா.

(International Association of Tamil Reasearch) உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக நவம்பர் மாதம் 2009 ம் ஆண்டு தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி இது மரபுக்கு மாறானது. கடந்த 8 உலகத் தமிழர் மாநாடு நடைபெறும் திகதி மற்றும் இடம் போன்றவற்றை உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகமே அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பல்வேறு தமிழ் தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

இது சம்மந்தமாக பல்வேறுவிதமான வாதபிரதிவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து விட்டு 2011 ம் ஆண்டில் வேண்டுமானால் உலகத் தமிழர் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது இரண்டு மாதக் காலத்தில் தமிழ் அறிஞர்களால் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிக்க போதிய நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் காரணம் யாதெனில் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு 2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கின்றார் இந்த 2 மாதக் காலத்தில் தமிழ் பேராசியர்களாலோ அல்லது அறிஞர்களாலோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆய்வுக் கட்டுரைகளை மாநட்டில் சமர்ப்பிக்கவோ தேவையான கால அவகாசம் இல்லை என்பதால். ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விழா அவசரமாக தேவைப்பட்டது. அதற்கு பல்வேறு சுயலாப காரணங்கள் உண்டு அதனை பார்ப்பதற்கு முதல் உலகத் தமிழ் மாநாட்டின் பின்னனி பற்றியும் அதன் பெருமை பற்றியும் ஒரே கட்டுரையில் ஆழமாக பார்க்க முடியாவிட்டாலும் மேலோட்டமாக இக்கட்டுரை வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. 18-07-1981 ல் தனிநாயகம் அடிகளாருக்கு மாட்சி நயப்பு மலர் வெளியிடப்பட்டது அதில் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் தந்தையும் தாயும் தனிநாயகம் அடிகள் என்கிறார். அதுமட்டுமன்றி கலாநிதி சு. வித்தியானந்தன் அருள்திரு தனிநாயகம் நினைவு மலரில் (பக்கம்44) உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகள் என்கிறார். அத்துடன் கலாநிதி கமில்சுவல்லபில் தனிநாயம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஞானத் தந்தை என்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமானது அரசியல் சார்பு கொண்டதாகவோ வர்த்தக நோக்கம் கொண்டதாகவோ இருக்க கூடாது என தொடகத்திலேயே யாப்பிலே குறிப்பிட்டுவிட்டார்கள. ஸ்தாபகர்கள் இல்லாத காலத்தில் கருணாநிதி போன்றோர் இதனை தமதும் தமது குடும்பத்தினதும் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற தீர்க்க தரிசனம் மிக்க பார்வை இருந்ததாலோ என்னவோ? இதுவரை தமிழகத்தை ஆண்ட எல்லாத் முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியுள்ளனர் தமிழின் காவலன் என் அவரது பக்கவாத்தியங்களால் புகழப்படும் கருணாநிதியைத் தவிர இவ்வாறு சொல்வதானது அவர் மீதான கோபம் என கருதிவிட வேண்டாம்.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கின்றேன் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 16-04-1966 ம் ஆண்டு காலை 10.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள துங்கு அப்துல் ரகுமான் அரங்கிலே மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். முதலாவது மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 132 பேராளர்களும் 40 பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு 150 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாநாட்டிற்குப் பின் அவற்றினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியிட்டனர். அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு 03-01-1968 ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் இந்தியாவின் அன்றைய ஜனாதிபதி கலாநிதி ஜாகீர் உசேன் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். இதில் முன்நாள் முதலைமைச்சர்களான கு. காமராசர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உற்பட அப்போதைய தமிழக எதிர்கட்சியினரும் கலந்துக்கொண்டனர். மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்சில் 15-07-1970 அன்று தொடங்கியது. பாரிஸ்சில் நடைப்பெற்றதால் நிறையப்பேர் கலந்துக்கொள்ளவில்லை எனினும் 39 நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர்கள் அதில் கலந்துக்கொண்டனர் அதில் ஒருவர் கலைஞர் கருணாநிதி.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. யாழில் நடைப்பெற்ற மாநாடு பற்றி சற்று விரிவாக பார்ப்பதன் வாயிலாக சிங்கள பேரினவாத அரசு அந்தக் காலம் தொடக்கம் எவ்வாறு தமிழ் மக்களை அடக்கியாள முற்பட்டிருக்கின்றாhகள்; என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அப்போது இலங்கையில் பிரதமர் ஆட்சியே இருந்தது. அன்றைய பிதமராக திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவி வகித்தார். யாழ் மண்ணில் மாநாட்டை நடத்த சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் அங்கே மாநாட்டினை நடத்தினால் இலங்கைத் தமிழர்களின் மொழித்திறன் நாகரீகம் பண்பாடு போன்றவற்றினை மாநாட்டிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்துக்கொள்வர்கள் என்ற பயம் காரணமாகவும் அரசியல் ரீதியாக தமிழர்கள் பலம் பெறக் கூடும் என்பது போன்ற காரணங்களால் இலங்கை பேரினவாத அரசு இலங்கையில் நடத்த அனுமதியளிக்கவில்லை. இறுதியாக திருமதி. சிறிமாமோவோ பண்டாரநாயக்காவிற்கு அரசியல் நெருக்கடி வராது என உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே பேரினவாத அரசு அனுமதியளித்தது. மாநாட்டிற்கு வருகை தரவிண்ணப்பித்தவர்களில் ஏராளமானோருக்கு வீசா வழங்குவதை இழுத்தடித்த போதும் 20 நாடுகளில் இருந்து 197 பேராளர்கள் கலந்தக்கொண்டனர்.

இலங்கை அரசு சார்பில் ஒருவர் கூட பங்குபற்றவுமில்லை எதுவித உதவியினையும் செய்யவில்லை. நடந்து முடிந்த 8 மாநாட்டிலும் அரச ஆதரவுமின்றி அரச தரப்பின் பங்கு பங்குபற்றலும் இல்லாமல் நடந்த ஓரேயொரு மாநாடு 4வது மாநாடு மட்டுமே தமிழர் ஆராய்ச்சிக் கழகமே தனித்து நின்று நான்காவது மாநாட்டினை நடத்தியது. 03-01-1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அருட்திரு. தனிநாயகம் அடிகள் தொடங்கி வைத்தார் உலகத் தமிழர் மாநாடானது தமிழரசுக்கட்சியின் மாநாடென்றும் அரச எதிப்புச் சக்திகளின் மாநாடு என்றும் அன்றைய அமைச்சராக இருந்த தமிழரான சூரியகுமார் மற்றும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றோர் பிரச்சாரம் செய்தும் கூட யாழ் மண்ணில் உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி களிப்பில் யாழ்நகரையே அலங்கரித்தனர். நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது; நடக்க இருக்கும் விபரீதம் பேரினவாத அரசிற்கும் தமிழர்களாய் பிறந்து அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளையும் தவிர வேறு யாருக்குத் தெரியும்? மாநாடு நடப்பதற்கு எல்லா வழிகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்தியும் அது வெற்றிகரமாக நடந்ததை சகித்துக்கொள்ள முடியாத பேரினவாத அரசின் பணிப்பின் பேரில் அந்தக் கோரச்சம்பவம நடந்தேறியது. மாநாட்டிற்கு வந்தவர்களை வழியனுப்புவதற்கான ஏற்பாடுகள் 10 ம் திகதி செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. இதற்கென அரங்கு பதிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் மைதானத்தின் வாசல் பூட்டப்பட்டிருந்தது.

யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடமிருந்து கடிதம் கொண்டுவந்தால் மட்டுமே வாசலை திறக்க முடியுமென கிளிபிள்ளையைப் போல் காவலாளி பதில் சொல்லி விட்டார். அல்பிரட் துரையப்பாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலையில் இதனால் வீரசிங்கம் மண்டபம் முன்னால் அவசரமாக மேடை ஒன்று அமைக்கப்பட்டது. 50000 மக்கள் கூட்டம் குழுமியிருந்தது பேராசிரியா நெய்னார் முகமது உரையாற்றிக்கொண்டிருந்தார். இரவு 8 மணிக்கு போலிஸ் உதவி அத்தியட்சகர் போலிஸ் பட்டாளத்தோடு வந்து மக்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார். குழப்பம் செய்ய வேண்டாம் அமைதியான முறையிலேயே தாம் கூட்டம் கூட்டுவதாக மக்கள் கேட்ட உடன் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தி மக்கள் மீது தடியடி தாக்குதலை போலீசார் நடத்தியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் கூட்டம் கலைந்தோடியதில் ஏராளமானோர் காயப்பட்டனர். துப்பாக்கி பிரயோகத்த்தால் மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி 7 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர் 2 பேர் நசுங்கிச் செத்தனர். நிராயுதபாணிகளான அப்பாவி பொது மக்களை கொன்றொழித்த காவற் துறை அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது.

மக்களே போலீசாரை தாக்கினர் என திருமதி. சிறிமா பாராளுமன்றத்தல் அறிவித்ததுடன் இறந்தவர்களுக்காக மரியாதை நிமித்தமேனும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஐந்தாவது மாநாடு ஆபிரிக்காவிலே நடாத்த திட்டமிட்டிருந்த போது அன்றைய தமிழக முதலைமைச்சர் எம். ஜி. ஆர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக மாவட்டங்களில் ஒன்றான மதுரையில் 04-01-1981 அன்று அன்றைய தமிழக ஆளுனர் ஜனாப். சாதிக் அலி தொடங்கிவைத்தார். 20 நாடுகளில் இருந்து 800 பேராளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி 5வது மாநாட்டிலே கலந்து கொண்டிருந்தார். தமிழகத்தின் பலம் பொருந்திய முதலமைச்சராக இருந்த எம். ஜி. ஆர் உலகத் தமிழர் மாநாட்டை தமிழத்திலே நடத்தும் படி உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைக் கேட்டாரே தவிர கருணாநிதி செய்தது போல உலகத் தமிழ மாநாடு நடைபெறும் என தன்னிச்சையாக அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆறாவது மாநாடு மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசியாவில் 19-11-1987 அன்று மலேசிய பிரதம மந்திரி மகாதீர் அகமது தொடங்கிவைத்தார். இதில் தமிழ் நாட்டில் இருந்து கலந்து கொள்ள சென்றவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

6வது மாநாட்டிலே 2000 பேராளர்கள் கலந்து கொண்டனர் 250 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 650 பக்கம் கொண்ட விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. எழாவது மாநடு மொரீஷியஸ் தீவின் தலைநகரான லூயிலில் 04-12-1989 அன்று நடைப்பெற்றது. 7வது மாநாட்டில் மொரீஷியஸ் பிரதமர் அனுரூட் ஜெகந்நாத் கலந்து கொண்டார். 28 நாடுகளில் இருந்து 300 பேராளர்கள் கலந்தக் கொண்டனர். 7வது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து 81 கட்டுரைகள் தனித் தனித் நூலாக 8வது மாநாட்டிலே வெளியிடப்பட்டது. எட்டாவது மாநாடு தமிழக நகரங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தல் 01-01-1995 அன்று நடைப்பெற்றது. 8வது மாநாட்டில் அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர் நாராயணன் மற்றும் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆகியோர் கலந்துக் கொண்டார். 8வது மாநாடு தமிழகத்தின் அன்றைய முதலைமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையில் நடந்தது. ஆக மொத்தத்தில் தமிழத்தை ஆண்ட எல்லா முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடாத்தியுள்ளனர் கலைஞர் கருணாநிதியைத் தவிர. இந்த நிலையிலேயே உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி.

கடந்த வருடம் மே மாதம் 18 ம் திகதி வரையும் ஈழத்திலே தமிழர்கள் கொள்ளப்பட்டும் இலட்சசக் கணக்கான மக்கள் புனர்வாழ்வு நிலையம் என்ற பெயரிலே சிறைப்படுத்தியும் வைத்திருக்கும் போது கருணாநிதி வெளியிட்ட தன்னிச்சையான அறிவிப்பானது தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் எல்லோரையும் கோபப்படுத்தியது. ஈழத்திலே நடந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் இருந்தும் அதனைச செய்யாது விட்டதுடன் தமிழ் மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, ஆளும் கட்சியாக இருந்துக்கொண்டே மனிதச் சங்கிலி போராட்டம் பதவி விலகல், பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என்ற நீண்ட நாடகத்தின் உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் என்றும் நாடகமாடியதுடன் ஈழத்திலே போர் நிறுத்தப்பட்டுவிட்டது என மிகப் பெரிய பொய்யைச் சொன்னதுடன் அவருக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து சாதாரண தமிழக மக்களை நம்ப வைத்தவர் உலகத் தமிழ் மாநாட்டினை நடாத்த முனைந்ததானது அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் மட்டுமே நன்மை பயக்குமே தவிர தமிழுக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லையென்ற கருத்துருவாக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே இருக்கின்றது. அவரது அரசியல் மற்றும் பண பலத்தின் மூலம் அவரது செம்மொழி மாநாட்டினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கலாம்.

தமிழையும் தமிழர்களையும் அழிக்க ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்ததுடன் மட்டுமன்றி அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட இத்தாலிய நாட்டை தாயகமாக கொண்ட சோனியாவே தொடங்கியும் வைக்கலாம.; இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராக கூட கலந்;து கொள்ளலாம். இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூட தமிழ் மொழியின் சிறப்பு பற்றி செம்மொழி மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தமிழ் சமூகமே செத்த வீட்டில் இருக்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் கலைஞரின் செமமொழி மாகாநாட்டை விமர்சித்துள்ளது. ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய வரலாற்று துரோகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இந்த வரலாற்று துரோகத்தை மறைக்கவும் தனது காலத்திலும் உலகத் தமிழர் மாநாட்டினை தாம் நடத்தியதாக வரலாற்றிலே இடம் பிடிக்கவும் தனது வாரிசு அரசிலுக்கு தமிழ் உலகத்தின் அங்கீகாரத்திற்மே அவசரம் அவசரமாக உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுமென தன்னிச்சையாக அறிவித்தார். அது முடியாது போகவே செமமொழி மாநாட்டினை நடத்துவதென அறிவித்து வேலைகள் மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கின்றார். உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (International Association of Tamil Reasearch) துணைத் தலைவராக இருக்கும் கலாநிதி வா.செ.குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி செமமொழி மாநாட்டை நடத்த முயல்கிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க செயற்படுகிறார்கள். தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி “தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என பி.பி.சி தமிழோசைக்கு பேட்டியளித்திருந்தார். அதன் பின்னர் பங்குபற்ற போவதாக ஊடகங்களுக்கு சொல்லியுள்ளார். செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அவர் எவ்வாறான முடிவை எடுக்கப் போகிறார் எனத் தமிழ் உலகம் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளது.

ஏலவே உலகத் தமிழர் மாநாட்டிற்கு சென்ற பேராசிரியார் கார்த்திகேசு சிவத்தம்பியை பார்வதியம்மாவை போல புலி ஆதரவாளர் என விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டதை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு அறிவுரை கூறும் அருகதை எமக்கு இல்லை. எனினும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தாழ்மையோடும் அதே வேளை உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கலாம் என கருதுகிறேன். கடந்த 30-12-09 அன்று முரசொலி நாளிதழில் செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்வோரின் விபரம் வெளிவந்தது. செம்மொழி மாநாடு நடத்தும் அவர்களுக்கு வெப்சைட் ஈ;-மெயில் தபால் போன்ற சொற்களுக்கு இருக்கும் அழகிய தமிழ் சொற்கள் தெரியாது போலும். அதனை விட்டுவிடுவோம் நாடு தெரியாதோர் 4 பேர் விண்ணப்பித்ததாக இருக்கிறது. எந்த நாடு என்றே தெரியாதவர்களின் விண்ணப்பங்களைக் கூட ஏற்றுக்கொண்டிருக்கின்றார்களா? யாரும் கலந்தக்கொள்ளலாம் எதனையும் எழுதி அனுப்பலாம் என தமிழகம் எங்கும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது ஏ.ஆர் ரகுமானை வைத்து செம்மொழி மாநாட்டிற்கு பாட்டிற்கு இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.

தமிழ் கூறும் நல்லுலகின் பேராளர்களும் மாமேதைகளும் தமிழ் ஆராய்சியாளர்களும் சேர்ந்து நடாத்தும் உலகத் தமிழர் மாநாடு எங்கே? கருணநிதியின் குடும்பக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் பெயர் ஊர் தெரியாதவர்கள் பங்கு கொள்ளும் செம்மொழி மாநாடு எங்கே? தமிழகத்தைச் சில தமிழ் கல்வியாளர்களும் ஈழத் தமிழ் ஆதரவாளாகளும் செம்மொழி மாநாட்டை புறக்கனித்துள்ள இவ் வேளையில் உலகெங்குமுள்ள தமிழ் உதிரக்கொடி உறவுகளும் ஈழப் போரில் ஆகுதியாகிப் போன நம் உறவுகளுக்காக புறக்கணிக்க வேண்டும். கருணாநிதி ஈழத் தமிழருக்கு செய்த வரலாற்று துரோகத்தை மறக்காமல் இருப்போம். செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் பாட சில மிகவும் பிரபலமான திரையுலக கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவரது பக்கவாத்தியங்களும் இருக்கின்றார்கள். தமிழகத்தில் செம்மொழி மாநாட்டை புறக்கனிக்கும் தமிழக உறவுகளோடு உலகெங்குமுள்ள உறவுகளே கைகோருங்கள். தான் செய்த வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முற்படும் கருணாநிதிக்கு சாரளம் வீசுகின்றவர்களை புலம்பெயர் நாடுகளில் நடைபெரும் வைபவங்களுக்கு அழைக்காமலிக்க திடசங்கட்பம் பூணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வன்னி போர் வெற்றியினைக் கொண்டாட சின்னத் திரையுலகினரை இலங்கை அரசிற்கு ஒழுங்கு செய்து கொடுத்த தன்னை அன்பு அறிவிப்பாளர் என அழைத்துக் கொள்ளும் பி.எச. அப்துல்ஹமீதே செம்மொழி மாநாட்டினை தொகுத்து வழங்க போகிறார். தமிழை வளாப்பதாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதி; மற்றும் அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழால் அவர்களே வளர்கின்றார்கள் என்பதே யதார்த்தமாகும். தமிழகத்தின் மேடைகளில தமிழில் முழங்கி பணம் உழைக்கும் அப்துல் ஹமீத்திடம் ஈழப்போர் பற்றி சின்னத்திரை நடிகர்கள் கேட்டபோது அது ஒரு மூளையில் நடக்கிறது நாம் ஒரு மூளையில் இருக்கின்றோம் என்று சாவசாதரரணமாக பதில் அளித்துள்ளாh.; இவ்வாறானவாகளையும் செம்மொழி மாநாட்டிலே பங்கெடுப்பவாகளையும் உலகத் தமிழர்கள் ஓரம் கட்டும் படச்சத்தில் இனிவரும் காலங்களில் இவ்வாறான பச்சோந்திகளை தலையெடுக்காமல் தடுக்கமுடியும்.

தென்னாசியவிலிருந்து இளையவன்

http://wp.me/pEclf-8G

ஈழத்தமிழனின் செங்குருதியில் நடக்கும் செம்மொழி மாநாட்டின் அபத்தம்…

ஜூன் 21, 2010

புகழ்மிக்க வீட்டின் தாய் ஒருவளுக்கு இரண்டு பிள்ளைகள்… மூத்த பிள்ளையின் வாழ்க்கை மிகுந்த செழிப்புடன் வளமாக இருக்கிறது. வசதிகளுடன் தன்னிறைவோடு வாழ்கிறான். இளைய மகன் வாழ்வதற்கு வழி இல்லாமல், பசிக்கு உணவில்லமால், தங்க இடமில்லமால், சொல்லிக்கொள்ள ஊரில்லாமல், புலம் பெயர்ந்து வாழ்கிறான் .

உலகின் அனைத்து துன்பங்களையும் தன்னகத்தே குத்தகைக்கு எடுத்தவனை போல் எப்போதும் அழுகிறான். அழுது அழுது பூத்து போன கண்களில் தன் அண்ணனிடம் உதவி கேட்கிறான்.

அண்ணனுக்கோ அவனின் குரல்கள் காதில் விழுவாதாக இல்லை… உல்லாசங்களில் சல்லாபிக்கிறான். கேளிக்கைகளில் திளைக்கிறான். தனது ரத்தம் துன்பபடுவதை துச்சமென கருதுகிறான்.

ஒரு காலத்தில் ஊரே மெச்சிய பாரம்பரிய வீடு. அந்த வீட்டின் வாசற்கதவு யாவர்க்கும் திறந்தே கிடக்கும். அந்த வீட்டை யார் எவர் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடுவார்கள். உண்டு உறங்கி செல்ல யாவர்க்கும் அனுமதி உண்டு.
அன்பின் மழையில் முற்றம் ஈரமாகவே இருக்கும். அடுத்தவருக்காய் வரிந்து கட்டி கொண்டு அந்த வீட்டின் உருப்படிகள் வந்தாரை எல்லாம் வாழவைத்தது.

இந்த வீட்டின் அத்தனை புகழும், தாயானவள் அனைவருக்கும் அற நெறிகளை சொல்லி வளர்த்ததனால் வந்தது. உயர் பண்புகளை பிள்ளைகளுக்கு பயிற்றுவித்ததினால் வந்தது. காலம் ஒரு பிள்ளையை மடியிலும், மறு பிள்ளையை தரையிலும் கிடத்தியது. வசதி, மூத்த பிள்ளையை வெற்று நியாயம் பேச வைத்தது. இளையவனை புழுவென பார்க்க நினைத்தது.

தாயின் மார்பில் தவழ்ந்த குழந்தை, ஒரு வேலை தண்ணீருக்கும் அல்லல் படுவதை பார்க்க முடியாமல் வேதனை படுகிறாள். ஈன்றெடுத்த தாயின் மனது தத்தளித்தது. புகழால் நிரம்பிய தாயின் பெருமை, வலிகளால் வெதும்புகிறது.மூத்த பிள்ளைக்கு மகன் பிறந்து அவன் திருமண வயதில் இருக்க… தன் இளைய மகனுக்கோ இன்னும் வழியாகவில்லை, வாழ்க்கையும் அமையவில்லை…

தன் இளைய மகன் திருமணமாகாது, சமுகத்தின் அங்கீகாரத்திற்கு போராடிகொண்டிருக்கும் அவலத்தை காண சகியாத தாய் விம்மி அழுகிறாள். மூத்த மகன் தன் தாயின் கண்ணீரை துடைக்க, அவளை மகிழ்விக்க, அவளுக்கு 60- ம் கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்கிறான்.

இந்த அபத்தம் வேறு எந்த தாய்க்கும் அல்ல… நம் தமிழ் தாய்க்கு தான்… அந்த அபத்தம் வேறு எதுவும் அல்ல… உலக தமிழ் செம்மொழி மாநாடு தான். இளையமகன் வேறு யாரும் அல்ல… நம் ஈழ தமிழ் மகன் தான்…

…திரு

www.thirupakkangal.blogspot.com

திராவிடம் வீழ்த்திய தமிழ் தேசியம்-கட்டுரை 1

ஜூன் 21, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.மாநாடு துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநாட்டை ஊதிப்பெருக்கி கூட்டம் சேர்க்கும் வேலையும் துவங்கி விட்டது,மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்ட தொகை இப்போது 600 கோடியாக உயர்ந்து விட்டது,மாநாடு முடிவதற்குள் இன்னும் எத்தனை கோடிகளை தாண்டுமோ? அதில் எத்தனை கோடிகள் உண்மையில் மாநாட்டிற்கு செலவளிக்கப்படுமோ அது உலகத் தமிழினத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த வெளியிடப்படாத ரகசியம் .

மாநாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்திற்கும மேலான குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகள கோவை நகரம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்குவதற்காக ஏற்பாடுகள்.இதற்காக மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்த அதிகாரிகள்.ஊடகவியலாளர்களுக்கு பயணத்தில் துவங்கி வசதியான தங்கும் இடங்கள் என முழுமையான ராஜ உபசரிப்பு. ஏனெனில் மாநாட்டின் வெற்றியே ஊடகங்களை நம்பித்தான் உள்ளது..இத்தனைக்கும்மேலாக மாநாட்டின் மைய நோக்க பாடல் என்ற பெயரில புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரஹமானின் இசையில் மேற்கத்திய நடனங்களுடன் தமிழ் செம்மொழியாம் என்ற ஒரு பாப் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அந்த பெயருக்கு சில தமிழர்களும் பாடலில் சௌடிராஸடிரா ,தெலுங்கர்கள் மலையாளிகள் என பலரும் பாடுகிறார்கள்.இதை இயக்கியது கௌதம் மேனன் என்ற( ஆங்கில படங்களை உல்டா செய்யும் )மலையாள இயக்குநர்.இந்த பாடல் தமிழகத்தின் சந்துககளிலும் தெருக்களிலும் மூலைமுடுக்குகளிலும் ஒலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இப்பாடலைக்கேட்க இந்த பிறவியில் கொடுத்து வைத்தவர்கள் ஆகிறார்கள்.

மாநாட்டிற்கு வரும் உலகத் தமிழர்களுக்கு அருசுவை உணவு வேண்டாமா?அதற்கு சங்க தமிழ் வரலாற்றில் உள்ளது போல் உணவு வகைகளும் தயாராகின்றன.இதை விட மனனர் காலத்திலுள்ளது போல் தேனும் தினைமாவும் போன்று இனிப்பு வகைகள் வேறு. இதைத் தயாரிக்க தனியார் இனிப்பு தயாரிக்கும் வணிக நிறுவனத்துடன் கோடி ரூபாய் மதிப்புகளில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது .சங்க கால இனிப்புகளை பற்றி ஆராய அந்த தனியார் கம்பெனி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒனறையும் நியமித்துள்ளது.அக்குழுவின் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் அறிவிக்கின்றன.

மாநாடு துவங்கும் பல மாதங்களுக்கு முன்னரே ஜால்ராக்களின் சத்தம் காதைப்பிளக்க துவங்கி விட்டது.கலைஞர் மானசீகமாக நேசிக்கும் இந்த ஜால்ராக்களில் பல வகைகள உள்ளன. கருணாநிதி எப்போதுமே ஜால்ராக்களையும் துதிபாடிகளையும் அவரது குடும்பத்தைப்போல மானசீகமாக நேசிப்பவர் அல்லவா?.அது அவரது தனிப்பட்ட உளவியல். இந்த உளவியலை சற்று ஆராய்வோம். முதியவர்களும் குழந்தைகளும் ஒரே மாதிரிதான் உளவியல் கொண்டிருப்பார்கள் அதாவது தன்னை இடைவிடாமல் யாராவது புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கும் .முதியவர்களும் அதே மாதிரி உளவியலைத்தான் கொண்டிருப்பர் எனறு உளவியல் நிபுணர்கள கூறுவார்கள். ஏறக்குறைய ஓய்வெடுக்க வேண்டிய வயதையும் தாண்டி உள்ள கலைஞர் அப்படிப்பட்ட மனநிலையில் உச்சத்தில்தான் இருந்து வருகிறார். எப்போதுமே தன்னை இராஜ ராஜ சோழனாக பாவித்துக்கொள்ளும் அவர் எல்லா விளம்பரங்களையும் அதே போல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார. தனி நபர் துதியிலும் சுயமோகத்திலும் அவர் தன்னை சோழ பரம்பரையினராக சித்தரித்துக்கொள்வதும உடமை வர்ககங்களின் மாட்சிமை தாங்கிய மன்னர் மரபுகளிலும்,நிலவுடமை மரபுகளிலும் ஊறித்திளைத்தபடி நாள்தோறும் நாளிதழ்களில் அளிக்கும் விளம்பரங்களே அதற்கு சான்று .மாநாட்டு முதல் அறிவிப்பு விளம்பரமே இப்படித்தான் துவங்கியது,செம்மொழியாம் தமிழ்த்தாய்க்கு முத்தமிழ் தலைமகனாம் கலைஞர்எடுக்கும் ஒரு விழா .உலகத் தமிழர் கூடும் விழா.நாள்தோறும் ஒளவையார் வாயிலாகவோ என்றோ கம்பன் வாயிலாகவோ என்று துவங்கி எம் தமிழ் எம்மொழி எம்மான் கலைஞர் தம்மால் சிறப்புற்ற செம்மொழி வாழிய வாழியவே என்று தான் முடிகின்றன.திட்டமிட்டே அரசு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு மேலும உதாரணங்கள் வேண்டுவோர்தமிழகத்தின் நகரங்களில் திரும்பும் இடமெல்லாம் இந்த விளம்பரங்களில்தான் முட்டிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம். இந்த செம்மொழி மாநாடும் அதற்காக நடத்தப்படுகிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.கருணாநிதியின் அரசியல் எதிரிகளின் கணிப்பு இப்படித்தான் உள்ளது.(கருணாநிதியை பொறுத்தவரை விமர்சித்தாலே எதிரிதான் .ஏனெனில் பாராட்டுபவன்தான் நண்பன் விமர்சித்தால் எதிரி என்ற ஓட்டுக்கட்சிகளின் பண்பாட்டில் பல பத்தாண்டுகளாக ஊறித்திளைத்தவர் அல்லவா? ஆனால் அதையும் தாண்டி பல நோக்கங்கள் இந்த மாநாட்டிற்கு உள்ளன.முதலில் எதற்காக எந்த சூழ்நிலையில் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது?

15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போதிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.தமிழ் மாநாட்டின் அதிகாரப்பூர்வமான அமைப்பான உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் கருணாநிதியின் மாநாட்டை அங்கீகரிக்க மறுத்ததோடு அதைப்புறக்கணிககப்போவதாக அறிவித்தும் உடனே தமிழ் செம்மொழி மாநாடு என்று மாற்றிக்கொண்டு ஏன் நடத்த துடிக்கிறார்.அது சரி தமிழ் மீது இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை இப்போது ஏன்? காரணம் அனைவரும் அறிந்ததுதான் .அவர் ஈழத்தமிழருக்கு செய்த மறக்கவோ மன்னிக்கவோ முடியாத துரோகத்தை மறைப்பதற்குத்தான்.

ராஜ பக்சே அரசு புலிகள் மீது போர் தொடங்கியதிலிருந்தே இந்தியாதான் போரை திட்டமிட்டு வழிநடத்தியது.இது கருணாநிதியின் தலைமையிலான தமிழக அரசின் உதவியோ ஒத்துழைப்போ இன்றி சாத்தியமே இல்லை.இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன்வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் கலைஞர் இந்தியஅரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால்தான் வந்தது.

கருணாநிதியின் திசை திருப்பும் முயற்சிகளையும் அடக்குமுறைகளையும் மீறி போர் நிறுத்த கோரிக்கை வலுவடைந்தபோதும் தன்னெழுச்சியாக ஒரே சமயத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்த போதும் அதை அடக்குவதற்குஅவர் பல தந்திரங்களை கையாண்டார். போராட்டங்கள் எல்லை மீறிச் சென்ற போது அவரும் ஈழப்போர் நிறுத்ததிற்கு ஆதரவளிப்பதாகக் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்.அதே சமயத்தில் இதில் கலந்து கொள்ளாத காங்கிரசாரை யாரும் அம்பலப்படுத்தாமல் பார்த்துக்கொண்டார்.அந்த நேரத்தில் ஈழப்போர் நிறுத்தப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகவும் அதே சமயத்தில் போர் குணமிக்கதாகவும் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் செல்லத்துவங்கின.காங்கிரஸ் தலைவர்கள் துரோகிகள் என குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் வழக்கறிஞர்களினால் தாக்கப்பட்டனர். அதுவும் முத்துகுமாரின் தியாக மரணத்தின்போது அவர் எழுதிய கடிதமும் கருணாநிதியை முழுமையாகஅம்பலப்படுத்தின.இதனால் வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கு ஈவு இரக்கமின்றி நசுக்கிய விதம் இதுவரை வரலாறு காணாத சாணக்கியத்தனம் ஆகும் .வழக்கறிஞர்கள் எங்கு அதிகாரமுள்ளவர்களாக உணருகின்றனரோ அங்கேயே நீதிமனறத்திலேயே போலீசை அத்து மீறி நுழையச் செய்து கொடூரமாக நசுக்கினார்.போராட்டங்களின் தீவிரம் அதிகரித்த போது போரின் உச்சகட்ட நாட்களில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரில் இருபுறமும் மனைவியரும் குளிரூட்டும் சாதனங்களும் இருக்க,கடற்கரையில்அண்ணா சமாதிக்கருகே போய் படுத்துக்கொண்டார்.தனது உண்ணாவிரதத்தால் போர் நிறத்தம் ஏற்பட்டதாக சிதம்பரம்கூறினார் என்று படுகேவலமான பொய்யை கூறினார்.இப்படி கூறப்பட்டதும் அது ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அதைவிடபெரிய அதிர்ச்சி.

அந்த நிலையிலும் போரை நிறுத்தாவிட்டால் கருணாநிதி காங்கிரஸ அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வார் தனது பதவியை துறப்பார் என்றெல்லாம் தமிழ தேசிய இயக்கங்களினால் அப்பாவித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கருணாநிதி ஈழம்மலருவதற்கு உத்திரவாதம் தந்தால் பதவி விலகுவேன் என்று அவர்களது முகத்தில் திருப்பி அடித்தார்.முதலாவதாகஅப்படிப்பட்ட தியாகம் செய்வாரென்று எந்த வித அரசியல் பார்வை இல்லாதவர்களால் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.தனது வாரிசுகளின் பதவிகளுக்காக எந்த அளவுக்கும் செல்வார் என்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. போர் முடிந்ததும் அழகிரியின் அமைச்சர் பதவிக்காக நேரில் டெல்லி சென்றார்.ஆனால் ஈழப்போரை நிறுத்துவதற்கு எங்கும் செல்லவில்லை.உடல் நலமில்லை என்பது காரணமாக காட்டப்பட்டது.தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில ¢டெல்லியில் சென்று பதவிபிச்சைகேட்டு மன்றாடியதைக் கண்டு தமிழக தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த காரிய வாதம் மிகவும் கொடூரமானதாக வெளிபபடுத்தியது என்னவெனில் தமிழர்களை ஒழிக்க இந்தியா இலங்கை அரசுக்கு பயிற்சி கொடுத்த போது தமிழகத்தில் எழுச்சி வராமல் பார்த்து கொண்டதற்கும் ஒத்துழைப்பு கொடுத்தார் அந்த ஒத்துழைப்பிற்கான சன்மானம்தான் அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி.இதனால் இவர் போலியாக படம் காட்டி வந்த உலகத் தமிழினத் தலைவர் பிம்பம் சுக்கு நூறாகியது .

இந்த சேதமடைந்த அம்பலப்பட்ட பிம்பத்தை தான் சாவதற்குள் நிமிர்த்தி விடவேண்டும் என்பதற்காகத்தான் பல கோடி செலவில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.அது மட்டுமின்றி இன்னொரு இலவச இணைப்பாக அவர் தமிழர்களுக்கு தரக்கூடிய பரிசு அவர்வாரிசுகளை அதிகாரப்பூர்வமாக மேடையில் ஏற்றி உலகத் தமிழ் அறிஞர்களிடம் (தமிழக மக்கள் எப்போதே ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர என்பதற்கு வேறு விடயம்) ஏற்றுக் கொள்ள வைப்பதற்குத்தான்.

ஆனால் எவ்வளவோ குலை அறுத்து உயிர் பறிக்கும் துரோகங்கள் கருணாநிதியால் இழைக்கப்பட்டிருந்தாலும் தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாக இம்மாநாட்டின் மூலமாக தமிழுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்பதை சிலர் நம்புகின்றனர்.அவர்கள் தமிழகத்தில் தமிழரின் தமிழின் நிலையை அறிய சில விபரங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.தமிழன் வாழ்ந்தால் தான் தமிழ் வாழும் .ஆனால் தமிழன் வாழ்வதற்கு எந்த வழியும் இல்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.இந்தியாவின் அதிகமான வேலையில்லாதோர் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.பணியில் இருப்போர் எண்ணிக்கை 1971-1981ல் 2.58விழுக்காடாக இருந்தது 1981-1991ல் 1.83ஆக குறைந்து விட்டது.ஆட்குறைப்பு அடிப்படையிலான வளர்ச்சி (jobless growth)என்ற உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து. இந்த நிலை ஏற்பட்டதை பார்க்கலாம்.1996-1997ல் 28.இலட்சத்து 27 ஆயிரம் பேர் வேலை இல்லாதோர் எண்ணிக்கை.இப்போது 75இலட்சத்தை தாண்டி விட்டது.

இந்தியாவிலேயே பன்னாட்டுக்கம்பெனிகளும் தேசங்கடந்த தொழிற்கழகங்களும் அமைதியாக தொழில் நடத்தக்கூடிய இடமாக தமிழகம் இருப்பதால் இன்னும் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை கூடிய விரைவில் 1 கோடியை எட்டி விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.ஏனெனில் இந்த பன்னாட்டுக்கம்பெனிகள் உற்பத்தித் துறையை அல்ல வேலை வாய்ப்பு குறைவான சேவைத்துறைகளையே வளர்த்துள்ளன. (விவசாயத்திலும் உற்பத்தித் துறையிலும் வேலை வாய்ப்பானது 1971-1981 2,58 விழுக்காடாக இருந்தது 1981-91 டல 1.83 ஆக குறைந்து விட்டது) இது இப்படி இருக்க முதலில் அடிப்படையை பரிசீலிப்போம்.தமிழகத்தில்தாய்மொழிக்கல்வி என்பது ஏழை மக்களில் மிகவும் ஏழை மக்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில்தான் உள்ளது.நடுத்தர வர்க்கத்தின் சொல்லாடலில் சொல்ல வேண்டுமானால் போக்கத்தவர் படிப்பதுதான் தாய்வழிக் கல்வி.தமிழ் மொழியில் படித்தவர்கள் சேரிவாசிகள்அல்லது ஒன்றுக்கும் வழியில்லாதவர்கள் என்ற நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினரின் பார்வைதான் அரசின் அதிகாரவர்ககத்தின் பார்வையாகவே உள்ளது.

தமிழ்மொழியில் கல்வி கற்றவர்கள் ,தமிழ் பட்டதாரிகள் தமிழ புலவர்கள் யாருக்கும் எந்த வேலை வாய்ப்பும் இல்லை.இதில் தஞ்சையில் வேலை இல்லாத தமிழ் புலவர்களின் சங்கமே செயல் பட்டு கொண்டிருக்கிறது.தமிழப் பட்டதாரிகள்வேலைகிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.இதில் தமிழிலில் முனைவர் பட்டம் படித்தவர்களின்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.ஆசிரியர் வேலை வாய்ப்பைத் தவிர அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை.கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கும் மிகுந்த முக்கியத்துவத்தின் காரணமாக கோமாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர்.

தலை நகரில் எப்போதுமே தமிழுக்கு இடமிருந்ததில்லை.சிங்காரச் சென்னையில் மட்டுமின்றி தமிழக நகரங்களில் துவங்கி குக்கிராமங்கள் வரை மொழிக்கலப்பின்றி தூய தமிழிலில் பேசினால் வேற்று கிரகப் பிராணிகளாக அவர்கள் பார்க்கப்படுவர்.இப்போதெல்லாம் எந்த தஞ்சைத் தமிழனும் மதுரைத் தமிழனும் சாப்பிடும்போது சோறு வேண்டும் என்று கேட்பதில்லை ரைஸ் போடுங்கள் என்றுதான் கேட்கிறான்.திராவிட இயக்கங்களின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் அரசு ஆட்சி மொழியாக தமிழைக் கொண்டு வர இனனும் முடியவில்லை.மருத்துவம, பொறியியல் துவங்கி எந்த தொழில்சார்ந்த கல்வியிலும் தமிழிலில் இல்லை.அப்படி தமிழில் தேர்வு எழுதினால் அங்கீகரிக்கப்படுவதில்லை.தஞ்சையில் மருத்துவர் ஒருவரின் தேர்வு அங்கீகரிக்க மறுககப்பட்டதால் வழக்குத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

தமிழர் பண்பாடோ சாகும் தருவாயில்தான் தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.வேட்டி கட்டுவதற்கும் தமிழில் பேசுவதற்கும் , தமிழர் உணவு வகைகளை சாப்பிடுவதற்கும் பலநிறுவனங்களில் அனுமதி இல்லை. அரசு அலுவலகங்களில் போலீஸ் நிலையத்தில்,அரசு மருத்துவமனைகளில் வேட்டி உடுத்தி செல்லும் சாதாரண மககள இழிவான பிறவிகளாக நடத்தப்படும் விதமே இதற்கு சான்று.

தமிழர் பண்பாடு தமிழ் ஊடகங்களில் படும் பாடு சொல்லி மாளாது.இதற்கு தனி நூலே எழுதலாம் .பெயர்தான் தமிழ் ஊடகம் தவிர மற்ற எல்லாமும் ஆங்கிலத்தில்தான்.முழுமையாக ஆங்கில கலப்புடன் எப்போதாவது தமிழுடன் தான் நிகழ்ச்சிகள் அமைகின்றன.அரைகுறை உடைகளுடன் வந்து நின்று நிகழ்ச்சி வருணனையாளர்கள் இல்லாத தமிழ் தொலைக்காட்சிகள் காண்பது அரிது.கும்பல் கும்பலாக தொப்புள் ஆட்டம் இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை.சினிமாதான் 99 விழுக்காடு,.மீதி ஒரு விழுக்காடு ஏதாவது செய்தி நிகழ்ச்சியாக வரும்.வெள்ளைத் தோல் சிவப்பழகுதான் தொலைக்காட்சிகளில் வருவதற்கான தகுதி. கருத்ததமிழர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கிராமத்தினருக்கும் இங்கு இடமில்லை.சுருக்கமாக கூறினால் உழைத்து நசிவடைந்த அழுக்கு முகங்களுக்கு இங்கு இடமில்லை.தொலைக்காட்சிகளின் இச்சீரழிவு ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு வித்திட்டவர்களும் முன்னோடிகளும்உலகத்தமிழனத் தலைவர்களின் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சிகளதான் .இன்றும் தமிழனத் தலைவர் அவரே ரசித்து பெயர் சூட்டிய மானாட மயிலாட என்ற முழுமையான ஆபாச நிகழ்ச்சியை பார்க்காமல் தவறவிட்டால் வருந்துவாராம்.

இன்னொரு பக்கம் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் எப்போதே நாட்டை விட்டுபோனாலும் இன்னும் ஆட்சியாளர்களில் மூளைகளில் ஆங்கிலம்தான் ஆட்சி செய்கிறது .தமிழர் மனமோ ஆங்கில மோகம்தான் இயல்பாக உள்ளது. தமிழகத்தின் சோழ சக்ரவர்த்தியின் ஆட்சியில் வாரிசுகளுக்கு பட்டாபிசேகமும் முடிசூட்டுவிழவிற்கும் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது என்பது இப்போது அனைத்து குடிமக்களுக்கும் அறிந்த ஒன்று. ஒரு புறம் ஈழ நெருப்பு அணையாமல் கொதித்து எரிந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.மீதித் தமிழர்கள் வதைமுகாம்களில் மரணத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழுக்கும் தமிழருக்கும் வாழவுமில்லை வளமுமில்லை.இப்படி யதார்த்தத்தில் இல்லாத மரியாதையை தமிழுக்கு கனவுலகத்தின் மூலம் கட்டியமைக்க முயற்சிக்கிறார்கள். இவர்களே கனவுலகமான திரையுலயகலிருந்து வந்த இவர்களிடம் இருந்து வேறு எதையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?.

திருக்குவளையிலிருந்து வெறும் துண்டோடு வந்தவர் எப்படி ஆசியாவின் 23 ஆவது பணக்காரர் ஆனார்?திராவிட சித்தாந்தங்களினால் தமிழ் தேசியம் எப்படி சீர்குலைநது தோல்வி அடைந்தது? அடுத்த கட்டுரைகளில் பயணிப்போம்.

http://wp.me/pEclf-8v

சிவனும், விஷ்ணுவும், புத்தனும், அல்லாவும், ஏசுவும் எங்கே போன…

ஜனவரி 4, 2010

தலைப்பு : தமிழீழம் குறித்து தமிழகத்தில் ஓட்டெடுப்பு மற்றும் இலங்கை பிரச்சினை திட்டமிட்டு திசை திருப்பபடுகிறது – வைகோ

தலையங்கம் :

வைகோ சொன்னதை போல கடந்த ஆண்டு , எந்த இனத்திற்கும் ஏற்படாத அல்லது இனி எந்த இனத்திற்கும் ஏற்பட போகாத பேரழிவு தமிழ் இனத்திற்கு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டே தொடங்கிய தொடர் போரில் போராளிகளை கொல்கிறோம் என்று கொத்துகொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

போராளிகள் வீழ்ந்தது இந்திய சீன மற்றும் இலங்கையின் போர் துரோக நடவடிக்கையின் காரணமாகத்தானே ஒழிய வேறல்ல இலங்கை பெற்றது வெட்கப்படத்தக்க வெற்றி. போரில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையும் வேதியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களையும் கொண்டு கோது கொத்தாக தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது.

அந்த தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பிரயோகிக்க அசிங்கம் பிடித்த இரண்டு அரசாங்கங்களும் உறுதுணையாக இருந்தது (ஒன்று இந்தியா மற்றொண்டு சீனா) ஒரு அரசாங்கம் கண்டும் காணாமல் இருபது போல உள்ளே வெளியே நாடகம் ஆடியது (தமிழக அரசாங்கம்).உலகில் தமிழினத்தை தவிர எந்த இனமும் இப்படி கொல்ல்லபட்டிருக்க முடியாது.

போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் இத்துணை நாளும் மக்களை காத்தவர்கள் என்பதை உலகிற்கு வெளிகாட்டிய ஆண்டு 2009.

உலகின் மிகபெரிய அவலமாக போர் குற்றம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆண்டும் 2009.

இந்த நேரத்தில் ஈழ நேசன் இல் வந்த கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டுவது நல்லது என்று நினைக்கிறன்.

அந்த கட்டுரை வெள்ளை கொடி ஏந்தி நடந்து வந்த நடேசன் புலித்தேவன் மற்றும் ரமேஷ் முதலான காயம்பட்ட, சரணடைய வந்த போராளிகள் மற்றும் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை ராணுவம் கொன்றது பற்றியது.

மேலும் அந்த முழு கட்டுரை இங்கே,

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார்

சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி (செயற்கை கோள்) தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. – சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் படி நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 – 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (400 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா – என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் ”சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள். "

நண்பர்களே எத்துனை கொடுமைகளை நம் சக தமிழ் பேசும் தோழர்கள் பெற்றுள்ளார்கள். புத்தாண்டை நாம் எந்த சந்தோசத்தில் வரவேற்பது. இன்னும் இரண்டு லக்ஷம் பேர் திறந்த வெளி சிறையில், பிள்ளையின் ரொட்டிக்காக கற்பை விலை கேட்கும் சிங்கள இன வெறியனின் கட்டுப்பாட்டில் நமது தாய், தங்கைகள் உறவுகள்.

போதுமடா கொடுமைகள். இறைவன் என்று ஒருவன் இருப்பது நிச்சயமானால் , இயற்கையின் நியதி உண்மையானால் சிங்களவனின் இலங்கை அழியும். அழியவேண்டும். அதற்க்கு துணை போன இந்திய அரசாங்கம் அதற்க்கான தண்டனையை பெறும் அல்லது பெறவேண்டும் . உளமறிந்து துரோகம் செய்தவர்கள் ஊரறிய அழியவேண்டும் அல்லது அழிவார்கள்.

இது நடந்தால் சிவனும், விஷ்ணுவும், புத்தனும், அல்லாவும், ஏசுவும் இருக்கிறார்கள் அல்லதென்றால் அனைத்தும் கடவுள்களும் வேசிக்கு பிறந்த போலிகளே.

செம்மொழி மாநாடு – முள்வேலி முகாமுக்கு அழைப்பு உண்டா?

திசெம்பர் 29, 2009

எண்ணத்தைச் சொல்லுகிறேன்: செம்மொழி மாநாடு – முள்வேலி முகாமுக்கு அழைப்பு உணடா?

‘தலைச்சன் பிள்ளை தவறிழைத்தால் தலைமுறையே தலைகுனியும்’ என்றுமூத்தவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு குடும்பத்தின் தலைமகன்தான், அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகிறவன். அவனது பிழையால் ஏற்படுகிற பழியை ஒட்டுமொத்த குடும்பமும் தாங்கவேண்டியிருக்கும். தவறிழைத்தவன்

துரியோதனன். ஆனால், ஒட்டு மொத்த கௌரவர்களும் அந்தப் பழியைத் தாங்கவேண்டியிருந்தது. ‘தமிழ்த் தலைமகன்’ விருதுபெற்ற உற்சாகத்திலிருக்கிற தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இதெல்லாம் தெரியாததல்ல.

‘இங்கே இருக்கும் சிலர் என் மீது வெறுப்பை காட்டினாலும்…’ என்று அந்த விருது வழங்கும் விழாவிலும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. ஓர் உண்மையை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இங்கேயிருக்கும் எவரும் அவர் மீது வெறுப்பைக் காட்டவில்லை. ‘‘தலைச்சன் பிள்ளையே தவறிழைக்கிறதே… இளைய பிள்ளைகள் கொல்லப்படுவதைத் தடுக்க தவறிவிட்டதே…. கொல்ல உதவியவர்களுடன் ‘கை’ கோத்துக்கொண்டதே’’ என்கிற கோபத்தோடுதான் கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே தவிர, அவர் மீது எவருக்கும் தனிப்பட்ட வெறுப்போ,

விரோதமோ இல்லை. வேண்டாத வெறுப்புக்கும் நியாயமான கோபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா? முத்தமிழறிஞரே முடிவு செய்து கொள்ளட்டும்.

கருணாநிதி அளவுக்கு தமிழில் யாராலும் வசனம் எழுத முடியாது…கருணாநிதிபோல் எவராலும் கவிதை எழுத முடியாது… கருணாநிதிபோல் மேடையில் வீசும் மெல்லிய பூங்காற்றாக, கன்னித்தமிழ் உரையால் நம் உள்ளத்தை எவராலும் களவாட முடியாது… என்பதெல்லாம் உண்மையாகவேகூட இருக்கட்டும். அதற்காக

எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் கொன்று குவிக்கப்பட்டபோது முதல்வர் நாற்காலியில் வீற்றிருந்த நீங்கள், என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நாங்கள் கேட்கவே கூடாதா-? தமிழின படுகொலைக்குத் துணைபோன காங்கிரஸின் தயவில் பதவி சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா- என்று

கோபத்துடன் எழுப்பப்படும் கேள்வியில் என்ன தவறு இருக்கிறது-?

கருணாநிதி அவர்களே! எங்களுடைய விமர்சனங்கள், எங்களுடைய குற்றச்சாட்டுகள் எந்த உள்நோக்கமும் இல்லாதவை, நேர்மையானவை, நியாயமானவை. எங்களை நீங்கள் நம்பலாம். இன்னும் சொல்லப்போனால் எங்களைத்தான் நீங்கள் நம்பவேண்டும்.‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுவிடக் கூடாது.

விருது கொடுப்பவர்கள் & விழா நடத்துபவர்கள் & போற்றிப் பாடுபவர்கள் & போஸ்டர் போடுபவர்கள் & இவர்களை நம்பியே நீங்கள் நடைபோட முடியுமா?நியாயமான விமர்சனங்கள் கடுமையாகத்தான் இருக்கும். என்றாலும், அதுதான் உண்மை என்பதை உணர்ந்து, செய்த தவற்றை சரி செய்ய முயன்றீர்கள் என்றால்,

ஓய்வு பெறும்முன் இன்னும் மரியாதை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதைச் செய்யாமல், துதிபாடல்களில்தான் உங்களது மதிப்பும் மரியாதையும் அடங்கியிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய அரசியல் வீழ்ச்சியின் இறுதிக்கட்டம் தொடங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

இலக்கியத்தைப் பழுதறக் கற்ற குமரி அனந்தன், நீங்கள் ‘தமிழ்த் தலைமகன்’ விருது பெற்ற விழாவில் என்ன பேசுகிறார்? ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரைப் பற்றி கம்பன் பாடிவிட்டான்’’ என்கிறார் இலக்கியச் செல்வர், ‘திருக்குவளை கண்விழித்து நோக்க’ என்று கம்பன் சொன்னதாக அனந்தன் சொல்ல… முகமலர்ச்சியுடன் நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். என்ன செய்வது-? இப்படியெல்லாம் வாழ்த்தப்பட வேண்டுமென்ற உங்கள் விருப்பத்தை மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

‘‘தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிதுபாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ’’

என்று சொன்ன கம்பனை அனந்தன் திரித்திருக்கவும் கூடாது, நீங்கள் அதை ரசித்திருக்கவும் கூடாது. நம் இஷ்டத்துக்கு நூல்விட்டு, கம்பனை வள்ளுவனை& இளங்கோவையெல்லாம் காற்றில் பறக்கவிடலாமா? அந்த விழாவில் உங்களை உச்சிக்குளிரச் செய்த இன்னொரு இலக்கியவாதி அருமை அண்ணன் வைரமுத்து,

‘உலக மக்கள் தொகையில் தமிழுக்கு 17வது இடம், ஆட்சி மொழியில் 14ல் ஓர் இடம், ஜனத்தொகையில்¢ 6வது இடம், செம்மொழி ஆக்கிய பின் 5வது இடம்’ என்றெல்லாம் புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்த கவிப்பேரரசுவின் கண்களில், ‘தன் இனம் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டும் காணாததுபோல் கண்களை

மூடிக்கொண்டதில் உலக அளவில் முதலிடம்’ என்கிற அப்பட்டமான உண்மை மட்டும் படாமலேயே போனது
எப்படி?

எது எப்படியோ… தமிழ்த் தலைமகன் ஆகிவிட்ட நீங்கள்தான் தலைச்சன் பிள்ளை. நீங்கள் எந்தத் தவறு செய்தாலும் அதற்கான பழி எங்கள் மீதும் சேர்ந்துதான் விழும். ஒரு லட்சம் சொந்தங்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் கைகட்டி நின்றுகொண்டிருந்ததற்கான பழியையும், பாவத்தையும் ஒட்டுமொத்த தமிழகமும்

சேர்ந்தே சுமக்கிறது. ‘நடந்த இனப்படுகொலையை தடுக்காமல் கருணாநிதி கைகட்டிக்கொண்டிருந்தார்’ என்று சொல்லவில்லை உலகம்… ‘தமிழகம் கையைக்கட்டிக் கொண்டிருந்தது’ என்று எங்களையும் சேர்த்துதான்
சொல்கிறது. இதைப்பற்றிய கவலையே இல்லாமல், ‘தமிழ்த் தலைமகன்’ விருதை அவர்கள் தருகிறார்கள், நீங்கள் பெறுகிறீர்கள். ‘உலகில் எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ, அங்கிருந்தெல்லாம் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரவேண்டும்’ என்று அழைக்கிறீர்கள். அதைச் சற்றே மாற்றி ‘உலகில் எங்கெல்லாம் தமிழன் உயிருடன் இருக்கிறானோ, அங்கிருந்தெல்லாம் வரவேண்டும்’ என்று வேண்டுமானால் அழைப்பு விடுங்கள். நீங்களே விரும்பினாலும் முள்ளி வாய்க்காலில் இருந்து மருந்துக்காவது ஒரு தமிழன் வரமுடியுமா, மாநாட்டுக்கு? அதனால், நீங்கள் இப்படி அழைப்பு விடுவதுதான் யதார்த்தமாகவும் இருக்கும், பொருத்தமாகவும் இருக்கும்.

நீங்கள் மனம் வைத்தால், ஒப்பிட இயலாத ஓர் உயர்ந்த சாதனையையும் படைக்க முடியும். உங்களுடைய ராஜதந்திரத்தையும் அறிவாற்றலையும் பரந்த அரசியல் தொடர்பையும் பயன்படுத்தி முயற்சி செய்வீர்கள் என்றால், முள்வேலி முகாமிலிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களில், தமிழ்ப் புலமை கொண்டோரை கோவை மாநாட்டுக்கு வரவழைக்க உங்களால்¢ இயலக்கூடும். அதைவிட பெரிய சாதனை வேறெதுவும் இருக்கமுடியாது. அந்த 3 லட்சம் பேரில் தமிழ்ப் புலமை படைத்தவர்கள் இல்லாதிருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?- அவர்களது வாழ்வுரிமையே பறிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்குமா, கிடைக்காதா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருவது அபத்தம் என்பது உங்களுக்கும் தெரியும். அவர்களுக்கு, குறைந்தபட்சம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும்

உரிமையாவது கிடைக்கட்டுமே.

‘தமிழராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உரிமை உண்டு’ என்று மீண்டும் மீண்டும் உள்ளத்தை உருக்குகிற மாதிரி அறிக்கைவிடுகிற உங்களால் இது முடியும் என்றே நான் நினைக்கிறேன். வேண்டுமானால், ‘மாநாடு முடிந்தவுடன் அவர்களை முள்வேலி முகாமுக்குத் திருப்பி அனுப்பிவிடுகிறோம்’ என்று எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் இலங்கையுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். கச்சச் தீவு ஒப்பந்தத்தைவிட மோசமானதாகவா அது இருந்து விடப்போகிறது?

நண்பர்களே! உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக, இந்தப் பகுதியில் சென்றவாரம் இடம்பெற்ற கட்டுரையில் உலகத் தமிழறிஞர்களுக்கு இரண்டு வேண்டுகோள் வைத்திருந்தேன். மாநாட்டில் ஒரு அனுதாபத் தீர்மானமும், ஓர் கண்டன தீர்மானமும் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அது. அந்தத்

தீர்மானங்கள் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல தவறிவிட்டதாக நண்பர்கள் வட்டத்திலிருந்து பலமுனைத் தாக்குதல் தொடர்கிறது.

‘‘தமிழனை டாஸ்மாக்குக்கும், தமிழறிஞர்களை கோவைக்கும் அழைக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம் போடச் சொல்கிறீர்களா?’’ என்று அண்ணன் சுப.வீரபாண்டியனின் தோழர் ஒருவர் கேட்டபோது, தம் பங்குக்கு அவர் ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது தெரிந்தது. 133 அதிகாரங்களில் சமூகத்தையே புரட்டிப்போட முயன்ற வள்ளுவர் கோட்டத்திலிருந்து 133 வது மீட்டரிலேயே ஒன்றுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டிய போது, வேதனையாக இருந்தது. அதில் ஒரு கடை, சென்னை& நுங்கம்பாக்கம்& வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே இருப்பதை நேரில் போய்ப் பார்த்தோம். டாஸ்மாக் அடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் விழுந்து கிடக்கும் தமிழக அரசின் வருவாய் ஆதாரங்களால், பயணிகள் கொஞ்சம் ஒதுங்கியே நிற்கிறார்கள்.

‘வள்ளுவருக்கு 133 அடி உயர சிலை, வள்ளுவர் கோட்டத்திற்கு அருகிலேயே ஒன்றுக்கு இரண்டு டாஸ்மாக்’ என்பது எந்த ஊர் நியாயம்-? அப்படியொரு கண்டனத் தீர்மானம் போடவேண்டியதுகூட அவசியம்தான். ஆனால், நான் குறிப்பிட்ட தீர்மானங்கள் வேறு.
1. தமிழர்கள் என்பதாலேயே தமிழ்மொழி பேசியதாலேயே கொல்லப்பட்ட ஒரு லட்சம் சொந்தங்களுக்காக ஓர் அனுதாபத் தீர்மானம்.
2. தமிழரைக் கொல்ல ஆயுதம் கொடுத்த இந்தியா முதலான அனைத்து நாடுகளையும் கண்டித்து ஒரு கண்டன தீர்மானம். இந்த இரண்டும் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

கருணாநிதி இப்படி-யெல்லாம் தீர்மானம் நிறைவேற்ற சம்மதிப்பாரா?- என்கிற கேள்வி நியாயமானது. ஈழப்பிரச்னையில் காங்கிரஸுடன் சேர்ந்து கள்ள மௌனம் சாதித்தவர் அவர். இவர் அடிக்கிற மாதிரி அடித்தார். அவர்கள் அழுவது மாதிரி நடித்தார்கள் அதனால்தான் இவர் தந்திமேல் தந்தி கொடுத்தும் நந்தி மாதிரி

அசையாமல் நின்றுகொண்டிருந்தது காங்கிரஸ். இவரும் அவர்களது நிழலிருந்து நகர மறுத்தார். நூறு பேர் கொல்லப்பட்டபோதே தடுத்திருக்கலாம் தடுக்கவில்லை. ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோதும் வேடிக்கைதான் பார்த்தார். பத்தாயிரம் பேர் கொல்லப்பட்ட போதும் எந்த ரியாக்ஷனும் இல்லை. அதில் மரண எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டது. இவர் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.

‘அந்த தீராப் பழியை மூடிமறைக்கத்தான் செம்மொழி மாநாடு நடத்துகிறார்’ என்ற குற்றச்சாட்டு வலுவானது. எத்தனை மாநாடு நடத்தினாலும் தமிழ் மண்ணுக்காகப் போராடி செத்த ஒரு லட்சம் சொந்தங்களை அவரால் உயிர்த்தெழ வைக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மேலே சொன்ன இரு தீர்மானங்களையும் மாநாட்டில் நிறைவேற்றி தமிழையும் தமிழனையும் பற்றிய அக்கறை தனக்கேயுரியது என்று, வழக்கம்போல் காட்ட கருணாநிதி முயலலாம்.

எண்பதுகளில் நடந்த ‘டெஸோ’ (தமிழீழ ஆதரவாளர் இயக்கம்) மாநாட்டில் உறுதிமொழியேற்பு நிகழ்வை தானே நடத்துவதாகக் கேட்டு வாங்கிக் கொண்டவர் கருணாநிதி. இப்போதும் இப்படி இரண்டு தீர்மானங்களை கொண்டு வரலாம் என்று யாராவது யோசனை தெரிவித்தால், ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ பாணியில் தீர்மானத்தை தானே முன்மொழிந்து, தானே வழிமொழிவதென்று கருணாநிதி முடிவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கருணாநிதியின் இந்த இன்னொரு பக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும் தமிழறிஞர்கள். அதிரடியாக ஒரு ஸ்டன்ட் எடுப்பதும், தடாலடியாக ‘யு’ டர்ன் அடிப்பதும் அவருக்குப் புதிதல்ல. ‘ஜனநாயகக் கொலையாளி இந்திராவே திரும்பிப்போ’ என்ற முழக்கம் ஓய்வதற்குள், ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று தடாலடியாக அறிவித்தவர்தான் கருணாநிதி. அதே மாதிரி ஒரு மாற்றத்தை செம்மொழி மாநாடு ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

எனவே, இந்த இரண்டு தீர்மானங்களையும் கருணாநிதிக்கு முன்னதாகவே இ மெயில் வாயிலாக அனுப்பி வைக்க தமிழறிஞர்கள் முன்வரவேண்டும். வருவார்களா-?

புகழெந்தி தங்கராஜ்

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

திசெம்பர் 29, 2009

30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது.

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ‘விகடன்’ குழுமத்தின் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகிரங்க கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

*தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!*

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை ‘முள் கிரீடம்’ தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

‘நீ இன்றி நான் இல்லை’ படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ”கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்” என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்…

”போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!” என்று கோவில்பட்டியிலும்…

”உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக் கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்” என்று கோவையிலும் ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது

நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான். சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது… எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப்

பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ”எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்… அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல்

பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்” என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு! 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் ‘தமிழனுக்கு ஒரு

நாடு, தனித் தமிழீழ நாடு’ என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். இரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை இராஜினாமா செய்து… பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து… என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!

எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ”இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்” என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் ‘நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது’ என்று திரிந்தன.

”கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால்

தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை” என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

”இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு… தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?” என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே? இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! ‘இந்தியா படை எடுக்க வேண்டும்’, ‘ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்’ என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால்

இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், ”அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை.”

பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ”மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்” என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.

பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, ‘சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்’ என்று இலங்கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பொஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான்,கொத்துக்குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, ‘உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக்கூடாதா?” என்றால், ‘என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்” என்று தட்டிக்கழித்தீர்கள். ”போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது” என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது ‘மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்’ என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.

நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!

இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?

”மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து.”

தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?

”இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து”.

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?

”ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.”

உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? ‘தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்’ என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? ‘நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்’ என்று கோத்தபய ராஜபக்ச சொன்ன பிறகும், காங்கிரசைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்? ”நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்?” என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய ‘தமிழின அடிமை’ அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லாண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் ‘விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்’ என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.

தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லிவிடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் திகதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.

”பஞ்சாப் பொஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்” என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே… அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச்சரத்தில் நெருடுகிறது…

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் ‘நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்’ என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

*அன்புடன்,
ஈர விறகாக இருக்க முடியாத,
அரசியல் அறியாத் தமிழன்!*

உயிர் பறிக்கப்பட்ட சடலங்கள்-எலும்புக்கூ டுகள்மீது 9-வது உலகத்தமிழ் மாநாடு

ஒக்ரோபர் 21, 2009

ஈழத்தில் பூவும் பிஞ்சும் கருக்கப்பட்ட வாசம், உலகின் மூக்கில் நாறுகிறது. விருட்சங்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட பின்னரும், சல்லி வேர்களைத் தோண்டி அழிக்கும் மனித வேட்டைகள் தொடருகின்றன. சிங்கள வெறிச் சிப்பாய்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு இரை கொள்வதை போராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். முகாம்களிலிருந்து பிரிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், 27 ஆயிரம் இளைஞர்கள் எந்த சிங்கத்தின் குகைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளோடு மூன்று லட்சம் தமிழர்கள் வெற்று வெளியை நோக்கி வெறித்த, நிலைகுத்திய பார்வையுடன் துக்கித்து நிற்கிறார்கள். இந்திய வல்லாதிக்க அரசின் துணையோடு இலங்கை இனவெறிப்பாசிஸ அரசு, மறுபடி மறுபடி இரையெடுக்கப்பாய்கிறது. உலகத் தமிழர்களின் சிவந்த கண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன.Image

இங்குள்ள ஒருவர் – அவர் வேறு யாரோ அல்ல தமிழக முதல்வர் “இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தி அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளைக் குறைசொல்ல வேண்டாம்” என்று அறிக்கை தருகிறார். (22.09.2009) மனிதம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க இந்திய நடுவணரசும் எதுவும் செய்யவில்லை; கடிதம் எழுதியே காலம் கழிக்கும் தமிழக அரசும் நேர்மையாய் நடக்கவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று நீர் உரிமைகள் பறிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் வறுமைப் பள்ளத்துக்குள் விரட்டப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டும் வாழ்வாதாராம் பறிக்கப்படுவது அன்றாடக் காட்சியாகி விட்டது.Image

வாழ்வியல் நெருக்கடிகளால் வீதிக்கு வரும் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகள் கொதிநிலை அடைந்து கொண்டிருக்கிறபோது, தமிழர்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் கருணாநிதி கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டினை அறிவித்திருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தன்னல நோக்கமின்றி, வேறு என்ன? ஒரு இனத்தை அழிக்கத் துணை செய்தவர் அந்த இனம் பேசும் மொழி வளர்ச்சிக்கு உலகத்தமிழ் மாநாடு என்பது ஏமாற்று நாடகம். சேக்ஷ்பியரின் ‘மேக்பெத் நாடகத்தில்” தன்னுடைய சித்தப்பாவான ‘டங்கன்’ என்ற மன்னனை, ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து கொலை செய்கிறாள் மேக்பெத். அந்தக் கொலை நினைப்பே தொடரும் வேதனையாகி தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு ஆளாகிறார்கள்.  தூக்கத்தில் நடந்துக் கொண்டே மேக்பெத் சொல்கிறாள்; “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் வைத்துக் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” அதுபோல் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாய் நடத்தி – தன்மேல் படிந்திருக்கிற ரத்தக் கறையை உலகத்தின் பாராட்டு மழையில் கழுவிட நினைக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு தமிழறிஞராய் உள்ளிழுக்கப்பட்டு, வரவேற்பு அறிக்கை வாசிக்கிறார்கள். தன் குருதியிலேயே கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன “விழா மோகம்” எனும் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளவும்; தமிழருக்கும், தமிழுக்கும் நேரும் எத்தகைய இழிவும் தனக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்கவும் நடக்கப் போகிறது இந்த மாநாடு.Image

தமிழ்மக்களே …..
தமிழ் உணர்வாளர்களே …
தமிழ்க் கலை, இலக்கியவாதிகளே….
தமிழகத் தமிழறிஞர்களே…
அயலகத் தமிழறிஞர்களே…
மனச்சான்று நிறைந்த மாமனிதர்களே….

இந்த ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம். ஒவ்வொரு பகுதியிலும் ஒன்று திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்புவோம்.

உலகத் தமிழ் மாநாட்டைப் பார்க்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைக் கேட்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைப் பேசாதீர்

தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு
29, செய்தியாளர்கள் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை – 600 041

அமைப்பாளர்கள்

கவிஞர்கள் இன்குலாப், சுகிர்தராணி, ஜெயபாஸ்கரன், கவிபாஸ்கர், மதியரசன், மணிகண்டன், எழுத்தாளர்கள் பேராசிரியர் சரசுவதி, இராசேந்திர சோழன், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பொறியாளர் ஏழுமலை, சூரியதீபன், சே.சுகுமார் (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) இசைக்கும் மணி ஜெ.சஹாங்கீர், இளமாறன்.

ஒருங்கிணைப்பாளர்கள்

சூரியதீபன் – 94440 901086, பொன்.ஏழுமலை – 94445 24492

நன்றி : அதிகாலை

உங்களின் தலைகள் உருளாமல், என் தலைவனின் த லை சாயாது….!

ஒக்ரோபர் 21, 2009

உங்களின் தலைகள் உருளாமல், என் தலைவனின் தலை சாயாது….!

8 பேர் பாதுகாப்பில் எம் தலைவன் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறான்.

சிங்களனை பாய்ந்து கிழிக்க…

எம் தலைவன் புலியாய்,புயலாய், காற்றாய்
விரைவில் வெளியில் வருவான்.

இந்திய, சிங்கள பொய் மூட்டைகளை பஞ்சு பஞ்சாக்க…
எம் தலைவன் காற்றாய்,தீயாய் ,
பூமியில் இடியாய் இறங்குவான்.

அடேய்! பச்சைப் பொய்க் கூட்டமே!
ஈழத்தாய்களின் கண்ணீர், தாய்ப் பால், இரத்தம்,சாபம் ….
எல்லாம் ஒன்றாய் திரண்டு தான் பிரபாகரனாக மாறி இருக்கிறது.

உங்களின் தலைகளை , இலங்கை மண்ணில் உருளச் செய்யாமல் என் தலைவன்
சாகமாட்டான்.
ஆம், துரோகிகளே!
நண்பர்களே!
தோழர்களர்களே!
வீரர்களே!
வெறும் வெற்றுச் சோத்துப் பண்டாரங்களே!
ஏய், உலகத் தமிழ்ச் சாதியே!
இந்த செய்தியை உலக தமிழர் வரலாற்றில் இப்போதே குறித்து வைத்துக் கொள்!
ஈழம் விடுதலை அடைந்த பிறகே எம் தலைவனின் தலை சாயும்…!

http://www.nerudal.com/nerudal.10598.html

Muthamizh
Chennai

கலைஞரின் மற்றொரு நாடகமா?

ஒக்ரோபர் 20, 2009

அண்மையில் 13 அக் 2009 அன்று வெளியாகியிருந்த இரண்டு செய்திகள் தாம் எனக்கு ‘இந்தக் கட்டுரை’யினை எழுதத் தூண்டியது.

அதில் ஒன்று, தமிழக நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆருண் என்பவர் கூறிய தகவல்.

"இந்திய ஊடகங்கள் தெரிவிப்பது போன்று தமிழர்கள் அவல நிலையில் இல்லை" என்றும், வடக்கு இடம்பெயர் முகாம்களை நேரில் பார்வையிட்டதின் மூலமாகத் தாம் இந்த உண்மையைக்(!) கண்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றையது ஐ.நா சபையின் ஸ்ரீலங்கா தூதுவர் ‘பாலித்த கோஹன்ன’ கூறியதாக வந்துள்ள செய்தி. அதில், வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்களில் சுமார் 12,500 பேர் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் 10,000 பேர்வரை இன்னும் இனங்காணப்படாதிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கும் இவர், இந்தப் புலித் தொடர்பாளர்களனைவரும் அழிக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ கூடும் என்றும் கோடிகாட்டியுள்ளார். இருபத்தேழு ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்டிவைத்த பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்காவண்ணம் இவ்வாறு செயல்படுவது அவசியம் என்றும் கருத்துரைத்திருக்கிறார்.

gr_with_indian_delegationபாலித்த கோஹன்னவின் கூற்றினைப் படித்தபோது எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது படித்த ‘கண்ணன்’ கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

‘மகா பாரத’ப் போரில் தர்மத்தின் பக்கம் துணைநின்ற ‘கண்ணன’து பாலப்பருவத்து விளையாட்டுகளையும், வீரப்பிரதாபங்களையும் கூறும் அந்தக்கால ‘அற்புதக் கதைகள்’ இவை எனலாம்.

இதில், கண்ணன் தன் தாய்க்கு எட்டாவது பிள்ளை எனவும், அந்த ‘எட்டாவது’ பிள்ளையால் ,தன் உயிருக்கும் அரசுக்கும் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அப்பிள்ளையின் மாமனும், தேவகியின் அண்ணனுமான கம்ஸன், தன் தங்கையின் குடும்பத்தையே சிறையிலிட்டு அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கொன்றதாயும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஏழு குழந்தைகள் பிறந்ததும் கொல்லப்பட எட்டாவதான ‘கண்ணன்’ சேடிப் பெண் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அதற்குப்பதிலாக வேறொரு குழந்தை வைக்கப்படுகிறது. ஆனால், இதனை அறியாத ‘கம்ஸனின்’ ஆட்கள் அதனைக் கொன்று நிம்மதியடைகிறார்கள்.

ஆனால்,காலப்போகில் ‘கண்ணன்’ தப்பிவிட்டசெய்தி அறிந்து மீண்டும் ‘மரணபயம்’ தொற்றிக்கொள்ள, அந்நாட்டில் கண்ணனது வயதுள்ள அத்தனை குழந்தைகளையும் கண்டுபிடித்துக் கொல்லுமாறு உத்தரவு இடப்படுகிறது. என்றாலும் இத்தனையையும் கடந்து, ‘கண்ணன்’ நந்தகோபனது இடத்தில் யசோதையால் வளர்க்கப்பட்டு முடிவில் கம்ஸனைக் கொன்றதாகவும், அவனே பின்னர் கீதையின் நாயகனாக, பாண்டவர்க்கு ‘அம்பின் முனை’ வைக்கும் இடங்கூடத தரமாட்டேன் எனக்கூறிய கௌரவர்களை வீழ்த்தவும் தர்மம் தழைக்கவும் ‘பார்த்த சாரதி’யாய் பணிசெய்ததாயும் மஹாபாரதம் குறிப்பிடுகிறது.பாலித்த கோஹன்னவின் நிகழ்காலச் செய்திக்கும், கம்ஸனது இதிகாசச் செயல்களுக்கும் அதிகவேறுபாடில்லை என்பதைச் சிந்திக்கும் திறன்படைத்தவர்கள் அறிவார்கள்.

அதே சமயத்தில், அதே தினம் வெளியாகியிருந்த ஆருண் அளித்த தகவல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தீபாவளி இந்த நேரத்தில், இந்தியர்கள் யாவரும் ‘கண்ணனை’ப் போற்றி அவன் வழி நடக்க உறுதி பூணும் சமயமல்லவா ?

ஆனால் நடைமுறையோ வேறாகவல்லவோ இருக்கிறது.

ஒரு பக்கத்தில் கண்ணனைப் போற்றுகிறார்கள், மற்றொரு புறம் கம்ஸனுக்கு ஆதரவு தருகிறார்கள்.

வடிவேலு தன் நகைச்சுவையில் குறிப்பிடுவது போன்று இதுவும் ‘கண்ணைக்கட்டுகிற’ சமாச்சாரம் போலும்.

கலைஞரின் மற்றொரு நாடகமா?

இந்தியாவின் தூதுக்குழு என்னும் பேரில், தமிழக முதல்வரின் நெறியாள்கையில் இலங்கை சென்று அங்கு வாடும் தமிழீழ மக்களைப் பார்த்துவிட்டு வரச்சென்றவர்கள் இனி அடுத்து என்னசெய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி .

சிங்கள அரசின் சீற்றத்துக்கு ஆளாகி, மனிதாபிமானமற்ற வகையில் அடிப்படை வசதிகளைத்தானும் நிறைவேற்ற முயலாத முகாம்கள் என்னும் ‘சிறைக் கூடங்களில்’ வாடும் மக்களைப் பார்த்துவிட்டு வந்ததால் தாம் உண்மையைப் புரிந்து கொண்டதாக அரசுக்குச் சார்பாக; ஆருண் அறிக்கை விடுகிறாரென்றால், இவரது அறிக்கையும், பாலித்தவின் பேச்சும் தற்செயலானதா அல்லது முன்பே திட்டமிட்டவாறு ‘காய்கள்’ நகர்த்தப்படுகின்றனவா என்னும் சந்தேகம் பிறர் உள்ளங்களில் ஏற்படுமாயின், அதில் தப்பேதுமில்லையே!

சென்றவருடப் பிற்பகுதியில்……

வன்னிப் பிரதேசத்தில் போர் தீவிரமடைந்திருந்த சமயத்தில், ‘தமிழினத் தலைவர்’ என்னும் பேரால் இறும்பூதெய்தும் தமிழக முதல்வர்… இலங்கையில் சிங்கள அரசு நிகழ்த்தும் மனிதாபிமானமற்ற போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதுவிடின், தமிழ் நாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறப்பார்கள் என்று ‘பராசக்தி’யாய் முழக்கமிட்டார்.

ஆனால், நடந்தது என்ன?

ஈழத்தில் தமிழர்களது கட்டுப்பாட்டில் இருந்த மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஆகிய பகுதிகள்யாவும், இந்திய அரசின் ஆதரவோடும், சர்வதேசங்களின் ஆயுதங்களோடும்; மனித உயிர்களை மதியாத வெறியோடு முன்னேறிய சிங்களப் படைகளிடம் வீழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழகம் கொந்தளித்தது.

ஆனால் கருணாநிதியோ , தனது பெயரின் முதல் மூன்று எழுத்தில் தன் மூச்சை நிறுத்திச் செயல்பட உறுதி பூண்டார் !

இதனால், பிரணாப் முகர்ஜி, மேனன்… போன்றோர் அடித்த ‘அந்தர் பல்டி’ களுக்கெல்லாம் ஆமாம் போட்டார். அவர்கள் கூறிய செயதிகளுக்கெல்லாம் ‘புதிய தொல்காப்பிய விளக்கம்’ போல் புதுமை விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர்களது இனமானப் போராட்டத்தின் குரல் வளையைச் சிங்கள ராணுவம் தனது இரசயனக் குண்டுகளால் நெரித்துக் கொண்டிருந்த நேரத்தில், மெரீனா கடற்கரையில், உலகமே அதுவரையில் கேட்டிராத மூன்று மணி நேர உண்ணா நிலையினைத் தனது குடும்பத் தொலைக்காட்சிகளின் துணையோடு அரங்கேற்றிக் கொண்டிருந்தார் !

அவர் அதனை நிறைவு செய்து தனது கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுக்கச் சென்ற சமயத்தில்…. ஈழத்தின் பல்லாயிரம் உயிர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டிருந்தது ‘கம்ஸ வம்ஸ’ப் படை !

இந்தக் கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் அசைபோட்டுப் பார்க்கையில்….. இன்று, தமிழக முதல்வர், மத்திய அரசின் ஆசியோடு தமிழீழ மண்ணுக்கு அனுப்பிவைத்த தூதுக் குழு, உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் சென்றார்களா ?

வட திசை சென்று ‘கனக விசயர்’ தலைமீது கல் ஏற்றிக் கண்ணகிக்குக் கோவில் அமைத்த தமிழ் மன்னன் சேரலாதன் புகழ்பாடி………. பண்டைத் தமிழர்தம் வீரத்திறன் மெச்சி……… இருபதாம் நூற்றாண்டில் கண்னகிக்குச் சிலை எடுத்த ‘கலைஞர்’, தமது இன-மான உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு ‘வடதிசை’ நோக்கித் தலைவணங்கும் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக்கொள்ளப் போகிறாரா ?

என்னும் ஐயம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் அரும்பியிருப்பதில் தப்பேதுமில்லை.

‘படிப்பது சிவ புராணம், இடிப்பது சிவன் கோவில்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,

அதுபோன்று, ‘கண்ணனைக் கொண்டாடும் இந்திய தேசம்,கம்ஸனைஆதரிப்பதென்பது எவ்வாறு சாத்தியம் ?

இதயமுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றல்லவா இது.