Archive for the ‘கொடுமை’ Category

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

ஒக்ரோபர் 22, 2009

இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே.

பெண்கள் உட்பட சுமார் 4நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும்.

athirvu@gmail.com

Advertisements

கலைஞரின் மற்றொரு நாடகமா?

ஒக்ரோபர் 20, 2009

அண்மையில் 13 அக் 2009 அன்று வெளியாகியிருந்த இரண்டு செய்திகள் தாம் எனக்கு ‘இந்தக் கட்டுரை’யினை எழுதத் தூண்டியது.

அதில் ஒன்று, தமிழக நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆருண் என்பவர் கூறிய தகவல்.

"இந்திய ஊடகங்கள் தெரிவிப்பது போன்று தமிழர்கள் அவல நிலையில் இல்லை" என்றும், வடக்கு இடம்பெயர் முகாம்களை நேரில் பார்வையிட்டதின் மூலமாகத் தாம் இந்த உண்மையைக்(!) கண்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றையது ஐ.நா சபையின் ஸ்ரீலங்கா தூதுவர் ‘பாலித்த கோஹன்ன’ கூறியதாக வந்துள்ள செய்தி. அதில், வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்களில் சுமார் 12,500 பேர் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் 10,000 பேர்வரை இன்னும் இனங்காணப்படாதிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கும் இவர், இந்தப் புலித் தொடர்பாளர்களனைவரும் அழிக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ கூடும் என்றும் கோடிகாட்டியுள்ளார். இருபத்தேழு ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்டிவைத்த பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்காவண்ணம் இவ்வாறு செயல்படுவது அவசியம் என்றும் கருத்துரைத்திருக்கிறார்.

gr_with_indian_delegationபாலித்த கோஹன்னவின் கூற்றினைப் படித்தபோது எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது படித்த ‘கண்ணன்’ கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

‘மகா பாரத’ப் போரில் தர்மத்தின் பக்கம் துணைநின்ற ‘கண்ணன’து பாலப்பருவத்து விளையாட்டுகளையும், வீரப்பிரதாபங்களையும் கூறும் அந்தக்கால ‘அற்புதக் கதைகள்’ இவை எனலாம்.

இதில், கண்ணன் தன் தாய்க்கு எட்டாவது பிள்ளை எனவும், அந்த ‘எட்டாவது’ பிள்ளையால் ,தன் உயிருக்கும் அரசுக்கும் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அப்பிள்ளையின் மாமனும், தேவகியின் அண்ணனுமான கம்ஸன், தன் தங்கையின் குடும்பத்தையே சிறையிலிட்டு அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கொன்றதாயும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஏழு குழந்தைகள் பிறந்ததும் கொல்லப்பட எட்டாவதான ‘கண்ணன்’ சேடிப் பெண் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அதற்குப்பதிலாக வேறொரு குழந்தை வைக்கப்படுகிறது. ஆனால், இதனை அறியாத ‘கம்ஸனின்’ ஆட்கள் அதனைக் கொன்று நிம்மதியடைகிறார்கள்.

ஆனால்,காலப்போகில் ‘கண்ணன்’ தப்பிவிட்டசெய்தி அறிந்து மீண்டும் ‘மரணபயம்’ தொற்றிக்கொள்ள, அந்நாட்டில் கண்ணனது வயதுள்ள அத்தனை குழந்தைகளையும் கண்டுபிடித்துக் கொல்லுமாறு உத்தரவு இடப்படுகிறது. என்றாலும் இத்தனையையும் கடந்து, ‘கண்ணன்’ நந்தகோபனது இடத்தில் யசோதையால் வளர்க்கப்பட்டு முடிவில் கம்ஸனைக் கொன்றதாகவும், அவனே பின்னர் கீதையின் நாயகனாக, பாண்டவர்க்கு ‘அம்பின் முனை’ வைக்கும் இடங்கூடத தரமாட்டேன் எனக்கூறிய கௌரவர்களை வீழ்த்தவும் தர்மம் தழைக்கவும் ‘பார்த்த சாரதி’யாய் பணிசெய்ததாயும் மஹாபாரதம் குறிப்பிடுகிறது.பாலித்த கோஹன்னவின் நிகழ்காலச் செய்திக்கும், கம்ஸனது இதிகாசச் செயல்களுக்கும் அதிகவேறுபாடில்லை என்பதைச் சிந்திக்கும் திறன்படைத்தவர்கள் அறிவார்கள்.

அதே சமயத்தில், அதே தினம் வெளியாகியிருந்த ஆருண் அளித்த தகவல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தீபாவளி இந்த நேரத்தில், இந்தியர்கள் யாவரும் ‘கண்ணனை’ப் போற்றி அவன் வழி நடக்க உறுதி பூணும் சமயமல்லவா ?

ஆனால் நடைமுறையோ வேறாகவல்லவோ இருக்கிறது.

ஒரு பக்கத்தில் கண்ணனைப் போற்றுகிறார்கள், மற்றொரு புறம் கம்ஸனுக்கு ஆதரவு தருகிறார்கள்.

வடிவேலு தன் நகைச்சுவையில் குறிப்பிடுவது போன்று இதுவும் ‘கண்ணைக்கட்டுகிற’ சமாச்சாரம் போலும்.

கலைஞரின் மற்றொரு நாடகமா?

இந்தியாவின் தூதுக்குழு என்னும் பேரில், தமிழக முதல்வரின் நெறியாள்கையில் இலங்கை சென்று அங்கு வாடும் தமிழீழ மக்களைப் பார்த்துவிட்டு வரச்சென்றவர்கள் இனி அடுத்து என்னசெய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி .

சிங்கள அரசின் சீற்றத்துக்கு ஆளாகி, மனிதாபிமானமற்ற வகையில் அடிப்படை வசதிகளைத்தானும் நிறைவேற்ற முயலாத முகாம்கள் என்னும் ‘சிறைக் கூடங்களில்’ வாடும் மக்களைப் பார்த்துவிட்டு வந்ததால் தாம் உண்மையைப் புரிந்து கொண்டதாக அரசுக்குச் சார்பாக; ஆருண் அறிக்கை விடுகிறாரென்றால், இவரது அறிக்கையும், பாலித்தவின் பேச்சும் தற்செயலானதா அல்லது முன்பே திட்டமிட்டவாறு ‘காய்கள்’ நகர்த்தப்படுகின்றனவா என்னும் சந்தேகம் பிறர் உள்ளங்களில் ஏற்படுமாயின், அதில் தப்பேதுமில்லையே!

சென்றவருடப் பிற்பகுதியில்……

வன்னிப் பிரதேசத்தில் போர் தீவிரமடைந்திருந்த சமயத்தில், ‘தமிழினத் தலைவர்’ என்னும் பேரால் இறும்பூதெய்தும் தமிழக முதல்வர்… இலங்கையில் சிங்கள அரசு நிகழ்த்தும் மனிதாபிமானமற்ற போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதுவிடின், தமிழ் நாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறப்பார்கள் என்று ‘பராசக்தி’யாய் முழக்கமிட்டார்.

ஆனால், நடந்தது என்ன?

ஈழத்தில் தமிழர்களது கட்டுப்பாட்டில் இருந்த மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஆகிய பகுதிகள்யாவும், இந்திய அரசின் ஆதரவோடும், சர்வதேசங்களின் ஆயுதங்களோடும்; மனித உயிர்களை மதியாத வெறியோடு முன்னேறிய சிங்களப் படைகளிடம் வீழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழகம் கொந்தளித்தது.

ஆனால் கருணாநிதியோ , தனது பெயரின் முதல் மூன்று எழுத்தில் தன் மூச்சை நிறுத்திச் செயல்பட உறுதி பூண்டார் !

இதனால், பிரணாப் முகர்ஜி, மேனன்… போன்றோர் அடித்த ‘அந்தர் பல்டி’ களுக்கெல்லாம் ஆமாம் போட்டார். அவர்கள் கூறிய செயதிகளுக்கெல்லாம் ‘புதிய தொல்காப்பிய விளக்கம்’ போல் புதுமை விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர்களது இனமானப் போராட்டத்தின் குரல் வளையைச் சிங்கள ராணுவம் தனது இரசயனக் குண்டுகளால் நெரித்துக் கொண்டிருந்த நேரத்தில், மெரீனா கடற்கரையில், உலகமே அதுவரையில் கேட்டிராத மூன்று மணி நேர உண்ணா நிலையினைத் தனது குடும்பத் தொலைக்காட்சிகளின் துணையோடு அரங்கேற்றிக் கொண்டிருந்தார் !

அவர் அதனை நிறைவு செய்து தனது கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுக்கச் சென்ற சமயத்தில்…. ஈழத்தின் பல்லாயிரம் உயிர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டிருந்தது ‘கம்ஸ வம்ஸ’ப் படை !

இந்தக் கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் அசைபோட்டுப் பார்க்கையில்….. இன்று, தமிழக முதல்வர், மத்திய அரசின் ஆசியோடு தமிழீழ மண்ணுக்கு அனுப்பிவைத்த தூதுக் குழு, உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் சென்றார்களா ?

வட திசை சென்று ‘கனக விசயர்’ தலைமீது கல் ஏற்றிக் கண்ணகிக்குக் கோவில் அமைத்த தமிழ் மன்னன் சேரலாதன் புகழ்பாடி………. பண்டைத் தமிழர்தம் வீரத்திறன் மெச்சி……… இருபதாம் நூற்றாண்டில் கண்னகிக்குச் சிலை எடுத்த ‘கலைஞர்’, தமது இன-மான உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு ‘வடதிசை’ நோக்கித் தலைவணங்கும் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக்கொள்ளப் போகிறாரா ?

என்னும் ஐயம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் அரும்பியிருப்பதில் தப்பேதுமில்லை.

‘படிப்பது சிவ புராணம், இடிப்பது சிவன் கோவில்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,

அதுபோன்று, ‘கண்ணனைக் கொண்டாடும் இந்திய தேசம்,கம்ஸனைஆதரிப்பதென்பது எவ்வாறு சாத்தியம் ?

இதயமுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றல்லவா இது.

தமிழக எம்.பி.க்களின் பயணத்தைப் பற்றி ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஒக்ரோபர் 20, 2009

இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் உண்மை
நிலையைக் கண்டறியும் தமிழக எம்.பி.க்களின் பயணத்தைப் பற்றி ஈழத்
தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள்,
மாணவர்கள் சிலருடன் பேசினோம். `வெள்ளை வேன்’ அச்சுறுத்தல் இன்னும்
தொடர்வதால், முதலில் பேசத் தயங்கியவர்கள், தங்கள் பெயரை வெளியிடவேண்டாம்
என்ற நிபந்தனையுடன் பேசினார்கள்.

"தமிழக எம்.பி.க்கள் வரவால் ஒரு மாற்றம் ஏற்படும்; முகாம்கள் பற்றி
அரசாங்கம் கூறும் தகவல் சரியா என்பதைக் கண்டறிந்து உண்மைகளை அவர்கள்
வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது.

ஆனால், வழக்கப்படியே அரசாங்கம் அழைத்துச் சென்று காண்பித்த
முகாம்களுக்குதான் தமிழக எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள்
முகாம்களுக்குச் சென்றபோது, அவர்களுடன் பத்திரிகையாளர்கள் யாரும்
அனுமதிக்கப்படவில்லை. இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டைமானும் சில இலங்கை
அரசு அதிகாரிகளும் மட்டுமே உடன் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் தமிழகக்
குழுவினருடன் அகதிகள் எப்படி சுதந்திரமாக பேசியிருக்க முடியும்”
என்கிறார் இலங்கையின் புகழ்பெற்ற ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர்.

இந்தப் பயணத்தில் கனிமொழி மீதும் திருமாவளவன் மீதும்தான் ஈழத் தமிழர்கள்
அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், "எங்கள் பயணத்தில் நாங்கள்
கண்டதை அறிக்கையாக இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்” என்பதுடன்
கனிமொழி முடித்துக்கொண்டது அம்மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத்
தந்திருக்கிறது. திருமாவளவன், யாழ்ப்பாண மக்களைச் சந்திப்பதற்கு இலங்கை
இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு ராணுவத்தினர்
மறுத்துவிட்டனராம்.

முதல்நாள் யாழ்ப்பாணத்துக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்றபோது மங்கள
வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, பாடல், நினைவுப் பரிசு என தடபுடலாக
வரவேற்பு வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் மிகுந்த துயரத்தில் இருக்கும்
நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வரவேற்பை கனிமொழியும்
திருமாவளவனும் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. இலங்கைப் படையினருடன்
சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. குழுவின் தலைவரும்
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாதான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
அதன்பிறகு யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் தமிழக எம்.பி.க்கள்
மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"நாங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் போதும். இழப்புகளை இனிமேலும்
எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைப்
பெற்றுத் தந்து நிம்மதியாக வாழ உதவுங்கள். அபிவிருத்திப் பணிகளை விட
முதலில் எங்கள் மக்களை கொடூரமான அகதி முகாம்களில் இருந்து
மீள்குடியமர்த்த ஏற்பாடு செய்யுங்கள்” என அப்போது மக்கள் கண்ணீர்
மல்கியவாறு கதறியிருக்கிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர்,
"ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ்
மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் எத்தனை மக்கள்
கொல்லப்படப்போகிறார்கள்” எனக் கோபமாக கேள்வியெழுப்ப, தமிழக
எம்.பி.க்களிடையே மௌனம்.

இந்தச் சந்திப்பில் டி.ஆர்.பாலுவின் நடவடிக்கைகள் யாழ்ப்பாண மக்களிடையே
கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. "எங்கள் கஷ்டகாலத்திலும் ஒரு
கஷ்டகாலம் தமிழகக் குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தது. அவர் யாழ்
பொது நூலகச் சந்திப்பில் யாரையும் சரியாக பேச அனுமதிக்கவில்லை. ஒரு சிலர்
கூறிய கருத்துக்களையும் செவிமடுக்கவில்லை. கனிமொழியையும் திருமாவளவனையும்
கூட அவர் பேசவிடவில்லை. அடுத்த நாள் யாழ்ப்பாண பத்திரிகைகளில்
டி.ஆர்.பாலு பற்றி கடுமையான விமர்சனங்கள் வெளியாகியிருந்தது. `இராவணன்
காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு
வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை
யாழ் பொதுநூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது’ என கடுமையாக தலையங்கம்
எழுதியிருந்தது யாழ்வலம்புரி நாளிதழ்” என்கிறார் ஒரு யாழ் பல்கலைக்கழக
மாணவர்.

“இந்தக் குழுவில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள், மனித
உரிமை ஆர்வலர்கள், சுதந்திரக் கண்காணிப்பாளர்கள் என்று எவரும் இல்லை. தன்
உள்நாட்டு இராமேஸ்வரம் மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு
உத்தரவாதத்தைப் பெற்றுக்கொடுக்கமுடியாத தமிழக அரசா, எங்களைக் காப்பாற்றப்
போகிறது?

வெளிநாட்டுப் பிரதிநிதிகள், உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் என எவரையும்
அகதி முகாம்களுக்குள் அனுமதிக்காத ராஜபக்ஷே அரசாங்கம், இந்திய தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதிப்பதனூடாக இந்தியாவைத்
திருப்திப்படுத்துகின்றது. இவர்கள் செல்வார்கள், பார்ப்பார்கள்,
அழுவார்கள், வாக்குறுதிகளை வழங்குவார்கள், இலங்கை அரசியல்வாதிகளுடன்
கதைப்பார்கள், திரும்பி வந்து கலைஞரின் வெற்றி என்று பிதற்றுவார்கள்,
அறிக்கை சமர்ப்பிப்பார்கள், ஒன்றுமே செய்யமாட்டார்கள். இதுதான் நிஐம்.
ஈழத்தமிழனின் இரத்தத்தையும் சதையையும் இவர்களது அரசியலுக்காக
அடகுவைக்கும் அநியாயம்தான் அரங்கேறப்போகிறது” எனக் கொதித்துப் போய்
பேசினார் இன்னொரு யாழ் பல்கலை மாணவர்.

ஆக, ஈழ மக்கள் சொல்வதைப் பார்க்கும்போது இது கண்ணீர் துடைப்புப் பயணமாக
இல்லாமல், கண் துடைப்புப் பயணமாக அமைந்திருக்கிறது என்பது புரிகிறது.

– தளவாய் சுந்தரம்
Kumudham Weekly

ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்ட ுமே பாக்கியாக உள்ளன

ஒக்ரோபர் 20, 2009

இப்போது ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே பாக்கியாக உள்ளன. ஒன்று, தற்போது மேற்குலகில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை முறையாகப்  பயன்படுத்தி தமிழீழத்தை நோக்கி நகர்வது. மற்றொன்று, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தமக்கான பாதுகாப்பை நிச்சயப்படுத்திக் கொள்வது.

தற்போது மேற்குலகிலும், அமெரிக்காவிலும் சிங்கள அரசின் இனவாதத்திற்கெதிரான கருத்துக்களும் கண்டனங்களும் வலுவடைந்து வருகின்றன. பல திசைகளிலுமிருந்து சிங்கள அரசுக்கெதிரான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சாதகமான அரசியல் சூழ்நிலைகளை மிகச் சாதுரியமாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதனூடாக தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை நோக்கிய பயணத்தை வென்றெடுக்க முடியும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

கேந்திர முக்கித்துவம் வாய்ந்த அமைவிடம் தவிர்ந்த எந்த முக்கியத்துவமும் இல்லாத இலங்கைத் தீவில் இந்தியாவும் – சீனாவும் நிகழ்த்திவரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியே ஈழத் தமிழர்களின் வாழ்வு நிலையைச் சிதைத்து வருகின்றது. ஈழத் தமிழர்களின் இந்திய ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் மீதான நம்பகத் தன்மையை இழந்த சீனா சிங்கள தேசத்தின் ஊடாக இலங்கைத் தீவில் நிலை கொள்ள முனைகின்றது. அதற்கு, சிங்கள மக்களது இந்திய எதிர் நிலையும், பவுத்த மதமும் பலமான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளன.

சீனாவின் ஆதரவு சக்தியாகவே புரிந்து கொள்ளப்பட்ட சிறிலங்காமீது அழுத்தங்களை மேற்கொண்டு எதனையும் சாதிக்க முடியாத நிலையில், ஈழத் தமிழர்களது பிரச்சினையின் ஊடாக சிறிலங்காவைப் பணிய வைக்கும் சாத்தியப்பாட்டை இந்தியா கையில் எடுத்தது. தெற்கே சீனா தனது நிலைகளைப் பயன்படுத்திவரும் நிலையில், இந்தியா திருகோணமலையை பிரதான தளமாகக் கொண்டு தமிழீழப் பகுதியில் தன்னை நிலைப்படுத்தும் முயற்சியில் முனைந்து செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவின் இந்த பிராந்திய வல்லாதிக்கப் போட்டி ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. இது ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தையே சூறையாடிவிடும் என்ற மிகத் தெளிவான கணிப்பை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். இதனாலேயே, விடுதலைப் புலிகள் திட்டமிட்ட வகையில் மிகக் கொடூரமாக இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டனர். இதை நிரூபிக்கும் வகையில், ‘இந்தியா நடாத்தவேண்டிய யுத்தத்தையே நாம் நடாத்தி முடித்தோம்’ என்ற யுத்தத்தின் பின்னரான இலங்கையின் அறிவிப்பை இந்தியா நிராகரிக்காமல் அதனை ஏற்றுக்கொண்டது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்குப் பின்னரான இந்திய எதிர்பார்ப்பு திசை மாற ஆரம்பித்தது. சீனாவின் இலங்கை மீதான அக்கறைக்கு எதிராக இந்தியாவுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருந்த மேற்குலகும், அமெரிக்காவும் ஈழத் தமிழர்களின் பேரழிவாலும், தொடர்ந்தும் சிங்கள அரசு நிகழ்த்திவரும் அரச பயங்கரவாதத்தாலும் திகைத்துப் போயுள்ளன. இந்த அரசுகள் மட்டுமல்ல, இங்குள்ள மனிதாபிமான அமைப்புக்களும், ஊடகங்களும் கூட சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்கத் தலைப்பட்டுள்ளன. இதனால், இதுவரை காலமும் இந்தியா எந்த வகையிலாவது தமக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இருந்த ஈழத் தமிழர்கள் இந்தியக் கொடூரங்களைச் சகிக்க முடியாத நிலையில், மேற்குலகின் மாற்றங்களினூடாகப் பயணிப்பதே தமக்குப் பாதுகாப்பானது என்று எண்ணத் தலைப்பட்டனர். இது இந்தியா எதிர்பாராதது.

தனது பருத்த சந்தையைக் குறி வைத்துள்ள மேற்குலகு, தனது எல்லா நடவடிக்கைகளையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று நம்பியிருந்த இந்தியாவுக்கு மேற்குலகினால் சிறிலங்காமீது அதிகரித்துவரும் அழுத்தங்கள் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. மேற்குலகின் இலவசங்களிலும் கடன்களிலும் தங்கியிருந்த சிறிலங்கா, மேற்குலகின் அழுத்தங்களை சீனா, பாக்கிஸ்தான், ஈரான் உட்பட்ட புதிய நட்பு நாடுகளின் உதவியுடன்
முறியடிக்கும் புதிய வியூகத்தை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இதனால், இந்தியா நானும்தான் என்று சிறிலங்காவுடன் தனது கூடா நட்பைத் தொடர்ந்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அப்பம் பகிரப்போன இந்தியா தற்போது ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவை நம்ப இனியும் தயாராக இல்லாத நிலையில் உள்ள ஈழத் தமிழர்களின் பிடியை நழுவ விட்டுவிட்டால், சிங்கள தேசத்தில் தான் செல்லாக்காசாகவே மதிக்கப்படுவோம் என்பது இந்தியாவுக்குப் புரியாத விடயம் அல்ல. உறங்கு நிலையில் உள்ள சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பு நிலை எப்போது வேண்டுமானாலும் வெளிக்கிளம்பும் என்பது இந்திய சமாதானப் படை காலத்திலேயே உணரப்பட்ட விடயம். ஏற்கனவே, ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் இலங்கைத்தீவில் நிகழ்ந்த அத்தனை அழிவுகளுக்கும் காரணம் இந்தியாவே என்று குற்றம் சாட்டியுள்ளது.

சிங்கள இனவாத பூதம் மேற்கிளம்பாமல் இருப்பதற்காகவே, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வதற்கு முன்னர் தனது யுத்தக் கப்பல் ஒன்றை கொழும்புக்கு அனுப்பி, போர்ப் பயிற்சியை சிங்களப் படைகளுக்கு வழங்கியது. ஈழத் தமிழர்களை இதே நிலையில் வைத்து தனக்கான போர்க் கருவியாகப் பயன்படுத்தும் நிலையிலிருந்து இந்தியா மாறுவதற்கான எந்த சாத்தியப்பாடும் தென்படவில்லை. இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக் குழுவின் கருத்துக்களும், நடந்து கொண்ட முறையும் இதையே நிரூபிக்கின்றன. இந்த தமிழக நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கிய டி.ஆர். பாலு அவர்களது அணுகுமுறையை அவதானித்த யாழ்ப்பாண ஊடகமான வலம்புரி தனது ஆசிரியர் தலையங்கத்தில் ‘முன்பு அனுமான் வந்தனால் இலங்கை அழிந்தது. தற்போது சனீஸ்வரன் வந்துள்ளது’ என்று பதிவு செய்துள்ளது. தமிழக முதல்வர்
கருணாநிதி அவர்களால் கொடுத்து அனுப்பப்பட்ட பொன்னாடை மகிந்தவுக்குப்
போர்த்தப்பட்ட போதே அது நன்றாகவே நிரூபணமாகிவிட்டது.

இந்த நிலையில், மேற்குலகின் மனமாற்றங்களையும் மனிதாபிமான சிந்தனைகளையும்
எமது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான சக்தியாக புலம்பெயர் தமிழீழ மக்கள்  வெற்றிகரமாகப் பயன்படுத்த வேண்டும். அது சாத்தியப்படாமல் போனால், இந்தியாவின் கருவியாகத் தொடர்ந்தும் ஈழத் தமிழர்கள் பயன்படாத வகையில், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஈழத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனூடாக தமிழீழம் என்ற இலக்கை அடைய முடியாமல் போனாலும், ஈழத் தமிழர்கள் தமக்கான பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இரு தெரிவுகளை மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு இந்தியா விட்டு வைத்துள்ளது!

நன்றி – ஈழநாடு

http://www.pathivu.com/news/3810/54//d,view.aspx

Muthamizh
Chennai

பார்க்க தவறாதிர்கள்

ஒக்ரோபர் 20, 2009

குருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசியல்வியாபாரிகள்

இலங்கை இந்திய கூட்டுச்சதித்திட்டத்தின் ஆலாபனைகள் தொடங்கிவிட்டன. இலங்கைக்கான ஊர்வலத்திருவிழாவை முடித்துவிட்டு வந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களை, மூலமூர்த்தியே நேரில் சென்று வரவேற்று கலந்துரையாடி வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாடும் நடத்திமுடித்துவிட்டார். இதனூடாக இலங்கை மக்கள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்திய மூலமூர்த்தியான கருணாநிதி, தனது சாதனைப்பட்டியலையும் சேர்த்தே நிரப்பியுள்ளார். ஊரே அழுதபோது ஊமையன் விசிலடித்தது போல தங்களது வழமையான கூத்தை நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு.

இவர்களது பயணத்தின் அடைவின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக 58 ஆயிரம் பேர் முதலில் குடியேற்றபடுவார்கள் என்ற உறுதிமொழியை இலங்கை அதிபர் வழங்கியுள்ளதாக இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 11600 குடும்பங்களே குடியமர்த்தப்படுவதாக கருத்தில் கொள்வோமாக இருந்தால், ஏற்கனவே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து வன்னி வந்து திரும்பிபோக முடியாத மக்களும் மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் உறவினர்களால் வந்து பொறுப்பேற்கக்கூடிய குடும்பங்கள்தான் இந்த மீள்குடிமர்வு உறுதிப்பிரமாணத்தில் உள்ளடக்கக்கூடிய வாய்ப்புள்ளதே தவிர, வன்னிப்பகுதி மக்களல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

Mahinda_Indian_MP13909_1

ஐ.நா, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் பல மேற்கு நாடுகளும் மனிதஉரிமை அமைப்புகளும் தொண்டர் நிறுவனங்களும் மக்கள் குடியேற்றம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்த வண்ணமுள்ளன. அதேவேளை ஜீ.பி.எஸ் வரிச்சலுகை விடயத்தில் மேற்கு நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும் இலங்கை அரசு, தற்போது இந்தியாவின் துணையை நாடியிருப்பதும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்த இந்தியாவும் வாய்ப்பைப் பயன்படுத்தியிருப்பதன் எதிரொலிதான் இலங்கை அதிபரின் அழைப்புக்கடிதமும் இந்தியச் சட்ட மன்ற உறுப்பினர்களின் திடீர் விஜயமும் ஆகும்.

வவுனியாவின் முகாமிலுள்ள எனது உறவினருடன் "இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தீர்களா? அவர்கள் உங்களுடன் கதைத்தார்களா? பார்த்தார்களா?" – என வினவினேன். அதற்கு அவர் “கெலிகொப்டர் பறந்து வந்து நாங்களிருக்கும் முகாமிலுள்ள பாடசாலையில் இறங்கியதைப் பார்த்தோம். எங்களைப் போகவிடவில்லை. ஏற்கனவே ஆசிரியர்கள் குறிப்பிட்ட பொதுமக்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களுடனேயே பேசிவிட்டுச் சென்றனர்" – என்றார். குறுகிய நேரத்திற்குள் இப்படித்தான் இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் அகதிமுகாம்களில் காட்சியளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக முகாம்களைக் கண்காணித்து வரும் மனித உரிமை ஆணையகமும், பராமரித்துவரும் ஜ.நாவின் அமைப்புகளும் முகாம் நிலைவரம் தொடர்பாக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசின் செல்லப்பிள்ளைகளாகச் சென்ற (செத்தவீட்டுக்குச் சென்றவனை தாரை தம்பட்டை சிவப்புக்கம்பள வரவேற்பு மாலை மரியாதைகள் என வரவேற்க, தங்களுக்குரிய பாணியிலே அவற்றை ஏற்றுக்கொண்ட இவர்கள்தான், ஈழத்தமிழர்களிற்காகக் கண்ணீர் விடுவதைத்தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறிய மூலமூர்த்தியின் அரசியல் பின்பற்றிகள்.) இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட, "உண்மை நிலமைகளை நேரில் கண்டறியும் குழுவின்" காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் அவர்கள், "போரினால் இடம்பெயர்ந்த மக்களிற்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமனங்களுக்கமைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. அங்கே பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன" என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.(நக்கினார் நாவிழந்தார் என்பது இதைத்தானோ!)

ஒரு நாடு தனது பிரஜைகளை சிறையகதிமுகாமில் வைத்திருப்பதற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்துள்ளார். ஏனென்றால், தமிழகத்தில் முகாம்களிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளையும் கிட்டத்தட்ட இதேபோன்று கடுமையான விதிமுறைகளுடன் சுதந்திரமாக சந்திப்பதற்கான தடை உட்பட பலகட்டுப்பாடுகளுடன் கையாளும் தன்மையை ஒப்பிட்டுத்தான் அப்படிக்கூறினாரோ தெரியவில்லை.

Mahinda_Indian_MP13909_4
முகாம்களின் நிலைவரம் தொடர்பாக நற்சான்றிதழ் கொடுத்தது மட்டுமல்லாமல் உண்மை நிலையறியச்சென்ற குழுவின் எந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களும் முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை.(ஊடகத்திற்குப் பேட்டிகளை வழங்கக்கூடாது என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கையினதும் அன்புக்கட்டளையாகும்). மாறாக அரசாங்கத்திற்குச் சார்பான அறிக்கைகளையும் தங்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்ததாகக் காட்டுவதிலேயும் அக்கறையுடனிருக்கின்றனர்.

“போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்? இந்தியாதான் போரை நடத்தியது. தமிழகம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிக்க காரணமாக இருக்கப் போகிறீர்கள்” என்று குரலெழுப்பியதனூடாக எந்த நிலையிலேயும் தனது உரிமைக்கான கோரிக்கைகளை, தமது நியாயத்தை, தனது அரசியல் அபிலாசைகள் பற்றி, எவர் முன்னும் பேசத் தயங்காத, தேச விடுதலை தொடர்பான நீண்ட அரசியல் பார்வையுள்ள மக்கள் சமூகம்தான் ஈழத்தமிழர்கள் என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்கும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதால் தமிழனுக்கு எந்தத் தீர்வையும் திணிக்கலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எவரேனும் – குறிப்பாக இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் – நினைப்பார்களேயானால், அவர்களிற்கு மீண்டும் ஈழத்தமிழ்ச் சமூகம் பாடம் புகட்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.

ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்

கடைந்தெடுத்த தமிழ்த் துரோகிகள்….

ஒக்ரோபர் 20, 2009

"நேர்மையாக இருப்பதாக காட்டுபவர்களை விட நேர்மையாக வாழ்பவர்களையே எனக்கு பிடிக்கும்" என்றார் தலைவர் பிரபாகரன். ஆனால் இன்று நடப்பது என்ன? நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளின் எண்ணிக்கை அனுமன் வாலைப் போல் நீண்டு கொண்டே இருக்கிறது. கொலைச்சதியின் கூட்டுப்பங்காளிகளான சோனியாவின் காங்கிரஸ் காரர்களுடனும், கூட்டிக் கொடுக்கும் துரோகி கருணாவுடனும்

இருப்பவர்களை உண்மையான உணர்வாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு பக்கம் கருணாவையும், சோனியாவையும் வாழ்த்திப் பேசி விட்டு மறுபக்கம் ஈழ ஆதரவு பேச்சை பேசினால் அவர்கள் தலைவர் சொன்னது போல் நேர்மையானவர்களா?

எதிரியின் இருப்பிடம் நமக்கு நன்றாக தெரிகிறது. ராஜபக்சேவும், கோதபாயாவும் அவர்கள் பிறந்த சிங்கள இனத்திற்காக சண்டையிடுகிறார்கள். ஆனால் நமக்குள்ளேயே இருந்து கொண்டு எச்சில் எலும்புகளுக்காக துரோகம் செய்யும் துரோகிகள் அவர்களை விடவும் ஆபத்தானவர்கள். இத்துணை காலமும் ஆடுகள் போல் தென்பட்டவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய நரிகள் என்று இப்போதுதான் தெரிகிறது.

துரோகிகளின் பட்டியல் இதோ…(எதிரிகளை சேர்க்கவில்லை)

1. கருணா (எட்டப்பன், துரோகி, காக்கை வன்னியன், யூதாஸ் போன்ற பெயர்கள் அழிந்து கருணா என்ற பெயர் நிலைக்க காரணாமாக இருந்த இன துரோகி).

2. ஜெயலலிதா (கருணாவுக்கு செக் வைத்து சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்காமல் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளை பேசி, அகங்காரத்தால் அழிந்தவர். போரில் மக்கள் அழிவது இயல்பு என்ற தத்துவ முத்துக்களை உதிர்த்தவர், ஈழத்தை அமைத்து கிழித்து விடுவேன் என்று ஓட்டுக்காக வாய்சவடால் விட்டவர்).

3. திருமாவளவன் (எழும் தமிழ் ஈழம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மறுபக்கம் எழும் ஈழத்தை அமுக்குவது, ஒரு எம்.பி. பதவிக்காக கருணாவிடம் அடிபணிந்தது, மாவீரர் குடும்பத்தினரை தமிழகத்தில் இறக்கி விடுகிறோம், காப்பாற்றுங்கள் என்று சொல்லிய புலிகளின் தொடர்பை துண்டித்தது, ராஜபக்சேவின் நையாண்டி, நக்கல் ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிப்பது).

4. ராமதாஸ் (தன் மகனை பதவியில் வைத்துக் கொண்டே மக்கள் டி.வி.யில் சோக கீதம் பாடுவார், இப்போது கருணாவுடன் சேர்ந்து குரல் கொடுக்கப் போகிறாராம்)

5. விஜயகாந்த் (காங்கிரஸிடம் 300 கோடி வாங்கிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு இருப்பது, காங். கூட்டணிக்காக சோனியாவை விமர்சிக்காமலிருப்பது, கருணாவின் UNDERGROUND பினாமியாக இருப்பது).

6. சிதம்பரம் (மெத்தப் படித்த மேதாவி. கொலைகாரர்களுக்கு 500 கோடி, 1000 கோடி என்று ஊக்கத் தொகை அளிக்கிறான் மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு).

7. ஜெகத் கஸ்பர் (தேன் ஒழுகுவது போல் நக்கீரனில் எழுதி கருணா, சிதம்பரம், சோனியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்று மக்கள் மனதில் விஷ விதையை விதைப்பது).

8. தினமலர் (காசுக்காக தன் வீட்டு பெண்களையே கூட்டிக் கொடுக்க தயங்க மாட்டான்).

9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள் (ரசிகர்களை தூண்டி விட்டிருந்தாலே புரட்சி ஏற்பட்டிருக்கும். எதுவும் செய்யாமல் கிழட்டு கருணாவை பல மணி நேரம் வாழ்த்திப் பேசுவது. அதிலும் விஜய், "ராவு காலம்" ராகுல் காந்தியுடன் ஈழ மக்களுக்கு எப்படி நல்லது செய்வது என்று பேசுகிறாராம். ஆப்படித்தவுடன் அடங்கி விட்டார். இந்த நடிகர்கள் கருணா ஏவும் வருமான வரி சோதனைக்கு பயந்து

அடங்கி ஒடுங்கி விட்டார்கள். பல கோடி ரூபாய் வருமானம் வெளிநாடுகளில் தமிழர்கள் படம் பார்த்ததால்தான் சம்பாதிக்க முடிந்தது என்பதை மறந்து விட்டார்கள்).

10. வைரமுத்து (கருணாவின் அடியை வருடுவதுதான் வேலை. மன்னர் கருணாவை வாழ்த்திப் பாக்கள் பாடி பரிசில் பெறுவதுதான் இவருடைய முதல் வேலை)

11. வீரமணி (கருணாவின் அடிவருடி, இவன் கையால்தான் தலைவர் பழரசம் வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இப்போது அவரே வருத்தப்படுவார்)

12. ஜெகத்ரட்சகன் (கருணாவின் அடிவருடி)

13. சுப. வீரபாண்டியன் (கருணாவின் அடிவருடி)

14. காங்கிரஸ் பன்னிகள் (ராஜபக்சேவின் குண்டியை நாக்கால் நக்கி கழுவி விட்டு அதில் சந்தன மணம்தான் வருகிறது, நாறவில்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்).

மக்களின் முன்னேற்றத்திற்காக சாணக்கிய மூளையை உபயோகப்படுத்தினால் அதை "ராஜ தந்திரம்" என்று சொல்லலாம். ஆனால் தனக்கும், தனது குடும்பத்திறகாக மற்ற எல்லோரையும் முட்டாளாக்க நாடகங்களை நடத்தினால் அதற்கு பெயர் ராஜ தந்திரம் அல்ல (துரோகத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம்).

ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் உருவாவது போல் கருணா என்ற ஒற்றை துரோகியிடமிருது இவ்வளவு பேரும் உருவாகியிருக்கிறார்கள். எட்டு கோடித் தமிழர்களை 80 துரோகிகள் சேர்ந்து நன்றாக ஏமாற்றுகிறார்கள். இவர்களால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

– தமிழகத்திலிருந்து அதிபதி.

தெற்கெ திரும்பிப்பாரடா தமிழா

ஒக்ரோபர் 20, 2009
தெற்கெ திரும்பிப்பாரடா தமிழா உன் இரத்த உறவுகள் ஒரு வேளை உணவுக்கு குடல் கருகிச்சாகுதடா உன் குடலைக்குடித்துக் கருக்கிக்கொள்ள நீ கொடுத்த பணத்தில்(டாசுமார்க்-தீபாவளி)அரசுக்கு ஒரு நாள் வருமானம் 250 கோடிகள் வருமானமாம் சாதனை தமிழன் குடும்ப அழிவில்…..

கூவிசயகுமார், துபாய்,அரபு அமீரகம்.

இன்றும், அன்றும், ‘மக்கள் எல்லோரும் முட்ட ாள்’ என்று எண்ணும் தலைவன்

ஒக்ரோபர் 20, 2009

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
செம்மை மறந்தா ரடீ! …!

இன்று ராஜபக்சாவுக்கு பொன்னாடை!
091012ponaadai_rajapaksa.jpg

090525displaced.jpg
அன்று"இந்திய அரசே, தமிழர் இனப்படுகோலை உடனே தடுத்து!"
1.jpg
Chennai, 23 October 2008 – கொட்டும் மழையில் மக்களை முட்டாளாக்கிய தலைவன்
19a.jpg

….ஈழத் தமிழன்….
….மதன் ….
குவைத்

வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர் ட்

ஒக்ரோபர் 20, 2009

ஈழவர்குரல் வலைப்பதிவில் இருந்து ………………

ஈழத்தில் உள்ள அநேகமான தடுப்பு முகாங்களுக்கு சென்ற பிறகு தந்த
அனுபவங்களை பெரும் மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். சில தடுப்பு
முகாங்களுக்குள் சில நாள்கள் வாழ நேர்ந்ததும் அவ்வப்போது அவற்றுக்கு
சென்று வரும்பொழுதும் பல விடங்கள் அதிர்ச்சியளிக்கிறவிதமாக இருக்கிறது.
அண்மையில் உன்னதம் ஜூலை இதழில் கௌதம சித்தார்த்தனுடன் நடத்திய
நேர்காணலில் இந்த தடுப்பு முகாங்கள் பற்றி சுருக்காமாக பேசியிருந்தேன்.
அண்மையில் வவுனியா தடுப்பு முகாங்களை பார்வையிட்ட பிறகு ஏற்பட்ட
அனுபவங்கள் பயங்கரமாக ‘பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் பற்றிய
துயரங்களை பெரியளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பயங்கரமாக பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள்

இப்பொழுது ஈழத்தில் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும்
மக்கள் பற்றிய துயரம் எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. ஈழத்தின் வடக்குப்
பகுதி முழுவதும் பல தடுப்பு முகாம்கள் அமைக்ப்பட்டு வன்னியிலிருந்து
கொண்டு செல்லப்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 முகாம்கள் இருக்கின்றன. மொத்தமாக
எழுபதாயிரம் பேர் வரையாவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லாரை
தடுப்பு முகாம் மண்மேடுகாளாலும் முட்பம்பிகளாலும் பிரமாண்டமாக
அமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றுடன் கைதடி தடுப்பு முகாம், நாவற்குழி
தடுப்பு முகாம், மிருசுவில் தடுப்பு முகாம், கொடிகாமம் தடுப்பு முகாம்
என்று பல முகாங்கள் இருக்கின்றன. முகாம்களுக்கு முகாம் இராணுவத்தினா;
வெவ்வேறு விதிகளை ஏற்படுத்திக்கொண்டு, வெவ்வேறு நடைமுறைகளைக் கையாண்டு
கொண்டு தமது அதிகாரத்தை பல வடிவங்களில் பல கோணங்களில் செலுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பு முகாங்கள் வெறும் சிறைச்சாலைகளாக மட்டும் இல்லை அவை மனதளவில்
பாரிய விளைவுகளையும் உளைச்சல்களையும் மாற்றங்களையும் உண்டு பண்ணுகிற
திறந்த தண்டனைக் களங்களாகவும் இருக்கின்றன. போர் வடுக்களை மேலும்
வதைப்புக்குள்ளாக்கிற காலத்தின் சிறையாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்து
தடுப்பு முகாங்களையே பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு வவுனியா தடுப்பு
முகாங்களுக்கு செல்ல நேர்ந்தபோது மனதில் மேலும் பெரு அவலம் விளைந்தது.

வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் இருக்கும் தடுப்பு முகாம்
நோக்கி பயணத்தை தொடங்கினேன். வவுனியா நகரத்திற்குள் வைத்தியசாலைக்கு
பின்பக்கமாக ஒரு தடுப்பு முகாம் இருக்கிறது. மன்னார் வீதியில் வவுனியா
காமினி மகா வித்தியாலயம் என்ற சிங்கள பாடசாலையில் விடுதலைப்புலிகளால்
பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட ஆண் மாணவர்கள் உள்ளடங்களான இளைஞர்கள்
தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் முட்கம்பிகளுக்கால்
எப்பொழுதும் தெருவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கும் காமினி மகாவித்தியாலய வேலிக்குள் இடையில் கிடட்டத்தட்ட
ஐந்து முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேப்பங்குளத்தில்
இருக்கிற முஸ்லீம் பாடசாலையிலும் அப்படித்தான் ஆண்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்கள். நெளுக்குளம் கல்வியல் கல்லூரியில் ஆண்கள் தடுத்து
வைக்கப்பட்டிருக்க பம்பமடு பல்கலைக்கழக கட்டிடத்தில் பெண்களும் தடுத்து
வைக்கப்படுகிறார்கள். அவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறைதான் சந்திக்க
முடியும். அதுவும் அவர்களது பெற்றோர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
கட்டாய ஆட்சோர்ப்புக்குள்ளானவர்களை தடுத்து வைப்பதற்கு பம்பமடுவை சூழ
உள்ள பகுதியிலுள்ள காடுகளை வெட்டி அதில் நீல மற்றும் வெள்ளை நிறமான
இறப்பர் கூடாரங்களை அமைத்து முட்கம்பி வேலிகளை படையினர் அமைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் கல்வி கற்ற மற்றும் தொழில் புரிந்த இளைஞர்களை பலவந்தமாக
கொண்டு சென்று ஆயுதப் பயிச்சி அளித்தும் அளிக்காதும் அவர்களிடம்
துப்பாக்கியை கொடுத்து கள முனைகளில் நிறுத்தினார்கள். அவர்களில்
அநேகமானவர்கள் படையினரிடம் சரணடைந்திருக்கிறார்கள். அவர்களை
இப்பொழுதுக்கு அவர்களின் குடும்பங்களுடன் இணைத்து விடும் எண்ணம் அரசிற்கு
இருப்பதாக தெரியவில்லை. கட்டாய போருக்கு கொணடு சென்று மனதளவில்
பாதிக்கப்படட அவர்கள் தற்போது இராணுவத்தின் வதைச்சிறைக்குள் தடுத்து
வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பொழுதே செத்துப்போயிருக்கலாம்
என்பதைத்தான் பார்க்க போகும்பொழுதெல்லாம் தனது மகன் சொல்லுவதாக ஒரு தாய்
பேருந்தில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்களில் பலர் மொட்டை
அடிக்கப்பட்டிருந்தார்கள். தொடர்ந்து அவர்களுக்கு மொட்டை அடிப்பதுடன்
இரவு நேரங்களில் கொடுமையான சித்திரவதைகளையும் படையினர் செய்கிறார்கள்.
அவர்கள் வரிசையாக நின்று உணவினை பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

முழுக்க முழுக்க வன்னிப்போருடன் தொடர்பு பட்ட இந்த மக்கள் அவற்றைப் பற்றி
வைத்திருக்கிற நினைவுகள் சொல்லுகிற கசப்பான அனுபவங்கள் அவர்களை தொடர்ந்து
மன வதைப்பிற்கு உள்ளாக்குவதுடன் தொடர்ந்து இந்தச் சூழல்
வதைப்பிற்குள்ளும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். யாரிடம் போனாலும் யாரைப்
பார்த்தாலும் நடந்தவைகளை சொல்லத் தொடங்குகிறார்கள். உண்மைக்கு எதிரான
புனைவுகள் சிதறுகின்றன. இராணுவத்தின் போர் வெறிக்குள்ளும் புலிகள் அரணாக
நிறுத்திய துயரத்தையும் துப்பாக்கிகளை தமக்கு எதிராக திருப்பி நீட்டிய
புலிகள் பற்றியும் கதைகளையும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

வன்னிப்போர் விளைவித்திருக்கிற இந்த முகாம்கள் அந்தச் சனங்கள் அனுபவித்த
போர் துயரத்தின் நீட்சியாக அவர்கள் மீதே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வவுனியா ‘மெனிக்பாம்’ தடுப்பு முகாம் எனறுதான் எல்லோராலும்
சொல்லப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களும் வவுனியாவிற்கு
வெளியிலிருப்பவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மெனிக்பாம் என்பது
1996ஆம் ஆண்டு வன்னியிலிருந்து இடம்பெயாத்ந்தவர்களை செட்டிக்குளத்தில்
குடியிருத்திய கிராமம். மதவாச்சியிலிருந்து மன்னாருக்குச் செல்லும்பொழுது
வலது பக்கமாக இருக்கிறது அந்தக் குடியிருப்பு. இடது பக்கமாக இருந்த
பெருங் காடுகளை அழித்து அப்பகுதியில் ஆறு தடுப்பு முகாங்கள் தொடர்ச்சியாக
அமைக்பப்பட்டிருக்கின்றன. பிரமாண்டமான முட்கம்பிகளால் அமைக்கப்பட்ட இந்த
தடுப்பு முகாங்கள் கிட்டத்தட்ட ஏழு-ஏழு கிலோமீற்றர் பிரதேசத்தில்
அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து மதவாச்சி மன்னார் வீதியில் இடது பக்கமாக முதலில் ‘வலயம் ஆறு’
தடுப்பு முகாம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து
கதிர்காமர் முகாம், ஆனந்தகுமாரசாமி முகாம், இராநாதன் முகாம், அருணாச்சலம்
முகாம், வலயம் நான்கு, வலயம் ஐந்து முதலிய முகாம்கள் பக்கம் பக்கமாக
அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முகாமிற்கும் கிராம அலுவர், மாவட்ட
செயல அலுவலகம் என்பன காணப்படுகிறது. இந்த சிவில் அலுவலகங்கள் எதையும்
தீர்மானிக்க முடியாது. ஓவ்வொரு வலயத்திற்கும் “ஷோன் கொமாண்டர்”
எனப்படுகிற இராணுவ பொறுப்பதிகாரிகள்தான் எல்லா விடயத்தையும்
தீர்மானிக்கிறார்கள்.

காடுகள் வெட்டி ஒதுக்கப்பட்ட பெரும் வெளியில் சிவப்பு மண்ணின்
புழுதியையும் தூசுகளையும் காற்று முகங்களில் அள்ளி
வீசிக்கொண்டிருக்கின்றன. கடுமையான வெப்பத்தில் உடல் எரிவுடன்
வியர்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு தடுப்பு முகாமின் முன்னாலும் அவர்களை
சந்திப்பதற்கு உறவுகள் வந்து போய் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
பிரிக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள் நின்றுகொண்டு தூரத்தில் தங்கள் உறவுகள்
வந்து நிற்பதாக கைகளை காட்டிகொண்டிருப்பதும் வேறு எவரையோ தங்கள் உறவு என
கைகாட்டி ஏமாறுவதுமாக இருந்தது முன்பக்கம். கடுமையான வெயிலிலும்
மழையிலும் துணிகளை தலையில் போட்டுக்கொண்டு யாராவது வருவார்கள் என்று
அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

சந்திக்கும் இடத்திற்கு தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது என இராணுவம்
சுலோகங்களை எழுதி விட்டிருந்தது. சிம் காட்டுகளையும் சார்ஜ்யர்களையும்
கொண்டு போனால் கடுமையான தண்டனை என்றும் மிரட்டிக்கொண்டிருந்து. சில
தடுப்பு முகாங்களில் அதனை வாங்கி வைத்துவிட்டு டோக்கன்களை கொடுக்கும்
இராணுவம் சில முகாங்களில் அவற்றை வாங்கி வைத்திருக்காமல் கொண்டு போகவும்
கூடாது என சொல்லிக்கொண்டிருந்தது. வந்தவர்கள்
தடுமாறிக்கொண்டிருந்தார்கள். சில முகாங்களில் சந்திக்கும் இடத்திலேயே
சாப்பிட்டு செல்லுவதற்கான உணவு முதல் எந்தப்பொருட்களையும் கொண்டு செல்ல
அனுமதிக்கிறார்கள் இல்லை. ‘கோமரசன் குளம்’ என்ற இடத்தில் இருக்கிற தடுபபு
முகாமில் கொண்டு சென்ற உணவுப் பொருட்களை தூரத்தில் வைத்து விட்டு உள்ளே
வந்து சந்திக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் படையினர். பணியில் நிற்கிற
இராணுவத்தினர் ஆளுக்கொரு சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள்.
பொறுப்பிலிருக்கிற ‘கொமாண்டோக்கள்’ வெவ்வேறு கட்டுப்பாடுகளை
விதிக்கிறார்கள்.

இங்கு பணிபுரிகிற தொண்டு நிறுவனப் பணியாளார்களுக்கு பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் தமது பணிகளை சரியாக
செய்ய முடியாதிருக்கிறார்கள். எனினும் சில தொண்டு நிறுவனங்களின் உதவிகள்
மக்களுக்கு கிடைக்கிறது. அவார்கள் அதனை வைத்தே காலத்தை கடத்துகிறார்கள்.
ஆடை, சவற்காரம், பற்பசை, சில சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை அவர்கள்
வழங்குகிறார்கள். மக்கள்மீதும் தொண்டு மீதும் ஆர்வமுள்ள பல உள்ளுர்
இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்
படையினரது கடுமையான சோதனை நடவடிக்கைகளை எதிர் கொண்டே அவர்கள்
பணியாற்றுகிறார்கள்.

சிலவேளை சந்திக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு 4 தொடக்கம் 5 மணிநேரங்கள்
கால் கடுக்க நிற்க வேண்டியிருக்கிறது. செட்டிக்குளத்தில் உள்ள
முகாங்களில் உறவுகளை சந்திப்பதற்கு எப்பொழுதும் சனங்கள்
திரண்டபடியிருக்கிறார்கள். வந்ததும் உறவுகளின் பெயர் அவர்களது கூடார
இலக்கம்; கூடாரம் அமைந்திருக்கிற பிரிவு இலக்கம் என்பவற்றை கொடுத்து
ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு
வருவதற்கு ஒன்று தொடக்கம் இரண்டு மணிநேரங்கள் கூட எடுக்கிறது. மிகவும்
தூரத்திலிருந்தும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வர வேண்டும். சிலவேளை
அவர்களது கூடாரம் அமைந்திருக்கும் பகுதிக்கு அந்த அறிவிப்பு கேட்காமல்
விட்டால் அவர்கள் உறவினரை சந்திக்காமலே திரும்பிச் செல்லவும்
நேரிடுகிறதையும் காண முடிந்தது.

உறவுகளை சந்திப்பதற்கு அரை மணிநேரம் முதல் இருபது நிமிடம் பத்து நிமிடம்
ஐந்து நிமிடம் என்று வழங்கப்படுகிறது. இதுவும் முகாங்களுக்கு முகாம்
வித்தியாசப்படுவதுடன் நிற்கும் படையினர் நாளுக்கு நாள் வித்தியாசமாக நேர
சூசிகையை வைத்திருக்கிறார்கள். வரிசையில் நின்று அந்த நேரத்தில்
அறிவிப்பதற்கு விபரத்தை கொடுத்து விட்டு மீளவும் வரிசையில் நின்று சென்று
சந்தித்துக்கொண்டிருந்தார்கள் சனங்கள். சந்திக்கும் இடமோ மிகவும்
பிரமாண்டமாக முட்கம்பிகளால் பின்னப்பட்டிருந்தது. இரண்டு முட்கம்பி
வேலிகளுக்கு அப்பால் நின்று ஒருவரை ஒருவர் தழுவும் முடியாமல் பிள்ளைகள்
ஒரு பக்கம் தாய்மார் ஒரு பக்கம் என்றும் அதுபோல ஏனைய பிரிந்த உறவுகள்
அழுதுகொண்டு நின்றார்கள். துயரத்தின் சொற்களும் கண்ணீரும்தான் சந்திக்கிற
கொட்டில்களினுள் நிறைந்து கிடந்தன. உலுக்குளத்திலிருக்கிற தடுப்பு
முகாமில் இரண்டு வேலிகளுக்கு இடையில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள்
போட்டு அடுக்கப்பட்டிருந்தன. தமது குழந்தைகளை உறவினரிடம் கொடுத்து
விடுவதனால்தான் இப்படி விரிசலான வேலிகளை போட்டிருப்பதாக இராணுவம்
சொல்லுகிறது. சந்திக்க வருபவர்கள் முகாங்களுக்கு முகாம் அவைகளின்
வாசல்கள் தோறும் அலைந்து கொண்ருப்பதைத்தான் எங்கும் பார்க்க முடிந்தது.

இந்த பிரமாண்டமான தடுப்புக் முகாம்களின் ‘உள்ளே’ செல்ல முடிந்தபோது மனம்
கனத்து மனதில் பெரும் துயரம் பரவிக்கொண்டிருந்தது. ஒரு பெரிய சனக்கூட்டம்
தடுத்து துப்பாக்கிகளாலும் இராணுவ காவலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் இழந்து ஏமாற்றப்பட்ட மக்களாக அவர்கள் நிற்கிறார்கள்.
அந்தரம் ஏக்கம் தவிப்பு என்பவற்றுடன் இந்த முட்கம்பிச் சுருள்களுக்குள்
அவர்களது வாழ்க்கை நசிந்துகொண்டிருந்தது.

அருகருகாக தகரங்களாலும் இறப்பர் கூடாரங்களிலும் மக்கள் இருந்தனர் ஒரு
கூடாரத்தில் இரண்டு குடும்பங்கள் நான்கு குடும்பங்கள் என்று தங்க
வைக்கப்பட்டிருந்தன. தலைமுடியில்லாத பெண்கள் மற்றும் சிறுமிகள் அநேகமான
கூடாரங்களின் முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழுகிக்கொண்டிருக்கும் குழாய்
தண்ணீரில் வெறும் வெளியில் நின்று குளித்துக்கொண்டிருந்தார்கள்.
பெண்களும் குழந்தைகளும் தண்ணீருக்காக காத்துக்கொண்டு நின்றார்கள். சில
இடங்களில் தண்ணீர் குழாய்கள் கிடங்கில் தாழ்த்து வைக்கப்பட்டிருக்க
அதற்குள் இறங்கி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாh;கள். தண்ணீருக்கான
‘டோக்கன்கள’; கயிறுகளில் கொழுவப்பட்டிருந்தன. மதியம் கொலுவிய டோக்கனுக்கு
இரவு 12 மணிக்குத்தான் தண்ணீர் பெற முடிகிறது.

கடைகள் தடுப்பு முகாங்களின் உள்ளே இருக்கின்றன. கூட்டறவு கடைகள்,
பலபொருள் விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. கூடாரங்களோ நிமிரமுடியாதவையாக
இருந்தன. வெம்மையை மழைபோல அவை பொழிந்துகொண்டிருந்தன. அவைகளுக்குள் நோய்
வாய்ப்பட்ட மெலிந்த சனங்கள் கொடுமையான வெயில் எரித்துக்கொண்டிருக்கும்
பொழுதிலும் படுத்திருந்தார்கள்.மலசலகூடங்கள் ஆபத்து நிறைந்த கிடங்குகளாக
இருந்தன. கூடாரங்களுக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதுடன் அவை
எப்பொழுதும் நாற்றம் வீசிக்கொண்டிருந்தன. இலையான்கள் நிறைந்து கிடந்தன.
அதிகாலை விடிய முதலே மலசலகூடத்திற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இப்படி தண்ணீருக்கும் மலசலகூடத்திற்கும் கடையில் பொருட்களை
வாங்குவதற்கும் பக்கத்து முகாமில் உள்ள உறவுகளிடம் செல்ல வரிசையில்
நிற்பதுடன் அவர்களின் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. பக்கத்தில்
உள்ள முகாமிற்கு செல்லுவதற்குகூட பல அனுமதிகளை பெற்று பல மணிநேரம் காத்து
சிலவேளை வெறுமையுடன் திரும்புவர்களை பார்த்திருக்கிறேன். அங்கு நிற்கிற
படையினர் மக்களை கடுமையாக கேவலமாக நடத்திக்கொண்டிருந்தார்கள். மிகவும்
காட்டு மிராண்டித்தனத்துடன் தடிகளுடன் நிற்கும் மிகவும் இளம்வயது
படையினர் எல்லோரையும் தாக்கிக்கொண்டு நின்றார்கள். சிவப்பு புழுதியால்
படிந்து கிடக்கின்றன இந்த கிரராமங்களும் கூடாரங்களும். ஒவ்வொரு துண்டு
நிலத்தையும் கழிவு வாய்க்கால் பிரித்து கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

அங்கு சமைத்து கொடுக்கும் சாப்பாட்டினால் வயிற்றுளைச்சல் போன்ற நோய்கள்
வருவதாக சொல்லுகிறார்கள். அங்கு குழுக்குழுவாக சேர்ந்து சமைக்கிறார்கள்.
உணவினை பெறுவதற்கு சிலவேளை மாலை மூன்றுமணிகூட எடுக்கிறது. சிலர் தங்கள்
கூடாரங்களில் முன்பாக சிறிய அடுப்புக்களை வைத்து அதில் முடியுமான உணவினை
சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சைவமத குருமார்கள் வேறு ஒரு
பகுதியில் பிரத்தியேகமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். காலையில
பெரும்பாலும் கஞ்சிதான் கிடைக்கிறது என்று ஒரு சிறுமி வெறுத்தபடி
சொல்லுகிறாள். அந்தச் சாப்பட்டை சாப்பிட்ட பிறகு எப்பொழுது உணவினை
தூக்கினாலும் எனக்கு அந்த சாப்பாடும் அழுகையும்தான் வந்து முன்னுக்கு
நிற்கின்றன.

பள்ளி செல்லும் பிள்ளளைகள் கலார் சட்டைகளுடன் பள்ளிக்குடம்
சென்றுகொண்டிருந்தார்கள்.சிறுமிகள், பெண்கள் பாலியல் வதைப்புக்குளுக்கம்
மீறல்களுக்கம் உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் கொண்ருக்கிற பெற்றோர்கள் அது
பற்றி விழிப்புடன் இருக்கிறார்கள். சில இடங்களில் அப்படி நடந்ததாக
சொல்லும் ஒரு தாய் தனது பிள்ளைகளை தனியாக கடைக்கும் பாடசாலைக்கும்
அனுப்புவதில்லை என்று கூறினாள். அங்கிருக்கும் சிறிய மருத்துவமனைகளில்
நோய்வாய்ப்பட்டவர்கள் நிறைந்திருந்தாhக்ள். கறுத்து மெலிந்து போனவர்களின்
அப்படியேயிருக்கிற பிள்ளைகள் எங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். யுத்த
களங்களின் வெம்மையால் அவர்களது தோல் ஒரு விதமாக கறுத்துப்போய் பழுதடைந்த
மாதிரி இருக்கிறது. அந்த நிலத்து புழுதி சேறு என்பன பிறண்ட ஆடைகளுடன்
வெம்மை தோய்ந்த உருவங்களுடன் இருக்கிறார்கள்.

மழை பெய்யப்போகிறது என்றவுடன் அச்சமடைந்தார்கள் சனங்கள். சில
கூடாரங்களின் கீழாக வெறும் நிலத்தில் தரப்பால் விரிக்கப்பட்டிருக்கிறது.
அவற்றால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மழையோ திரும்பத் திருப்ப பெய்து
கொண்டிருந்தது. சில கூடாரங்கள் தண்ணீரில் மிதக்கத் தொடங்கின. சேறும்
சகதியுமாக மாறிக்கொண்டிருந்தது தடுப்புமுகாங்கள். வெம்மை அடங்கி குளிர்
அதிகரிக்க குழந்தைகளை தூங்க வைக்க நிற்க இடமில்லாமல் தாய்மார்கள்
அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சனங்களின் முகங்கள் ஊறிப்போயிருந்தன.
இப்படியே நிலமையிருந்தால் பருவ மழையின்போது அவர்கள் பெரும் அழிவுகளையும்
அவலத்தையும் சந்திக்கப் போகிறார்கள். ஏனென்றால் முக்காவாசி கூடாரங்கள்
மிகவும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

இந்த அனுபவங்கள் நிலைகுழையச்செய்து விட்டன. இவற்றை எழுதவும் முடியாத
நிலைக்கு கொண்டு வந்தது. முன்பு வருகிற யுத்தக் கனவுகள் அற்று அந்த
தடுப்பு முகாம் பற்றிய கனவே வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் விடுதலைக்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள்
விடுவிக்கப்படுகிறபோதும் மீள குடியமர்த்துவதன் வாயிலாகத்ததான்
இடப்பெயர்வின் பேரவலத்தை தடுத்து நிறுத்தலாம். யாழ்பாணத்தைச்
சேர்ந்தவர்கள் விடுவிக்கப்படுவதாக அரசு சொன்னதும் பலரும் தாம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று பதிந்து வெளியேறிவிட
திட்டமிடுகிறார்கள். வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள்
வீடுகளிலும் தங்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள்
நூற்றுக் கணக்கானவர்கள் இப்படி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் வன்னி மக்களில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பேரே
இதுவரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா
மாநகரசபைத் தேர்தலுக்காக சில மக்களை விடுவிப்பதன் முலம் அரசாங்கம்
வாக்குகளை பெற திட்டமிட்டிருந்தது. சில அழுத்தங்கள் ஊடக பதற்றங்களை
தவிர்ப்பதற்கு குறிப்பிட்டளவு மக்களை விடுவிக்கிறது.

சாம்பலாகிப்போயிருக்கிற வன்னி மண்ணை தனது கையிற்குள் வைத்திருக்கிறது
அரசு. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற படைகளையும் பார்த்தேன். அவர்களிடம்
இப்பொழுதுக்கு வன்னி மக்களை மீள் குடியமர்த்தும் எண்ணம் இருப்பதாக
தெரியவில்லை. சிங்கள பெயர் பலகைகளையும் புத்தர் சிலைகளையும் இராணுவ
பிரிவு தளங்களையும் நிறுவுகிறார்கள். பெருங் காயங்களுடன் பேரமைதியுடன்
பெருந்துயரத்தை பிரதிபலித்தபடியிருக்கிறது வன்னி நிலம். வீழ்த்தி எடுத்த
நிலத்தில் படையினர் மட்டும் விரும்பியடி வாழ்ந்து கொண்டிக்கிறார்கள்.
வன்னி நிலத்தின் அடையாளம், வளங்கள், சேமிப்புக்கள் சுரண்டப்படுகின்றன.

மேலும் மேலும் நம்மை பதற்றத்தில் உள்ளாக்கிற வித்தில் மிக நுட்பமாக வன்னி
நிலம் அழிக்கப்பட மறுபுறத்தில் அதன் சனங்கள் மிகக்கொடூரமாக சிறைக்குள்
வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பு முகாங்களின் வாசல்களிலும் அதற்கு
உள்ளாக எங்கும் ஜனாதிபதி மற்றும் அவரின் சகோதர்ர்களின் புகைப்படங்களை
பெரிய அளவில் நிறுவியுள்ளார்கள். சனங்களின் நிலத்தை வென்ற யுத்த
வெற்றியின் களிப்பு ஏறிய அந்த முகங்கள் துயர் மிகுந்த அந்தப் பகுதியில்
அவருவருப்பான முகங்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. சிங்களத் தேசியகீதம்,
சிங்களக் கொடி, சிங்கள ஜனாதிபதி என்பவைகளின் முன்னால் பிணங்களாக எமது
சனங்கள் அடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களால் இலங்கை- சிங்கள தேசியத்
திணிப்பை ஏற்றக்கொள்ள முடியாதிருக்கிறது. வேற்று நாட்டில்
வாழ்வதைப்போலவும் வேற்று நாட்டுப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டதைப்போலவும் இருக்கிறார்கள் இந்தச் சனங்கள்.

வவுனியாவில் இருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிற செட்டிக்குளம்
பகுதியில் வாழ்வு மீது நிகழ்த்தப்படும் இந்த துயரை பார்க்கும்பொழுது
இன்னும் கொடுமையாயிருக்கிறது. மக்கள் வெளியேற்றப்ப்ட வன்னி நிலம்
தவிர்ந்த வடக்கு பகுதி முழுக்க இப்படி தடுப்பு முகாங்கள்தான் நிறைந்து
கிடக்கின்றன. எங்கும் பார்க்க முடியாத அறிய முடியாத துயரங்கள்
நிகழ்ந்தேறுகின்றன என்பதைத்தான் ஒவ்வொரு நாளும் உணர முடிந்தது. சில
நாட்களுக்குள் முகாங்களுக்குள் வாழ்ந்து அவ்வப்போது போய் வருகிற எனக்கே
இப்படி பதற்றமாக இருக்கிறபோது அவைகளுக்குள் வாழ்கிறவர்களின் அனுபவங்களை
சொற்களில் நிரப்ப முடியாததாகவே இருக்கிறது.

மீறப்பட்ட போர் விதிகளையும் இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்களின்
அகதி விதிகளையும் மனிதாபிமான அமைப்பு எனறு சொல்லுகிறவையும் அதிகார
நாடுகளும் அறிந்திருந்தும் கொஞ்சமேனும் மாற்ற முடியாத அதிகாரமற்ற
தன்மையிலும் அக்கறையற்ற தன்மையாலும் இருக்கின்றன. அகதிகளுக்கானதாக
சொல்லுகிற அய்.நாவால் என்ன செய்ய முடியும்? அது இந்த அகதிப்பேரவலத்திற்கு
காரணமானதாக இருக்கிறது. இப்படி இந்த குற்ற நாடுகளின் குற்ற அதிகார
அமைப்புக்களை அடுக்கிக்கொண்டே போக முடியும். தங்கள் சின்னங்களை அவர்கள்
அகதிகளாக எமது சனங்கள்மீது மிக ஆழமாக பொறித்திருக்கிறார்கள். எமது மக்கள்
இந்த அகதிச் சின்னங்களிலிருந்து எப்பொழுது விடுபடுவார்கள் என்ற ஏக்கம்
அந்த மக்களைப்போல எங்கள் பலருக்கு இருக்கிறது.

எமது சனங்களை நிரந்தர அகதிகளாக்கி இந்த வெம்மை மிகுந்த வனங்களில்
நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டாலும் அதனை யாராலும் கேட்க முடியயாது.
இலங்கை அரசு நினைத்தால்தான் மீள சனங்களை நிலத்தில் குடியிருத்தும். அது
நினைத்தால் எமது மக்களின் மண்ணை நிரந்தரமாகவே பறித்து விடும். இலங்கை
அரசு என்பது அதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அவரின் சகோதரரும்
பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபாயராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின்
ஆலோசகரும் எம்பியுமான பசில் ராஜபக்ஷ முதலியவர்களின் அதிகாரத்திற்குள்
இருக்கிறது இந்த விவகாரம். இந்த மூன்று தனிநபர்களாலும் மூன்று
லட்சத்திற்கு மேற்பாட்ட சனங்கள் இங்கு தடுத்து
வைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு கொள்ளப்பட வைத்த சனங்கள்; தாய் நிலத்தை
இழந்துகொண்டிருக்கிறார்கள. கொடுமையாக உலகம் நடத்திய ஒரு யுத்ததின்
விளைவாகத்தான் இப்படி அதிகாரத்தின் முட்கம்பிகள் மக்கள் மீது
பிரமாண்ணடமாகவும் குறுக்கும் மறுக்குமாகவும் பயங்கரமாகவும்
பின்னப்பட்டுள்ளன.

….ஈழத் தமிழன்….
….மதன் ….
.
குவைத்

இந்த கொடுமையை பாருங்கள்…

ஒக்ரோபர் 20, 2009

ithu eppadi irukku

தோழர்களே

ரத்தத்தின் ரத்தங்களே எங்கள் தலைவர் முப்பது ஆண்டுகள் போராடி பெறாததை உங்கள் தலைவர் நான்குநாட்கள் நாடகமாடி பெற்று தந்ததாக கூறுவதை நம்ப தமிழ்நாட்டு தமிழர்கள் ஒன்றும் உங்களைப்போன்று  கே கூ… இல்லை (மன்னிக்கவும் என்னால் ஆத்திரத்தை அடக்கமுடியவில்லை)

நன்றி
சுகுமாரன்
அபுதாபி
இருப்பாய் தமிழா நெருப்பாய்