Archive for the ‘காணொளி’ Category

எல்லாளன் திரைப்படம்

ஜூன் 23, 2010

ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

உலகப் போராளிகள் ச‌ரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர்.

தமிழீழத்துக்கான ஈழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் தீரத்தின், தியாகத்தின் அணையாப் பிரகாசம், எல்லாளன் நடவடிக்கை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்.

ellalan movie

Advertisements

எல்லாளன்

திசெம்பர் 29, 2009

வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் “எல்லாளன்”



http://www.operation-ellalan.com/

விழ விழ எழுவோம்

ஒக்ரோபர் 4, 2009

விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப்
பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச்
சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை
தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, “விழ
விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்” என்ற
பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.
இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக
அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது
சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன்
தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங்கள்
உங்கள் நகரங்களில் வெளியிட்டு, தமிழீழ மக்களின் கருத்துக்களை
வெளிக்கொண்டுவரலாம். உங்கள் நகரங்களில் இப்படத்தை வெளியிட
தொடர்புகளுக்கு:00445601567481
இந்த ஆவணப் படத்திலிருந்து ஒரு பாடல்…


நன்றி : மீனகம்
http://www.meenagam.org/?p=12074