Archive for நவம்பர், 2009

சூரியனைத் துப்பாக்கி துளைப்பதில்லை ….

நவம்பர் 27, 2009

உனக்காக
இதோ …இதோ ஒரு எழுச்சிப் பயணம்!
சென்னையிலிருந்து கன்னியா குமரி!
செல்கிறோம் எங்கள் இதயங்கள் குமுறி!

நீ
எங்கிருக்கிறாய் என்பது எங்களுக்குத் தெரியாது ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை
உலகம் முழுவதும் உணர்ந்திருக்கிறது!

அவர்கள்-
எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான்
அவர்களும் கூட அறிந்து கொள்ளவில்லை!

நீ
தேசத்தை பிரசவிப்பதற்காக அன்றாடம் உன்னையே
ஆயுத சிகிச்சைக்கு
ஆளாக்கிக் கொள்கிறாய்!

அவர்களோ-
ஒரு குழந்தையை கொல்வதற்காகத் தாயின் வயிற்றையே
பீரங்கி கொண்டு பிளக்கப் பார்க்கிறார்கள்!

நீ-
விடுதலையை தேடுகிறாய்;
உன் மக்களுக்கான
விடியலைத் தேடுகிறாய்!
அவர்கள்
உன்னையே தேடுகிறார்கள்!

துப்பாக்கி முனைகளுகுச் சொல்லி வைக்கிறோம்-
சூரியக் கதிர்களை துளைக்க முடியாது!

எமதர்மக் கைகளை எச்சரிக்கிறோம்- வெண்ணிலவை வலை வீசி
வீழ்த்தியவர் கிடையாது!

ஒருவனைப் பிடிக்க ஒரு லட்சம் படையா?
உண்ண மறுத்தால் அதற்கும் தடையா?
உலக சரித்திரம் படித்ததே இல்லையா?

இனிமேல்-
காந்தி சிலைகளில் உள்ள கைத்தடியை அகற்றுங்கள்! அதற்கு பதிலாகத்
துப்பாக்கி ஒன்றை அதன் தோள்மீது மாட்டுங்கள்!

இந்த ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவுக்குத்தான்! ஆமாம்…
அமைதி என்பதற்கான
புதிய அர்த்ததைப் பூமிக்கு தந்ததனால்!

அன்றொரு நாள்-
பிரபாகரன் எனபது பெயராக இருந்தது. இப்போது-
பிரபாகரன் என்பது பிரமிப்பாய் ஆனது! இனிமேல்
பிரபாகரன் எனபது பிரளயமாய் ஆகாதோ?

எங்கள்
இலட்சியக் கனவுகளின் சுமைதாங்கியே!
பொன்னாடை தோள்மீது போர்த்துவதாய்ச் சொல்லி உன்மீது சிலுவை அறைந்தது யார்?

நீ ஏசுவல்ல-
ஆனால்
இறப்பினும் நீ உயிர்த்தெழுவாய்! ஒரு பிரபாகரனாய் அல்ல…
ஒரு லட்சம் பிரபாகரனாய்!

உன்னுடைய
மூச்சுக் காற்று முகாமிட்ட இடமெல்லாம்
பட்டாளம் தனைச்சாய்க்கும் பாசறைகள் உண்டாகும்!

உன்னுடைய
பாதங்கள் நடந்த பாதைகளிலெல்லாம் புல்லும் கூட புலியாக மாறும்!

உன்னுடைய
சுட்டும் விழிச்சுடர் தொட்ட இடமெல்லாம் ஜோதி கருவாகும்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் அங்கே உருவாகும்!

கவிஞர் மு.மேத்தா

Advertisements

பூத்துக்குலுங்கும் புது மலர்கள்

நவம்பர் 26, 2009

அமைவது உறுதி தமிழீழம் – அதை
அழிக்க நினைப்பது மூடத்தனம்
வெடித்துக்கிளம்பும் புலிப்படையை
வென்றவன் எவனும் கிடையாது

தமிழனின் தாயகம் தமிழீழம் -அதை
தட்டிப்பறிக்க நினைப்பவனை
எட்டி உதைப்போம் வாருங்கள்
இளித்தவாயன் தமிழனில்லை

புலிப்படை தோற்றதாய் எவன் சொன்னான் ?
பூவுலகெங்கும் தமிழன் உண்டு
ஒவ்வொரு தமிழனும் பிரபாகரன்
உயிர் எமக்கு வெல்லமல்ல .

கோழைகள் கூட்டு சேர்ந்துக்கொண்டு
கொக்கரிக்கின்றனர் வெற்றி என்று
உரிமையைப் பறிக்கும் ஓநாயை
உலகமே காறி உமிழ்கிறது .

போரில் மடிந்த மாவீரர்
பூத்துக்குலுங்கும் புது மலர்கள்
ஈழத்தாயின் மடி மீது
இமைகள் மூடி உறங்குகின்றார் .

வீர வணக்கம் ! வீர வணக்கம் !
விடுதலைப்புலிகளே வீர வணக்கம் !
ஈழத்தமிழகம் காணும் வரை
இமைகளுக்கில்லை இனி உறக்கம் .

வெல்லுவோம் ! வெல்லுவோம் ! வெல்லுவோம் !
வெற்றி நமதென்று சொல்லுவோம் !
விடுதலைப் புலிகளை அணி திரட்டி
தாயகம் மீட்கச்செல்லுவோம் – ஈழத்
தாயகம் மீட்கச்செல்லுவோம் .

– பூம்பாவை

கிறுக்கல்கள்-20: மாவீரா

நவம்பர் 23, 2009

உயிராயுதமாய்
வில்லோடு அம்பாய்
வீறுக்கொண்டுச் சென்று

வீரத்தை விதைத்து
சோழர் கொடியை
திக்கட்டும் பறக்கசெய்த
வெற்றிப்படையின் வேந்தனே…!

கரும்புலியாய்
களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாய்
எத்தனை காலம்கடந்தும் – என்
தமிழினம் காத்த கடவுளாய்
நான் உன்னை கண்டுகொண்டேயிருப்பேன்…!

கடற்புலியாய்
கடலுக்குள்ளேயும் சென்று
கப்பலையே கவிழ்த்துவந்து

கயவனையும் கலங்கடித்தாய்…
மச்சவதாரமே உன்
மரணத்திற்கு மரணமில்லை
அதை மறக்க எனக்கும் மனமில்லை…!

வான் புலியாய்
வான்தேடி வட்டமிட்டாய்
போராளி இயக்கங்களின்
பேரொளி பயணமாய்
முன்னோடி தமிழனென
வானோடி வானம்பாடிகளாய்
வலம்வந்து வான்புகழை

வையகத்தில் வெளிக் கொணர்ந்தாய்
தமிழனையே தலைநிமிர வைத்த
தமிழ் மகனே…!

ஓயாத அலைகளாய்
ஊருக்குள்ளும் பாருக்குள்ளும்
நம்தமிழ் புகழ்விதை
தூவிய தூயவனே…
கார்த்திகை மாதத்தின்
கலங்கரை விளக்கமே…
என் பூஜையறையின்
கார்த்திகை பூவே…!

உறவாட வேண்டிய இடத்திலேயே
முகாமே சிறைச்சாலைப்போல்
மாறிப்போனதால்
மூச்சுக்குள் உன் ஞாபகம் வந்தபோதிலும்
முடங்கி கிடந்தே
இரவல் வீட்டிற்குள்ளேயே
இறந்துகிடக்கிறோம்
அனாதையாய்…!

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை…
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்

தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை…!

ஈழத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்
மண்ணோடு மடிந்துவிட
வெறும் எலும்பும் சதையுமான
வெற்றுடலில்லையே…

குருதியால் மண்ணில் குளித்து
நரம்புகளால் வேராகி
எலும்புகளால் கிளையாக
விருட்சமாய் நிச்சயம் வெளிவரும்
சுததந்திர ஈழத்தின்
விடுதலை காற்றை சுவாசிக்க…!

நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் – அன்று

தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்…!

நிழலும் வெளிச்சமாகும்போது
இருளைக்கூட தேடித்தான்
பார்க்க நேரிடும்…
எங்கள் வாழ்வும் நிஜமாய்
மாறும்வேலையில்
நிர்கதியான நிலைமாறி
நிம்மதியாய் நித்திரை கொள்வோம்…!

பகைவென்று
சுதந்திரகாற்றை சுவாசிக்க
சிறைவென்று சீற்றத்தோடு
பழிதீர்த்து நமக்கான வழிகாண
சபதமேற்போம் இந்நாளில்…!

உன்னை மறக்கநினைக்கும்

மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை…
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுததந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்

அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா…!

xxx

முட்கம்பி வேலிகட்களுக்குள்ளும்
சுவாசிக்க விருப்பமில்லை
காற்றுக்குள் உன் பிணவாடை…!

ஒட்டுமொத்தமாய் தமிழனை
உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தில்

ஒய்யாரமாய் உருவெடுத்து நிற்கிறது
விகரமான விகார்…!

ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்துவிரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று நாங்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்…!

அம்மா நீ இல்லாத இவ்வுலகில் …..

நவம்பர் 23, 2009

அம்மா உனக்கு உன் மடி என்ற
சிம்மாசனத்தின் மைந்தன் எழுதும் கடிதம் !
நீ சிந்திய வியர்வை துளிகள் மண்ணாகிபோனது – ஏனோ
இன்று என் வியர்வை சிந்தாமல் இருக்கவா !

உன் கடைசி மூச்சிக்காற்றில்
என்னை ஏன் கலக்க மறுத்தாய் -எனக்காக
இவ்வுலகில் வாழ்ந்தவள் நீ ஒருத்தி அம்மா !

உன் இரத்தத்தை எனக்கு கொடுத்து
பத்து மாதம் உயிராக சுமந்தாய் !
உன் பாதங்களில் முள் குத்தினாலும் – என்னை
உன் இடையில் அல்லவா சுமந்தாய் – ஏனோ
இன்றோ பயம் என்னை சுமக்கிறது …..

அம்மா நீ இல்லாத இவ்வுலகில்
எங்கும் எனக்குள் ஒரு தனிமை !
என்னையே என்னால் உணரமுடியவில்லை – ஏனோ
என்னுள் நான் உன்னை உணர்ந்ததாலோ!

அம்மா என்ற ஒரு சொல்லில் முடிந்தவளே,
என் அத்தனை சொற்களுக்கும் நீயே உயிர் மூச்சு !
யாரோ அம்மா என்று கூறும் ஒரு வார்த்தையை
என் செவிகள் கேட்க்கும் பொழுது – ஏனோ
எனக்குள் நீ சிரிக்கிறாயம்மா !

நீ துடைத்து ஏறிந்தது என் வறுமை என்றாலும்
நீ இல்லாத என் வாழ்வில் என்றும் வெறுமை !
உன் மரணநாட்களில் நீ உணர்ந்த வலியை – ஏனோ
என் ஆயுள் முழுவதும் கொடுத்தாயம்மா !

நீ உனக்காக வாழ்ந்த நாட்களை விட
எனக்காக நீ உழைத்த நாட்கள் அதிகம்!
இதோ வாழ பயணிக்கிறேனம்மா ,
உனது கனவுகளை எனது இலட்சியமாக திரையிட !

என் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றினாய்
ஆனால் என் கடைசி ஆசையை மட்டும் – ஏனோ
புரிந்து கொள்ளாமல் போனாயம்மா !
ஆமாமம்மா …. என் மரணப்படுக்கையின் தலையணை
உன் மடி என்று நினைத்தது தவறா !

என் அத்தனை எண்ணங்களுக்கும்
செயல் வடிவம் தந்தாயம்மா !
தினமும் நான் புரிந்துகொள்கிறேன் ,
கண்ணாடி முன் நான் நிற்கையில் ! என் உருவத்திற்கே
வடிவம் கொடுத்தவள் தானே நீ என்று !

அடுத்த ஜென்மம் என்பது மனித
சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றாலும் !
எந்த ஜென்மத்தில் என்னை மகனாக சுமந்தாயோ
அதே ஜென்மத்தில் என் தோள் மீது ,
உன்னை என் மகளாக சுமப்பேன் !

எத்தனை இரவுகள் உண்ணாமல் படுத்தாய்
என் பசியைப் போக்க !
எத்தனை இழிவுகளை சுமந்தாய்
எனது லட்சியங்களை தீயாக மாற்ற !

எத்தனை நாட்கள் நடந்தாய் கால் வலிக்க
என் பிறப்பின் அர்த்தத்தை கூட்ட !
எத்தனைப் போராட்டமம்மா உனக்குள்
என்னை போராளியாக மாற்ற !

எத்தனை வலிகளம்மா உனக்குள்
என் வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க !
எத்தனைக் கனவுகளம்மா உனக்குள்
என்னுள் சந்தோசத்தை மட்டுமே காண !

எத்தனைக் கண்ணீர் துளிகளை பரிசளித்தாய்
என்னை பக்குவப்பட்டவனாக மாற்ற !
எத்தனை எத்தனை சுமைகள் அம்மா உனக்குள்
என்னை நீ மகனாக சுமந்ததால் !

உன் மடியில் சாய்ந்து அழ துடிக்கிறேனம்மா
உன் தோளில் சாய்ந்து அழுவதற்கு முன் !

எனது வாழ்க்கைப் பயணத்தில்
எத்தனை நாட்கள் நான் தனிமையில் நடந்தாலும்
என் தனிமை சொல்லும் உன் மரணத்தின் வலியை !

உன் நினைவுகளை சுமந்த படி பயணிக்கிறேன் ,
எதற்கு ஏன் என்ற கேள்விக்கு முன்
பயணத்தின் இறுதியில் என் லட்சியம் சொல்லும்!
உந்தன் இழப்பையம்மா !

இப்படிக்கு
உன் மடி என்ற சிம்மாசனத்தின் மைந்தன்,
…. பகலவன் ( மதன் ) ….
பஹ்ரைன்

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து!

நவம்பர் 23, 2009
white_spacer.jpg
p110a.jpg”என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!”

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

”நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா… அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.

நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!” – தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

”புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. ‘மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது’ன்னு சொல்ற அம்மா. ‘நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா’ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. ‘கலெக்டர்தானே… ஆயிடுவோம்’னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ… கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

p110b.jpgகாஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, ‘மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை’ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, ‘கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க’ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. ‘சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்’னு பதறுனாரு. ‘கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க’ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, ‘சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?’னு கேட்டாரு. ‘உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்’னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, ‘யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?’ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. ‘நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க’ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

p111a.jpg

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, ‘குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா’ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!” என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ”சொல்லுடா குட்டி… உயர உயரப் பற… வானம் வசப்படும்!” என சொல்லிக் கொடுக்கிறார்.

” ‘உயர உயரப் பற… வானம் ஒரு நாள் வசப்படும்’தான் கரெக்ட்!” – திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

வரலாறு ஒரு நாளும் வாழ்த்தாது – தமிழருவிமண ியன்

நவம்பர் 23, 2009

‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. ‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.

p46.jpg

மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து

81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…?

சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ p48.jpgபோன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.

நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.

‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.

கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.

சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?

வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?

‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

நன்றி – ஜூனியர் விகடன்
(ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் வார்த்தைகளே உண்மையக்கபட்டு, வரலாறாக்கபடும் இந்நேரத்தில் உண்மையை உரக்க சொன்ன அய்யா தமிழருவிமணியன் அவர்களுக்கு கோடானகோடி நன்றி… )

துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?

நவம்பர் 23, 2009

ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை

காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் இப்படியும் ஒரு பக்தியா?
ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு
வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

மச்சேஸ்வரர் கோயிலாம் – அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் – கோயில்
கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.

பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரசமாடினால் முதுமை வந்து முட்டாதாம்-
என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு
வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.

ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம். இன்னொரு பக்கம்
கர்ப்பக்கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.

எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி
மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.

ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம்
வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான்!
இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத்
தேவநாதன்தான் எம்மாத்திரம்!

காஞ்சி சங்கரமடத்தில் நடக்காதவைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?

காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்கிறார்
என்றால், அவாள் சிஷ்யாள் அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?

ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு
திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில்
உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர்
சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர்,
சங்கராச்சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீரும்
கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறினாரே கொட்டியழுது வேதனையின்
சூட்டைத் தணித்துக் கொள்ளவில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே
அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே
அதைப் பார்க்கும்போது இந்த தேவநாதன் விஷயம் அற்பமோ என்று நினைக்கத்
தோன்றுகிறது.

வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன
நடந்தது?

அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள
குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம்
வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!

சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரியான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில்
கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?

இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!

ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்துவம் என்ன? ஆண் – பெண் சேர்க்கையின்
வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?

பெண்கள் நெற்றியில் திலகமிட்டால், அது வீட்டு விலக்கான பெண்ணின்
குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம்
தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்துவத்தைத்
தயாராகவே வைத்துள்ளனரே!

வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள
சிவப்புக் கோடு விஷ்ணுவின் ஆண் குறி என்றும்… அடேயப்பா, எவ்வளவு
அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின்
சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்களும் சரி கற்பழிப்புக் குற்றம் செய்யாத
ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?

காஞ்சிபுரம் தேவநாதன் இப்படியென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன்
கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா!
சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.

தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன்
சிசுனத்தை இழந்தவன் தான் முழுமுதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி
கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவதாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்)
காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த
மாபாதகம் தீர்த்த புராணங்கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள்
தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை
நோக்கினாலும் இத்தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக்
காட்சிகள்தாம்.

அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும்
பரமாத்வாவும் ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள்
எல்லாம் தடபுடலாகவே உண்டு.

சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர்.

வேஸ்யாதர்சனம் புண்யம்

ஸ்பர்சிவனம் பாபநாஸம்

சம்பனம் சர்வ தீர்த்தானாம்

மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருளும் வேண்டுமா?

வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்;
முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்;
உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு
வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.

இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதையை அவாளின் செல்லப் பிள்ளையான கம்பனே
கூறி வைத்திருக்கிறான்.

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால்
பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று
கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது
வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள்.
அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள் வேசியர்களின்
புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும்
வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர்
பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார்

பூசலார் புகுந்துளோரும்

காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப்
பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு
தாண்டினான் என்பதெல்லாம் காமக் குரோதங்களுக்குமுன் கடவுளாவது
கத்தரிக்காயாவது வேதங்களாவது வெண்டைக்காயாவது மதங்களாவது மண்ணாங்
கட்டிகளாவது சர்வம் சரணம் காம சுகப்பவது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப்
பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவாளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா?
கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?

பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!

இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல்
எரிந்து விடும் என்று விவேகானந்தரிடம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த
அர்த்தத்தில் கூறினாரோ தெரியவில்லை இதயத்துக்கும், மூளைக்கும் பாயும்
ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

மின்சாரம் அவர்கள் 21-11-2009 "விடுதலை" ஞாயிறுமலரில்
எழுதிய கட்டுரை

ஆனந்த விகடனின் ஆரிய வெறி — வில்லவன்

நவம்பர் 23, 2009

ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.

”தமிழ்நாடு தமிழர்களுக்கே என அக்காலத்தில் ஓரு கோசம் எழுந்தது. இந்த விபரீதப் போக்கைக் கண்டித்து 29-1-1939 இதழில் எலிவளை எலிகளுக்கே என்னும் தலைப்பில் ஏழுபக்கக் கட்டுரை தீட்டியது விகடன். அதிலிருந்து ஓரு துளி.. ” என்ற முன்னுரையுடன் இப்போது வெளியிட்டுள்ளது.

“வீட்டில் எலிகளின் கூச்சல் அதிகமாய் போயிற்று. எலிவளை எலிகளுக்கே என்று கோசம் போட்டுக் கொண்டே இருந்தன.

வீட்டின் எஜமான் ஓரு கொத்தனை அழைத்து எலிவளை களையெல்லாம் சிமெண்டு போட்டு மூடச்செய்ததால் எலிவளைகள் எலிகளுக்குகே ஆயின.

ஓரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியாக் காரத்தனமாகத்தானே இருந்தாக வேண்டும்”.

ஆனந்த விகடன் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதை இம்மீள் பதிப்பும் அதற்கான இன்றைய முன்னுரையும் உறுதி செய்கின்றன. பூணூல் என்பது வெறும் நூல் அல்ல. அது பார்ப்பனர்களின் வர்ணத்திமிருக்கான நரம்பு என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

1938 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் பேரெழுச்சியாய் நடந்தது. அப்போது பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பேரணி நடைப்பயணமாக சென்னை வந்தது, அவ்வணியினரை சென்னை கடற்கரையில் வரவேற்று மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.இ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் தந்தைபெரியார் எழுப்பிய முழுக்கமே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது. அதன்பிறகு பெரியார் தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் அம்முழுக்கத்தைக் கல்வெட்டில் பதிக்கவேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார். அம்முழக்கத்தை மக்கள் ஆதரித்து முழங்கினர்.

அப்போது ஆரிய ஏடான ஆனந்தவிகடனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. அதனால் ‘எலிவளை ஏலிகளுக்கே ’ எனத் தத்துவம் உதித்தது. தமிழ்நாடு எலிவளையாகவே இருக்கட்டும். அந்த எலிவளை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆரியப் பார்ப்பனர்களே, உங்களுக்குச் சொந்தமான எலிவளை எங்கே இருக்கிறது?

உங்களுக்கு இங்கே என்ன வேலை? வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது? எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் செவியைக் கடிக்கிறாய்.

கல்பிளந்து, மலைபிளந்து, கழனியெல்லாம் ஊருவாக்கி சொந்த மண்ணை வளமாக்கி சொந்த அரசை உருவாக்கி நாடாண்ட தமிழினத்தை என்றும், தமிழர் தாய்நாட்டை எலிவளை என்றும் இன்றைக்கும் கொச்சைபடுத்தும் ஆனந்த விகடனே, 1938-இல் எழுந்த ”தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கம் முடிந்துவிடவில்லை. இன்று மீண்டும் வீச்சோடு எழுகிறது! ”தமிழ்த்தேசத் குடியரசே தமிழர்களின் இலட்சியம்!

திபெத்தியரிடம் காட்டும் கரிசனையை ஈழத் தம ிழர்களிடம் காட்ட மறுப்பது ஏன்?

நவம்பர் 23, 2009

தாய் மொழி, தாயக மண், மூதாதையரின் வரலாறு-இம் மூன்றின் பதிப்பாகிய இன அடையாளங்கள் போன்றவை உயிரோடு ஒட்டியவை. இந்த உண்மையை – பொதுவுடைமை சீன அரசு உணர மறுத்து வருவதாலேயே, திபெத் பிரச்சினை அந்நாட்டுக்கு மிகப்பெரிய களங்கமாக சர்வதேச அரங்கில் நீடித்து வருகிறது.

திபெத் சிறிய நாடாக இருக்கலாம். திபெத் மக்கள் – சீனர்களோடு ஒப்பிடுமிடத்து – எண்ணிக் கையில் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கென தனி மொழியும் – சொந்த நிலமும், பெளத்த நெறி முறை ஆழமாகப் பதிந்த வாழ்க்கை முறையும், 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அப்படியிருக்க, 1958-இல் திடிரென சீன அரசு சுதந்திர திபெத் மீது இராணுவப் படையெடுப்பு நடத்தி திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, திபெத் மக்களின் வெறுப்பை மட்டுமன்றி, நாகரிக உலகின் கண்டனத்தையும் தேடிக்கொண்டது.

சீனாவின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளவேண்டி, திபெத்தியர்களின் ஈடு இணையற்ற சமயத் தலைவரான தலாய்லாமா – இரவோடு இரவாக திபெத்திலிருந்து கால்நடையாகவே மலைப்பாதை வழியாகத் தப்பியோடி வந்து, இந்தியாவில் அடைக்கலம் கோர -, அந்த முறையீட்டை பண்டித நேரு ஏற்றுக்கொண்ட பிறகு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளே வக்கரிப்புக்கு உள்ளாகிவிட்டன. ஆனால், பண்டித நேரு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இமாசலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் தலாய்லாமா தமது பரிவாரங்களுடன் தங்கியிருக்கவும் – அதோடு திபெத்திய அரசை இந்திய மண்ணில் நிறுவி – இங்கிருந்தபடியே ஆட்சி நடத்தவும் இந்திய அரசு அனுமதித்தது.

இதனால், சீனாவின் விரோதத்தை இந்தியா சம்பாதித்ததுக் கொண்டபோதிலும் – மனித சுதந்தி ரத்தை, மனித நாகரிகத்தை மதிக்கும் ஜனநாயக நாடுகளின் நன்மதிப்பை தேடிக்கொண்டது. திபெத் பிரச்சினையில் நேரு காட்டி வந்த அதே கொள்கையை அவருக்குப் பின் வந்த அனைத்து பிரத மர்களும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். திபெத்துக்கு சுதந்திரம் கோரி, தலாய்லாமா எழுப்பி வந்த உரிமைக் குரலுக்கு சர்வதேச அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கவே செய்தது. ஆனால், சீனாவோ, ”திபெத்துக்கு தனி நாடு’ உரிமையை தலாய்லாமா கைவிட்டா லொழிய அவரோடு பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்று மூர்க்கமாக சாதித்து வந்தது.

தலாய்லாமாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்து வந்துள்ளன. ”சுதந்திர திபெத்” என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சீனா ஆத்திரமும் ஆவேசமும் அடைவதைக் கண்டுகொண்ட தலாய்லாமா – ”சீனாவின் ஒரு பகுதியாக நீடித்தபடியே முழு அளவிலான சுயாட்சி உரிமை கொண்ட திபெத் அவசியம்” என்ற அளவுக்கு தமது கோரிக்கையை இதமாக்கிக் கொள்ளத்தயங்கவில்லை. ஆயினும், இந்த கோரிக்கையையும் ஏற்க சீனா அரசுக்கு மனமில்லை. மனமில்லாத போது, பிரச்சினை தீர மார்க்கம் எப்படிப் பிறக்க முடியும்? இந்நிலையில், அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மாமனிதர்கள் – மேதைகள் 8 பேர் அண்மையில் தலாய் லாமாவின் கோரிக்கைக்கு ஆதரவாக கூட்டறிக்கை ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள்.

அந்த கூட்டறிக்கையை – தர்மசாலாவுக்கு வந்து தலாய்லாமாவை சந்தித்த நோபல் மேதைகள் அவரிடம் அளித்ததோடு, ”திபெத்தின் வரலாற்றி லேயே கண்டறியாத இருண்ட கால கட்டத்தில் திபெத்தியர்கள் சொல் லொணாத துன்பங்களுக்கு உள்ளாகிவந்த போதிலும் – இந்தியாவில் குடியேறி தர்ம சாலாவில் சுதந்திரமாக வாழ்வதோடு, திபெத்தியர்களின் மரபுகளும் பண்பாடும் பாதுகாக்கப்படுவதில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருப்பதாக” தலாய் லாமாவை நோபல் மேதைகள் பாராட்டியிருக்கிறார்கள். இத் தருணத்தில் திபெத்தியர்களின் உரிமைகளையும் இன அடையாளங்களையும் பாதுகாக்கும் பிரச்சினையில் முழு ஆதரவு அளித்து வந்துள்ள இந்தியா – எல்லா அம்சங்களிலும் இதைப் போன்ற பிரச்சினை இலங்கையில் ஏற்பட்டுள்ளபோது, நேர்மாறான முறையில் நடந்து காட்டியிருப்பதன் மூலம் தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

திபெத்தியர்களைவிட, ஈழத்தமிழர்கள் இந்திய தேசியத்தின் ஓர் அங்கமான தமிழினத்தோடு இரத்த சம்பந்தமுடைய சொந்த பந்தங்கள்; இன்னும் சொல்வதென்றால், இந்திய தமிழினத்தின் நீட்சியே ஈழத்தமிழர்கள். சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடியில் சிக்கி தங்களுடைய சுயமரி யாதையையும் – இன அடையாளங்களையும் ஈழத் தமிழர் இழக்க விரும்பாததாலேயே – பல காலமாக சமத்துவ உரிமைக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் ‘காந்திய நெறியில்’ ‘ஈழத் தந்தை’ செல்வாவின் மகத்தான தலைமையில் அமைதியான உரிமை இயக்கத்தை நடத்தி வந்தார்கள். ஜனநாயக ரீதியான இந்த இயக்கத்தை சிங்கள அரசுகள் உதாசீனப்படுத்தி வந்தன. அதோடு, ஒரு கட்டத்தில் ஆட்சியாளரின் பின்னணி ஆதரவோடு சிங்கள வெறியர்கள் 1983-ல் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்யத் துணிந்ததையடுத்தே – தங்கள் இனத்தை யும் தாய் மண்ணையும் பாதுகாப்பதற்காக ஆயுதமேந்திய புலிகள் இயக்கம் தோன்றியது.

அந்த இயக்கத்துக்கு இந்திராகாந்தி போன்ற – இந்திய ”மக்களின் நாடிபிடித்து” அரசியல் நடத்தி வந்த தலைவர்கள் முழு ஆதரவைக் காட்டி வந்தார்கள். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு – இலங்கைத் தமிழர் சம்பந்தமான இந்தியக் கொள்கையே வக்கரிப்புக்கு உள்ளாகிவிட்டதால் – அதன் விளைவாக விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றில் ஒன்று – துர்ப்பாக்கியவசமான ‘திருப் பெரும்புதூர் சம்பவம்’. தாய்த் தமிழினத்தையே துக்கத்தில் ஆழ்த்திய – துடிக்கவைத்த சம்பவம். ஆனால், இந்த ”ஒரு சம்பவத்தை” வைத்தே – 50 இலட்சம் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் வக்கிரமான அணுகுமுறையையே இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கியதை, சிங்களப் பேரினவாதம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இதன் ஒட்டு மொத்த விளைவாக, ஈழத்தில் மயான அமைதி நிலவி வருகிறது. ஈழத் தமிழர்கள் 10 இலட்சம் பேர் பல்வேறு நாடுகளில் ”நாடற்ற அகதிகளாக” உழன்று வருகிறார்கள். இந்தக் கொடுமை கண்டு தாய்த் தமிழினம் ஆற்றொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், இப் பிரச்சினையில் தில்லி மந்தகதியிலேயே நடந்து காட்டி வருகிறது. ஆனால், அதே சம்பவத்தில், திபெத்தியர்களுக்கு மாநில சுயாட்சி உரிமை பெற்றுத் தருவதில் அதீத ஆர்வம் காட்டும் இந்தியா – ஈழத்தில் அதே கோரிக்கைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழர்களைப் பொறுத்த அளவில் அலட்சியம் காட்டி வருகிறது. இதன் மூலம், எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தில் பெரிய விளைவுகள் ஏற்படுவதற்கு தில்லி தன்னையுமறியாமலேயே வித்தூன்றிவிட்டது.

நன்றி:’தமிழ் ஓசை’

தியாகத்தில்கூட பிராமணன் தியாகம்! சூத்திர ன் தியாகம்!!

நவம்பர் 19, 2009

வ.உ.சி.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).

சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் வ.உ. சிதம்பரனார் செய்த
தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொருவர்
இந்தியாவில் பிறந்ததில்லை.

ஆனாலும், வ.உ.சி. சூத்திரர்தானே.அதனாலே அவரது தியாகம்கூட மலிவு
சரக்காகிவிட்டது.

‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில்,
கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்,
அவருக்குத்தான் “வெற்றிலைப் பாக்கு’’ வைத்து அழைத்து முதல் இந்தியன்
கவர்னர் ஜெனரல் என்ற மகுடம் சூட்டப்பட்டது; என்ன செய்வது, காந்தியாரின்
சம்பந்தியாகவும் ஆகிவிட்டாரே!

இன்னொரு குறிப்பு “குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளைக்
கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான்
நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி
ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக்
கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும்
தனக்குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை
அரசு நிராகரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத்
தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்தையும், சுதந்திரப் போராட்டத்துக்காக இரட்டை ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. தமிழரின் தியாகத்தையும் “மனச்சான்று’’
உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட “பிராமணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’ என்கிற
இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது
போலவே தகிக்கிறது.

வ.உ.சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்திலும், சுயமரியாதை இயக்கம்,
நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட
மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மடைதிறந்த
தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.
உதாரணமாக முன்பெல்லாம் “இந்து’’ பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது,
திரு. கஸ்தூரி ரெங்க அய்யங்கார் “வாடா சிதம்பரம்!’’ என்றழைத்துப்
பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு
நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம்பிள்ளை, சவுக்கியமா?’’ என்றழைத்தார்
என்கிறார் வ.உ.சி.

வ.உ.சி. நினைவு நாளில் இந்த வரலாற்றுக் குறிப்புகளை அசை போடுவோமாக!

மயிலாடன் அவர்கள் 18-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை