Archive for ஒக்ரோபர், 2009

ஆண்ட இனமே மண்டியிட்டு சாக துணிந்து விடாத ே!

ஒக்ரோபர் 31, 2009

ஆண்ட இனமே
மண்டியிட்டு சாக துணிந்து விடாதே!

இமயத்தை தொட்டவனும் நீ தான்
சூழ்ச்சிகளை தோற்கடித்தவனும் நீ தான்!

நீ பிறந்த தஞ்சையில் சாயாத கோபுரம்,
அங்கே உன் இனத்தின் கோபுரமே சாய்ந்து விட்டதடா !

பிச்சை பாத்திரத்தை தூக்கும் முன் துணிந்தெழு
துணிந்தவனுக்கு பிச்சை பாத்திரமும் ஆயுதம் தான்!

எத்தனை எத்தனை அரசியல் நாடகங்கள்
தமிழா நீ ரசிக்க அல்ல
உன் தமிழச்சிகளின் கற்பை சூறையாட!

அரசியல் தர்மத்தில் அநாகரிகமே மேலோங்க
என் பிறப்பின் தர்மத்தில் நாகரிகத்தை தேடுகிறேன்!

அழியாத நினைவுகளை விட
அழிக்கப்பட்ட நம் இனம் சொல்லும்

விடுதலையின் வேட்கையை !

வாழ்வே வழி இல்லாத நம் இனம்,இனி
சோற்றில் கை வைக்க முடியாது ,என
நினைத்து விட்டான் போலும்,புரிந்துகொள்
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது!

நிற்காத நதிகளும் இல்லை,
உருகாத பனி மலைகளும் இல்லை,
வா தோழா எழுவோம் இயற்கைக்கு முரண்பட்டு!

கம்பனாய் இருந்தால் கவி பாடி இருப்போம் ,
வள்ளுவனாய் இருந்தால் திருக்குறள் இயற்றி இருப்போம்,
எங்களை மாற்றி விட்டிர்கள் புயலாக!
இதோ புறப்பட்டு விட்டோம் இனி புலியாக!

எம் தலைவன் இறந்து விட்டான்???,சந்தோஷப்படாதே
பல ஆயிரம் தலைவன் பிறந்து விட்டானடா!

ஈழத் தாயே கண் கலங்காதே,
இதோ புறப்பட்டு விட்டோம் ,
உனக்கும் என் தமிழ் தாய்க்கும்,
உள்ள உறவை வெளிகாட்ட!
தாயே நீங்கள் சுடர் விட தயாராகுங்கள் ,
நாங்கள் சுட்டு தள்ள தயாராகி விட்டோம்!

பிணம் திண்ற பக்சேக்களே,
தமிழனின் எச்சிலில் ஒளிந்த கருநாகமே,
இறையாண்மையை சொல்லி என் இனத்தை
இரையாக்கிய இத்தாலி அரசியே,
உலகுக்கெல்லாம் காலம் பதில் அளிக்கும்,
உங்களுக்கு நாங்கள் பதில் அளிப்போம்!
உங்களின் அத்தனை நாடகங்களுக்கும்
முடிவுரை எழுதப்போவது நாங்கள்தான்!

சினம் கொண்ட பாம்பு பதுங்கியதில்லை,

மூட்டிய தீ அணைவதுமில்லை ,
பதில் சொல்ல காத்திருங்கள் இரண்டிற்கும் !

ஐயோ பதறுகிறது என் நெஞ்சு ,என் தமிழச்சி
ஒரு மார்பில் குழந்தைக்கு பால் கொடுக்க ,மறு மார்பில்
இறந்த தன மற்றொரு குழந்தையை வாரி அணைக்கிறாள்!
இதுவன்றோ தமிழனின் பரிதாபம்!
கலங்காதே தமிழச்சியே!

பசி என்று வந்தவனுக்கு
விருந்தளித்த நம் இனம்,
இன்று நம் பசிக்கு அடுத்தவனிடம்
பிச்சை எடுக்க வைத்தது யாரோ !

மாசு படிந்த வேசி கூட்டங்களுக்கு
தலை சாய்க்க மாட்டோம் !
என் இனத்தின் பிணத்தை திண்ண வேசிகளின்
தலையை எடுக்காமல் விட மாட்டோம்!
வீழ்ந்தாலும் மாய்ந்தாலும்
நம் தாய் மண்ணை இழ்க்க மாட்டோம் !

ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு! நீ ஒன்றுபட்டால்

உன்னை மிஞ்ச ஆளில்லை !
உன்னை வெல்ல உலகமில்லை!

தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,

ஈழத் தமிழன்
….மதன் ( பகலவன் ) ….
பஹ்ரைன்

Advertisements

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீ னமும்

ஒக்ரோபர் 31, 2009

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

I. புகுமுன் உங்களோடு …

ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை
முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்
பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.

ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம்
மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய
தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண்
தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.

சிங்களர்களின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் கூற்றுப்படி பார்த்தாலும்
சிங்களர்கள் இலங்கையில் வந்து குடியேறியவர்களே. சிங்களர்களின் முதல்
அரசன் ஒரு கப்பலில் இலங்கையில் வந்து குடியேறியதாகக்
குறிப்பிடப்படுகிறது.

ஈழத்து உணவும் என வரும் பட்டினப்பாலை வரிகள் சோழ அரசன் முதலாம் கரிகாலன்
காலத்தைச் சேர்ந்தது. முதலாம் கரிகாலனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 3 ஆம்
நூற்றாண்டு. முதலாம் கரிகாலன் ஈழத்தில் நாட்டிய வெற்றிகள் மகாவம்சத்தில்
குறிப்பிடப்பட வில்லை. எனவே சிங்களரின் இலங்கை குடியேற்றமும்,
மகாவம்சமும் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பது தெளிவாகிறது.

வெளியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய சிங்களர்கள் நாளாவட்டத்தில்
தமிழர்களை விரட்டியடித்து அவர்கள் பரப்பைச் சுருக்கினார்கள். இலங்கையின்
விடுதலைக்குப் பின்னர் தமிழர்கள் மேல் வன்முறையையும்,
காழ்ப்புணர்ச்சியையும் கட்டவிழ்த்து விட்டு ஈழத்திலிருக்கும் 30 லட்சம்

தமிழர்களையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம் என்ற வார்த்தை சிங்களக்
காடையர்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

ஈழத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் சிங்களருக்கு அடிமையாக இருக்க வேண்டும்
என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த சிங்கள அரசு சமீப காலமாகத் தமிழர்களை
அழிக்கும் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த இன ஒழிப்பை, ஈழத்தமிழர் தம் அடிமைத்தளையை மாற்றப் பிறந்தது தான்
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்.

இந்த உரிமைப் போராட்டத்தை வரலாற்றுக் காலத்திலிருந்து பார்ப்போம்.
அதன்பின் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தை அதன் பலம், பலவீனத்தை

ஆராய்வோம்.

II. ஈழம் … சரித்திரச் சான்றுகள்

எந்த ஒரு நாட்டுக்கும் தனி வரலாறு உண்டு. ஈழத்துக்கும் உண்டு. ஈழத்தில்
தமிழ் வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு.

ஈழத் தமிழகத்துக்கும் தனித் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுக்
காலத்துக்கும் முற்பட்டது. ஐராவதம் மகாதேவன், தொல்பொருள் ஆய்வாளர்.

மெகாலித்திக் சான்று

மனித வரலாற்றைச் சொல்லும் பொழுது வரும் காலங்களில் ஒன்று மெகாலித்திக்
காலம். இந்தக் காலங்களில் இறந்த மனிதர்களை அடக்கம் செய்வதில் சில
முறைகளைக் கையாண்டார்கள். தமிழர்களின் முதுமக்கள் தாழி பிரசித்தி
பெற்றது.

யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள அனகோடையில் உள்ள புதையல் இடத்தில்
எடுக்கப்பட்ட வெள்ளி முத்திரை முக்கியமானது. C14 அளவீடு மூலம்

பழங்காலத்தை அளவிடுகிறார்கள். தமிழர்களின் மெகாலித்திக் சான்றுகளை C14
மூலம் 1050 கி.மு. முதல் 500 கி.மு. வரை அளவிடுகிறார்கள்.

அனக்கோடையில் கிடைத்த வெள்ளி முத்திரையில் உள்ள எழுத்து கோ வே தா என்ற
தமிழ் எழுத்து.

பானையில் தமிழ் எழுத்து

தமிழ் பிராமி எழுத்துக்களைக் குகைகளிலும், பானைகளிலும் ஆரம்ப காலத்தில்
பொறித்தார்கள். காலம் கி.மு. 200க்கு முன்னால். யாழ்ப்பாணத்துக்கு
அருகில் உள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறித்த
உடைந்த மண் பானைகள் ஏராளம். அவற்றில் ஒன்றில் பொறிக்கப்பட்ட வார்த்தை
வேலன்.

ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட காசுகள்

ஒரு நாடு நாகரீகம் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பொருளாதாரத்துக்காகக்
காசுகள் வெளியிட முடியும். ஈழத்தில் தமிழர் ஆட்சி சீரும் சிறப்புமாக
இருந்ததை அங்கு அரசாண்ட தமிழ் மன்னர்கள் வெளியிட்ட தமிழ் பொறித்த 200
கி.மு. காலத்தை ஒட்டியுள்ள மூன்று ஈயக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் முறையே மகா கட்டன், கபடி கட்டன்
மற்றும் உத்திரன்.

இவை ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மன்னர்களின் காசுகள்,
கண்டுபிடிக்கப்பட்ட இடம் இலங்கையின் தென் கிழக்கே உள்ள திசாமகரம.

பாண்டியர் காசுகள்

பாண்டியர்கள் தான் ஈழத்தோடு நட்போடும் சுமூகமான உறவோடும் இருந்தார்கள்.
சங்க காலப் பாண்டியர் கால செப்புக் காசுகள் 4 ஈழத்தில்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னன் விசயன்

முதல் ஈழத்தமிழ் மன்னனாய் அறியப்படும் விசயனின் காலம் புத்தர்
நிர்வாணமாகிய கி.மு. 478. விசயன் பாண்டியர் குலப் பெண்மணியை
மணந்தானென்றும், தன் மாமனாகிய பாண்டியனுக்குப் பரிசுகள் வழங்கி
மகிழ்ந்தானென்றும் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார்

இதே விசயனைத்தான் சிங்களத்தின் முதல் மன்னன் என்று மகாவம்சம் வரலாற்றைத்
திரித்துக் கூறுகிறது.

குகை கல்வெட்டுக்கள்

தமிழன் முதலில் தன் தமிழை எழுத்தாகக் குகைகளில் தான் பொறித்தான்.
தமிழனுடைய குகை கல்வெட்டுக்கள் ஈழத்தில் நிறைய உண்டு. ஈழத்தில் உள்ள
குகைக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழருடையதே என்று கூறுகிறார்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பார்க்கர்.

இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பம்பரகஸ்தவலாவில் உள்ள குகைக்
கல்வெட்டுக்களில் தமிழனின் எழுத்து சிறப்பாக உள்ளது. தமிழனுக்கே

உரிய ல அங்கு இடம் பெறுகிறது.

ஈழத்தில் இருந்தவர்கள் தமிழர்கள், ஆகவே அங்கு அவர்கள் எழுத்துத் தானே
இருக்கும். இலங்கையில் உள்ள குகை கல்வெட்டுக்களின் காலம் கி.மு. 2ம்
நூற்றாண்டு.

தமிழ் மன்னர்களும் ஈழமும்

கடலுக்கப்பாற் பட்ட தலைத் தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும்
இடையே உள்ள சங்ககால உறவு, பெரும்பாலும் சோழர், சேரர், படையெடுப்பாக
இருந்துள்ளது . பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும்
அத்துடன் மன்னர் மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் இருந்துள்ளது.

சோழர் ஈழப்போர் பாடல்கள்

1. ஈழமும் தமிழ்க்

கூடலும் சிதைத்து – பராந்தகச் சோழன்

2. தென்னன் நாடும்

ஈழமும் கொண்ட திறல் – கண்டராதித்த சோழன் – 9ம் திருமுறை

3. மதுரைத் தமிழ்ப் பதியும்

ஈழமும் கொண்ட

இகலாளி – குலோத்துங்கச் சோழன் – உலா

4. ஈழம் எழுநூற்றுக்

காவதமும் சென்று எறிந்து – ராசராச சோழன் உலா

5. முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும் – ராசராசன் மெய்கீர்த்தி

முக்கியமான வரிகள். ராசராசன் போர் செய்தி தான் ஈழத்தில் எழுநூற்றுக் காத
தூரம் சென்று , முரண் தொழில் சிங்களர் ஈழமண்டலமும். சிங்களர் ஈழ மண்டலம்
என்று ராசராசன் காலத்தில் தமிழ் ஈழத்தையும், சிங்களர் ஈழ மண்டலத்தையும்
பிரிக்கிறார்கள் பாருங்கள். அத்துடன் நிற்காமல் முரண் தொழில் சிங்களர் ஈழ
மண்டலம் என்று அவர்களுடைய தவறான தொழிலையும் சொல்கிறது இந்த வரிகள்.

சிங்களரின் நூலான மகாவம்சத்தில் கரிகாலன் (கி.மு. 3 ம் நூற்றாண்டு)
ஈழத்தை வென்றதைக் குறிப்பிடவில்லை. அதற்குப் பின் வந்த மற்ற இலங்கை

வரலாற்று நூல்கள் சோழன் கரிகாலனின் வெற்றியைக் குறிப்பிடுகின்றன.

ஆக, மகாவம்சம் என்பது இன்றைய தொலைக்காட்சிகளைப் போல தனக்கு வேண்டியதை,
பாசிட்டிவாக உள்ளதை மட்டும் எழுத்தாக்கியிருக்கிறது. சில

தொலைக்காட்சிகளைப் போல பொய்கள் நிறைய கலந்திருக்கிறது.

பாண்டியன் நெடியோன்

சங்க காலத்திலேயே பழங்காலப் பாண்டியருக்கு முற்பட்ட பாண்டியனாக நெடியோன்
விளங்குகிறான். அவனது தலைநகர் ப·றுளி ஆற்றின் கரையில்

அமைந்திருந்தது.

ப·றுளியாற்றுடன் பன்மலை படுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள – சிலப்பதிகாரம்

நெடியோன் காலத்துக்கு அப்பால் இலங்கைத் தமிழகமும், தலைத் தமிழகமும்
கடலால் பிரிவுற்று வேறு வேறு நிலப்பகுதிகளாயின.

மெகஸ்தனிஸ்

கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய வருகை காலம் கி.மு. 3ஆம்
நூற்றாண்டு. வரலாற்றுப் பதிவாளர்.

இவர் இந்தியாவைப் பற்றி பல குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். அதில்
முக்கியமான ஒன்று தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு ஆறு

ஓடிக்கொண்டிருந்தது. ஆக தலைத் தமிழகமும், ஈழத் தமிழகமும் கடலால்
பிரிக்கப்படுமுன் ஒன்றாகத்தான் இருந்தன.

தலைத் தமிழகத்தையும் ஈழத்தமிழகத்தையும் பிரித்த கடல்கோள் கிமு 69ல் என்று
குறிப்பிடப்படுகிறது.

கெளதம புத்தர்

அரசராயிருந்து, திருமணம் செய்து மகனையும் பெற்றெடுத்த பின்னர்
துறவியானவர் சித்தார்த்தர்.

கயா எனும் நகரில் போதி மரத்தடியில் 12 ஆண்டுகள் ஆழ்ந்த தியான நிலையில்
இருந்தார். அப்பொழுது ஒரு நாள் இனிய ஞானம் கிடைக்கப்பெற்றார்.
அக்கணத்திலிருந்து புத்தர் என்றும் சாக்கிய முனி என்றும்
அழைக்கப்பட்டார்.

புத்தருடைய போதனைகள் அகிம்சையையும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு
காட்டுவதையும் அடிப்படையாகக் கொண்டவை. புத்தருடைய காலம் கி.மு. 567 –
கி.மு. 487

அசோகர்

மெளரிய அரசர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் அசோகர். தலைநகரம்
பாடலிபுத்திரம். கயாவிற்கு அருகில்.

முதலில் சிவனை வழிபட்டவர், கிமு261 ல் நடைபெற்ற கலிங்கப்போரில் மக்கள்
இறந்ததை காயமுற்றதை அடுத்து மனம் மாறி பெளத்த மதத்தைத் தழுவினார்.

புத்த சமயம் பரப்ப அசோகர் பெரும்பாடு பட்டார். பல நாடுகளுக்கு புத்த
துறவிகளை அனுப்பி வைத்தார்.

அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு
அனுப்பி புத்த சமயக் கொள்கைகளை பரப்பினார். அசோகருடைய காலம் கிமு273 /
கிமு232.

அசோகருடைய கல்வெட்டுக்களில் தமிழகத்தை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலந்தருவா

இங்கு உள்ள புத்த விகார் தான் இலங்கையில் உள்ள பழமையான புத்த மத
அடையாளம். இதனுடைய காலம் 2000 ஆண்டுகள்.

கண்டி புத்தரின் பல்

புத்தரின் பல் இருக்கும் கண்டி நகர் இலங்கையில் புத்தர்களின் புனித இடமாக
உள்ளது. புத்தரின் பல் இலங்கை வந்தடைந்த ஆண்டு கி.பி. 4ம் நூற்றாண்டு.

III. தமிழகத்தில் ஈழம் பற்றிய குறிப்புகள்

மதுரைக்கு அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகைக் கல்வெட்டு
காலம் கிபி 3ம் நூற்றாண்டு.

எருகோ டூர் ஈழகுடும்பிகன் போலாலயன்

செய்தா ஆய்ச்சயன் நெடு சாத்தன்

ஈழத்திலிருந்து வந்து ஈழகுடும்பிகன் கல் படுக்கை செய்ய பொருளுதவி
செய்திருக்கிறான்.

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை

பட்டினப்பாலையின் காலம் சோழ மன்னன் முதலாம் கரிகாலனுடைய கி.மு. 3ம்
நூற்றாண்டு.

IV. ஈழவர்கள்

கேரளாவில் தென் திருவாங்கூரிலும், மத்திய திருவாங்கூரின் சில
பகுதிகளிலும் இருக்கின்றனர். ஈழத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். ஈழம்
இலங்கைக்குரிய

தொன்மையான பெயராகும். ஈழத்திலிருந்து புறப்பட்டே ஈழவர்கள் முதன்முதலாக
மலபாரை வந்து அடைந்ததாகக் கருதுகின்றனர்.

ஈழவர்கள் கேரளாவின் மேற்குக் கடற்கரையில் வந்து குடியேறியதாகவும் ஒரு
வழக்கு வழங்கி வருகிறது. ஈழவர்கள் என்ற பட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
வேளாளர் சிலர் தரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிபி 824ல் உள்ள ஒரு பட்டயத்தில் (வரலாற்றுச் சான்று ஆவணம்) ஈழவர்களின்
பணி தரிசு நிலங்களில் மரங்களை நடுவதே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

V. சேரன் செங்குட்டுவன் கிபி 2ம் நூற்றாண்டு

பிந்தைய கால சேர அரசர்கள் பெளத்த மதத்தை ஆதரித்ததாகச் சொல்லப்படுகிறது.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்துச் சிறப்பித்ததாகவும்,
அப்படி நடந்த ஒரு விழாவில் சிங்கள மன்னன் கயவாகு கலந்து கொண்டதாகவும்
கூறப்படுகிறது.

ஆக, ஈழவர்கள் ஈழத்திலிருந்து கேரளாவின் மேற்குக் கரையோரம் குடியேறியது
கயவாகுவின் காலத்திற்குப் பின்தான்.

ஈழவர்கள் தான் முதன்முதலாக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள்.
அவர்களும் முரண் தொழில் சிங்களரின் வன்முறையால் புலம்பெயர்ந்ததாக எண்ண
இடமுண்டு.

VI. சங்கமித்திரை – மணிமேகலை

இருவரும் சரித்திர காலப் பெண்டிர். சங்கமித்திரை பேரரசர் அசோகரின் மகள்.
மணிமேகலை சிலப்பதிகாரக் கோவலனின் மகள்.

சங்கமித்திரை இலங்கையில் காலடி வைத்தது புத்த மதத்தைப் பரப்ப, காலம்
சுமார் 240 கிமு. சங்கமித்திரை இலங்கையில் கால்பதித்த இடம் மணிபல்லவம்
துறைமுகம். அங்கு அவளை இலங்கை அரசன் தேவனாம்பிரிய தில்ஸன் வரவேற்றதாக
மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

மணிபல்லவம் ஈழத்தின் யாழ்ப்பாணத்துக்கு வடகோடியில் உள்ள ஒரு சிறு தீவு.
தமிழ் நாட்டில் இருந்து கிழக்கே கடல் மார்க்கமாக நெடுந்தூரம் போகிற
கப்பல்கள் வந்து தங்கி குடிநீர் எடுத்துக்கொள்ளும் இடமாகவும் இருந்தது.
இங்கு மகாவம்சத்தால் பொய்யாக உரைக்கப்பட்டது. சங்கமித்திரையை

தேவானம்பிரிய தில்ஸன் வரவேற்றது. தேவானம்பிரியன் என்பது பேரரசர் அசோகரது
இன்னொரு பெயர். சங்கமித்திரை வருகைக்குப் பின் புத்தமதப் பீடிகை
அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் அசோகரால் அனுப்பப்பட்ட புத்த பிக்குகள்.

கோவலன் மகள் மணிமேகலை பெளத்த மதத்தைத் தழுவிய பின்னர், மணிபல்லவஞ் சென்று
அங்கிருந்த புத்த பாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி
வந்தாள்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட வளைவாணன் மகள் பீலிவனையைப் பற்றியும் மணிமேகலை
காவியம் குறிப்பிடுகிறது.

சங்கமித்திரைக்கு 150 வருடங்கள் பிந்தியது. மணிமேகலை காவியம். அதில்
புத்தபாத பீடிகையைக் குறிப்பு இருக்கிறது. ஈழத்தமிழ் மன்னனைப் பற்றிய

குறிப்பிருக்கிறது. மணிபல்லவம் பற்றி எழுதியிருக்கிறது. சிங்களனை ஏன்
மணிமேகலை குறிப்பிடவில்லை? மகாவம்சத்தைப் போல பொய்யுரைக்க

மணிமேகலைக்குத் தெரியவில்லை.

VII. பொய்யுரைகள் நிறைந்த மகாவம்சம் – கி.பி. 500

மகாவம்சம் எனும் இலங்கையின் வரலாற்றை விளக்கும் நூல் எழுதப்பட்ட காலம்
கிபி 5ம் நூற்றாண்டு. எழுதியவர் மகானம

பொய்யுரைகளால் தமிழர் வரலாற்றை மறைத்து எழுதப்பட்டது இந்த நூல்.

சங்க காலத்துக்கும் முந்திய ஈழத்தமிழர்களை, அதற்கடுத்த ஈழத்தமிழர்களை
வந்தேறிகளாகக் காட்டும் கபடநூல் அது.

கி.மு. 478 ல் ஈழத்திலிருந்த தமிழ் மன்னன் விசயன், சிங்களரின் முதல்
மன்னனாம் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அசோக
சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரையை மணிபல்லவம் துறைமுகத்தில் கி.மு.
240 – கி.மு. 230 ல் வரவேற்றது சிங்கள அரசன் தேவனாம்பிரிய தில்ஸனாம்.

சங்கமித்திரை இலங்கையில் கால் வைத்த பிறகுதான் புத்தமதம் இலங்கைக்குள்
கால் வைத்தது. தேவனாம்பிரியன் என்பது அசோகரது பெயர். மணி பல்லவம்
ஈழத்தமிழ் அரசர்கள் ஆண்ட பகுதி.

துட்டகமுனு – ஏலாரன், போருக்குப் பின் தான் ஈழத்தைப் பற்றியே
சிங்களருக்குத் தெரியும். இந்தப் போரின் காலம் கி.மு. 1ம் நூற்றாண்டு
அல்லது கி.மு. 1ம் நூற்றாண்டின் பின் பகுதி. இன்றும் ஈழத்தின்
நிலப்பரப்பு இலங்கை ராணுவத்திற்கு முழுமையாகத் தெரியாது.

ஆக, விசயன் சங்கமித்திரையை தேவானம்பிரிய தில்ஸன் வரவேற்றது ஆகியன
மகாவம்சத்தின் பொய்யுரையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இன்னும் எத்தனை பொய்யுரைகள் மகாவம்சத்தில் அடங்கியிருக்கின்றன என்பது
கிபி 5ம் நூற்றாண்டில் எழுதிய மகானமக்குத் தான் தெரியும்.

VIII. ஈழத்தமிழர் சரித்திரம் – ஒரு ஆய்வு

ரத்தினச் சுருக்கமாக, ஈழம் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழர் பூமி.
சிங்களர்கள் அவர்களது மகாவம்சத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி வந்தேறிகள்.
எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்பது இன்னும் நிச்சயிக்கப்பட
வில்லை.

சங்கமித்திரை புத்த மதத்தைப் பரப்புவதற்கு இலங்கை வந்தாள். புத்த மதமம்
ஈழத் தமிழர்கள் மனதை மாற்றி மதம் மாற வைக்கவில்லை.

சங்கமித்திரை பின் வந்த மணிமேகலையிலும் சிங்கள அரசர்கள் குறிப்பு இல்லை.

துட்டகமுனு தான் முதலில் தமிழர் பகுதிக்கு வந்த சிங்கள மன்னன். காலம்
கி.மு. முதல் நூற்றாண்டு.

சங்கமித்திரை, மணிமேகலைக்கு காலத்தால் பிந்தியவன் துட்டகமுனு.

டச்சுக் காரர்கள் போர் புரிந்தது ஈழத்தமிழ் மன்னனான பண்டார வன்னியனுடன்.

டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்களுக்குப் பின் இலங்கையை ஆண்ட
இங்கிலாந்துக் காரர்கள் இலங்கையைச் சுதந்திர நாடாக அறிவித்த போது
தமிழர்கள் அவர்கள் உரிமையை மறந்து சிங்களர்களிடம் இலங்கையை
ஒப்படைத்தார்கள். அதன் விளைவுகளை, சிங்கள வெறியை, தமிழ் இன ஒழிப்பை
இப்போதும்

காண்கிறோம்.

ஈழத் திருநாட்டில் நாணயங்களை வெளியிட்டு ஆண்ட தமிழினம் இன்று
ஒடுக்கப்பட்டு விட்டது.

IX. தமிழர் மீதான சிங்களர் இனவெறி

தமிழர்கள் மீதான இனவெறி சிங்களர்களுக்கு என்றும் மாறாது.

சிங்களர்களின் வெறியால் முதலில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது,
இன்றைய கேரளாவில் இருக்கும் ஈழவர்கள்.

அடுத்து இல்லத்துப் பிள்ளைமார் என்று தமிழகத்தில் அழைக்கப்படும் ஈழத்துப்
பிள்ளைமார் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தனர்.

அடுத்து 1983 கறுப்பு ஜீலையில் சிங்களரின் வெறியாட்டத்தால் உலகெங்கும்
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்.

இலங்கையின் ஆட்சி மொழியாக, ஒரே மொழியாக, சிங்களரின் மொழி சிங்களம்
பிரகடனப்படுத்தப்பட்டது. ஆண்டு 1956

1958ல் தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதல்
நடந்தது.

அடுத்து மிகப்பெரிய அளவில் தமிழர்கள் மீதான சிங்கள வெறியர்களின் இனவெறித்
தாக்குதல் நடைபெற்ற ஆண்டு 1977.

யாழ்ப்பாணத்திலுள்ள நூலகம் தமிழர்களுக்கானது. ஈழத்தமிழர்கள் தங்கள்
தாய்மொழி தமிழிலான நூல்களைப் படித்து வந்தனர். தமிழர்கள் தமிழைப்
படிப்பதா? சிங்களர்களுக்கு எப்படிப் பொறுக்கும் ? நூலகம் சிங்களர்களால்
தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீயில் எரிந்த நூல்கள் 90,000. ஆண்டு 1981.

ஈழப்போர் என்று சிங்கள இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட இனவெறி
அடக்குமுறை அனைவரும் அறிந்ததே.

X. மறக்க முடியாத கறுப்பு யூலை 1983

ஈழத்தமிழர்கள் மனதில் ஆறாத வடுவாக இன்றும் இருப்பது 1983ல் ஜூலை மாத
இறுதியில் நடந்த ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரமான
தாக்குதல். ஜூலை 24ந் தேதி ஆரம்பித்து ஒரு வாரம் இலங்கை முழுவதும்
தமிழர்கள் மீது நடந்த வெறித்தாக்குதல்.

சிங்கள வெறியர்கள் நடத்திய இந்தத் தாக்குதலை இலங்கை அரசும் இலங்கை காவல்
துறையும் அடக்க முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழர் உயிர்கள்,

தமிழர் உடைமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை அரசு வெளியிட்ட இறந்த தமிழர்களின்
எண்ணிக்கை 3000. உண்மையில் 10,000 பேருக்கு மேல்

கொல்லப்பட்டனர்.

வெளிக்கடை சிறையில் கைதிகளாக இருந்த 54 தமிழர்கள் சிங்கள
சிறைத்துறையினரின் உதவியால் சிங்களக் கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு

உயிரிழந்தனர்.

தமிழ் ஆடவர்களை சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கி அழகு பார்த்த
கொடுமையும் நடந்தது. ஈழத்தமிழ்ப் பெண்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் ?

ஈழத்தமிழர்களின் மீதான இனஒழிப்பு இலங்கையின் சிங்கள அரசின் துணையுடன்
நடந்தேறியது.

கருப்பு ஜீலையால் ஈழத்தமிழர்கள் இலங்கையில் இனி வாழ முடியாது என்ற
சூழ்நிலை உருவானது. அந் நிலையில் சாரைசாரையாக ஈழத்தமிழர்கள் இலங்கையை
விட்டு வெளியேறினார்கள். இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் அகதிகள்
முகாம்களில் தங்கவைக்கப் பட்டனர். இன்னும் அகதிகள் முகாம்களில் தான்
இருக்கிறார்கள்.

இலங்கையை விட்டு வெளியேறி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்,
தாய்லாந்து, அய்ரோப்பாவில் சுவிஸ், நார்வே, டென்மார்க், யேர்மனி,
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கு
குடியேறி அந்த நாடுகளில் கிடைத்த வேலையைப் பார்த்து அங்கேயே குடியுரிமை
பெற்று தாய்த் தேசத்தின் மேல் உள்ள பற்றால் ஈழ விடுதலைக்காக ஆதரவு
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாயகத்துக்காக, தாயகத்தை நினைத்து
கண்ணீர் விடுபவர்கள் இவர்கள். இவர்கள் கண்ணீர் ஈழத்தில் தமிழனுக்கு சம
உரிமையைப் பெற்றுத் தருமா?

XI. தனித்தமிழ் ஈழம் பிரகடனம்

மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் சொந்த மண்ணில் சிங்கள அரசாங்கத்தால்,
சிங்களக் காடையர்களால் அடிமையாக, உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில்
வாழ்வதைப் பொறுக்காத ஈழத் தமிழர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் தான்
தனித்தமிழ் ஈழம் அடைவோம் என்ற வார்த்தையை பொதுக்கூட்டத்தில் மக்கள்
ஆரவாரத்துக்கிடையில் கூறினார்.

XII. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், பிரபாகரனும்

விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம். சென்னை, தமிழகம், இலங்கை என்று
விடுதலைப் புலிகள் அலைந்து கொண்டிருந்த நேரம்.

பிரபாகரன் அப்பொழுது முதல்வராயிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களைச் சந்திக்க நேரம் கேட்கிறார். சந்திக்கிறார்கள். கதைக்கிறார்கள்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார்? எங்களுக்கு
ஆயுதம் வாங்க நிதி உதவி வேண்டும் என்கிறார் பிரபாகரன். எம்ஜிஆர் எவ்வளவு
தொகை ? பிரபாகரன் 2 கோடி ரூபாய் எம்ஜிஆர் நாளைக்கு வாங்க

அடுத்த நாள் பிரபாகரனும் பாலா அண்ணன் & மற்றைய தலைவர்களும் எம்ஜிஆரைச்
சந்தித்து 2 கோடி ரூபாய் பெற்றுக் கொள்கிறார்கள். அப்பொழுது எம்ஜிஆர்
நீங்கள் விடக்கூடாது, எதிரிகளுடன் போராட வேண்டும். ஆயுத உதவி எல்லாம்
செய்கிறேன் என்று சொல்கிறார்.

இந்த சம்பவத்தைப் பிரபாகரனே பேட்டியாக சொல்லியிருக்கிறார். யூ ட்யூப்பில்
இப்பொழுதும் பார்க்கலாம்.

பிரபாகரன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு 2 கோடி ரூபாய்ங்கிறது
எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை, அதை வச்சுத்தான் எங்கள் இயக்கம்
வலுவானது.

XIII. இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல்

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படப் பாடல் ஒன்று "அச்சம்
என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா" அதில் வரும் வரி

"தாயகம் காப்பது கடமையடா"

விடுதலை உணர்வைத் தூண்டும் இந்தப் பாடலை ஒலிபரப்ப சிங்கள இனவாத அரசு
தடைவிதித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இந்தப் பாடலை அப்படியே வைத்து காட்சிகளை மட்டும்
விடுதலைப் புலிகள் தொடர்பான காட்சிகளாக வைத்துக் காணொளியாக

வைத்திருக்கிறார்கள்.

XIV. விடுதலைப் புலிகள்

ஈழத்தமிழர்களை அவர்களின் அடிமை நிலையை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு
காட்டியவர்கள் விடுதலைப் புலிகள்.

தமிழனைத் தொடாதே தொட்டால் புலிகள் வந்து அடிப்பார்கள் என்ற பயத்தைச்
சிங்களர்களிடம் உண்டாக்கி வைத்திருந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

நான்கைந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஆயுதம் ஏந்திய போராளி
இயக்கமாக உருவானது. 30 வருடங்கள், சிங்கள இலங்கை அரசின்

கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருந்த இயக்கம்.

உலகிலேயே வான்வழித் தாக்குதல் நடத்திய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள்
அமைப்பு தான்.

தலைமைக்குக் கட்டுப்பட்ட போராளிகள், இவர்களின் சிறப்பம்சம் சீருடை &
உயிரிழந்த போராளிகள் தினமாக நினைவு கூறப்படும் மாவீரர் நாள்.

இவ்வளவு சிறப்பம்சம், பொருளாதார உதவிகள் இருந்தும் தங்கள் குறிக்கோளை
எட்ட முடியாததற்கு காரணங்களாக பல உள்ளன.

முதலில் இயக்கத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஒழிக்கப்பட்டனர்.
ஆலோசனை சொன்னவர்கள் அழிக்கப்பட்டனர்.

அடுத்து, மற்ற போராளிக் குழுக்களை இயக்கத்தினர் அரவணைத்துச் செல்லவில்லை.

1990க்குள் மற்ற போராளி இயக்கங்களை, அதில் உள்ளவர்களை அழித்து ஒழித்தனர்.

1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து 28000 முஸ்லீம்களை வெளியேற்றியது
இயக்கத்தினர் செய்த மிகப்பெரிய தவறு.

அடுத்து செய்த தவறு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை.
மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் இந்திய
அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழக அரசியல்வாதிகளால் முடியாமற் போனது.

இவை எல்லாவற்றையும் விட இயக்கத்தினர் சரிவைச் சந்தித்தது கருணாவின்
பிரிவிற்குப் பின்பு தான். இயக்கமே சிறிது உடைந்தது. கருணாவுடன் ஏற்பட்ட
கருத்து வேறுபாடு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வித்திட்டது.

கருணாவை, காட்டிக் கொடுத்த கருணா என்று கூட சொல்லலாம். சந்திரிகா காலம்
வரை விடுதலைப் புலிகளை அவர்களது இடங்களைப் பற்றி சிங்கள அரசுக்கு எதுவும்
தெரியாது.

கருணா பிரிவுக்குப் பின் கருணா இலங்கை அரசின் கைக்கூலியாக மாறிய பின்
தான் போராளி இயக்கத்தினர் பின்னடைவைச் சந்தித்தனர். ஈழப்போர் IV ன்
கடைசிக் கட்டத்தில் கூட கருணா சொல்றார், தலைவர் தப்பித்துப் போக மூன்று
இடங்கள், வழிகள் உள்ளன என்று. இயக்கத்தினரின் பேரழிவிற்குக் காரணம்
கருணாவின் ஸ்கெட்ச்.

கருணாவுக்கு இயக்கத்தில் உரிய இடம் கொடுக்கப்படாததால் தான் அவர்
அங்கிருந்து விலகினார் என்று என்ன இடமிருக்கிறது.

ஆயத பலம், தொடர்பு சாதனங்கள், படை பலம் இருந்தும் போராளிகள் இயக்கம்
தங்கள் இலக்கை அடையாத காரணங்கள்

மற்றவர்களை அரவணைத்துச் செல்ல வில்லை.

சகிப்புத்தன்மையுடன் செயல்படாதது.

மிகவும் வருந்தத்தக்க விடயம், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட,
துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்.

XV. முள் வேலிக்குள் 3 லட்சம் பேர்

ஈழப்போர் iv ன் விளைவாக உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தோர் 3 லட்சம் பேர்.
இவர்கள் முள் வேலியால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான கட்டுக் காவலில் இருக்கும் இவர்களில் பலரை
இனவெறி சிங்கள அரசு இன ஒழிப்பு செய்கிறது.

இந்த 3 லட்சம் பேரை அவர்களது சொந்த இடத்திலேயே மீண்டும்
குடியமர்த்துவதாகக் கூறும் சிங்கள அரசு அதை இன்னும் முழுமையாகச்
செயல்படுத்த

வில்லை. எனவே இலங்கை சிங்கள அரசுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க
ஆரம்பித்திருக்கின்றன.

XVI. இனவெறி சிங்கள அரசுக்கு உதவிகள்

பசுத்தோல் போர்த்திய புலியாக உலக நாடுகளிடம் வேஷம் போடும் இனவெறி பிடித்த
அரசுக்கு உதவி செய்ய உலக நாடுகள்

30 வருடங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புணர் நிர்மாணத்துக்கு
உதவி கேட்கிறது சிங்கள அரசு. அப்படி உதவியாக வரும் தொகை சிங்கள

பூமியை வளமாக்கச் செலவழிக்கப்படுமே தவிர ஈழத்துக்காகச் செலவழிக்கப்
படுவது மிகவும் குறைவான தொகையாக இருக்கும். கண் துடைப்பு நாடகமாக
இருக்கும்.

XVII. ஈழப் போராட்டத்தின் பலவீனம்

1. அரசியலமைப்பு

2. ஜனத்தொகை

3. காவலர்கள், இராணுவம்

4. ஈழப் போராட்டத்தில் மக்கள்

5. ஒற்றுமை இல்லை

6. கருணா & கிழக்கு மாகாணம்

7. தொப்புள் கொடி உறவுகள்

8. பொருளாதாரம்

அரசியலமைப்பு

அரசியல் ரீதியாக தலைத் தமிழகமும் ஈழத்தமிழகமும் பிரிந்திருக்கிறது.
இந்தியாவிற்குள் தமிழகம் மாநிலமாக வருகிறது. ஈழத் தமிழகம் இலங்கையின்

பகுதியாக வருகிறது.

ஆக, ஒரு நாடு என்ற அளவில் தான் பார்க்கிறார்களே ஒழிய, மொழி ஒன்றாக
இருந்தும் நாடுகளால் பிளவு பட்டு நிற்கும் ஒரே மொழி மக்களாகப்

பார்க்கவில்லை, பார்க்க மாட்டார்கள்.

ஜனத்தொகை

இலங்கையின் மக்கள் தொகையில் 74 சதவிகிதம் சிங்களர்கள். அதுவே அவர்களுக்கு
மிருகத்தனத்தைக் கொடுக்கிறது.

தமிழர்கள் சதவிகிதம் 15 தான். குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அதுவே
அவர்களுக்குப் பயத்தையும் பலவீனத்தையும் கொடுக்கிறது.

இஸ்லாமியர் ஜனத்தொகை 7 லிருந்து 8 சதவிகிதம். 1990 அக்டோபர் மாதத்தில்
யாழ்ப்பாணத்திலிருந்து 28,000 முஸ்லீம்கள் தமிழ்ப் போராளிகளால்

வெளியேற்றப் பட்டனர். ஆக, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் ஆதரவும் தனி
ஈழத்துக்குக் கிடையாது.

காவலர்கள், இராணுவம்

இலங்கை அரசின் காவல்துறையும், இராணுவமும் முழுக்க முழுக்க
சிங்களர்களுக்கானதே. தமிழர்களுக்கு இலங்கை அரசின் காவல்துறையிலும்,

இராணுவத்திலும் வேலை கிடையாது. இது இன வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தற்பொழுது கருணா பிரிவினருக்குக் காவல் துறையில் வேலை கொடுத்திருப்பதாக
ஒரு செய்தி, அதுவும் அடிமட்ட வேலை, இது எந்த அளவுக்கு உண்மை ?

ஈழப்போராட்டத்தில் மக்கள்

ஈழத்துக்கான போராட்டத்தில் ஈழ மக்கள் ஈடுபடவில்லை. பார்வையாளர்களாகவே
இருந்து வருகின்றனர்.

மக்கள் போராடும்போது தான் அந்தப் போராட்டம் வெற்றி பெறுகின்றது.
ஈழப்போராட்டத்தில் இதுவரை போராடியவை அமைப்புகளும், போராளிகளும் தான்.

மக்கள் அமைதியான வாழ்க்கையைத் தான் விரும்புகிறார்கள். ஆயுதங்கள்
வாங்குவதற்குச் செலவிட்ட பணத்தை, போராளிகள் மக்கள் நலனுக்காக

செலவிட்டிருந்தால், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு ஈழத் தமிழர்களுக்கான
சம உரிமைகள் கிடைத்திருக்கும்.

ஈழ மக்கள் மனதில் ஈழத்துக்கான எண்ணம் இருக்கிறது, எழுச்சி இல்லை.

ஒற்றுமை இல்லை

போராளிகளிடம் சம உரிமைக்கான ஈழப் போராட்டத்துக்கு ஒற்றுமை இல்லை. 1948
முதல் இதுவரை 38 போராளி அமைப்புகள் எதாவது ஒரு வகையில் ஈழ மக்களுக்காகப்
போராடி இருக்கின்றன.

இத்தனை அமைப்புகள் உண்டாகியும், அமைப்புகள் உருவான நோக்கம் நிறைவேறியதா?
ஏன்? போராளி அமைப்புகள் அனைத்தும் தங்களை முன் நிறுத்தவே முயன்றன.

போராளி அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரளவே இல்லை.

கருணா & கிழக்கு மாகாணம்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தது ஈழத் தமிழர்களுக்கு,
தனி ஈழம் என்ற போராட்டத்துக்கு பின்னடைவு என்றால் அது மிகையல்ல.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது இது இந்தியாவில் வட மாநிலங்கள்
வளமாகவும், தென் மாநிலங்கள் வளம் குறைவாக இருப்பதைக் குறித்து அரசியலில்
பேசப்படும் வார்த்தை. தமிழகத்திலும் இதே போன்ற வடக்கு வாழ்கிறது, தெற்கு
தேய்கிறது சூழ்நிலை உள்ளது.

ஈழத்திலும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என்ற பிரிவு இருப்பது
வேதனைக்குரிய விஷயம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியவில்லை.

போராளிகளுக்கு எதிரான போரில் இராணுவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது
கருணா என்பது முக்கியமான விடயம்.

தொப்புள்கொடி உறவுகள்

தலைத் தமிழகத்து தமிழர்களை ஈழத் தமிழர்கள் குறிப்பிடும் வார்த்தை
தொப்புள்கொடி உறவுகள்.

தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரல் மட்டும் தான் கொடுக்க முடிகிறதே தவிர
ஆதரவுக் கரம் நீட்ட முடியவில்லை.

ஈழத்திலிருந்து உதவிக்குரல் கேட்கும் போது விரைந்து செல்ல பாண்டியனோ,
சேரனோ இன்று இல்லை. காரணம் ஆதிகாலத்து மண உறவுகள், அரசியல் உறவுகள்
தற்போது இல்லை.

இந்த தொப்புள் கொடி உறவை நினைத்து ஏங்கும் ஈழத் தமிழர்களை தலைத்
தமிழகத்தில் எப்படி நடத்துகிறார்கள் ? ஒரு உதாரணம்.

இலங்கை அகதிகளுக்கான பி.ஏ.பி.எல். சட்டப் படிப்பு முடித்த ஒரு இளைஞர்
வக்கீல் தொழில் நடத்த அனுமதி இல்லை. வயிற்றுப் பாட்டுக்கு இப்பொழுது

கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்.

ஈழப் போராட்டத்துக்காக இங்கே மேடையில் முழங்கும் அரசியல் வாதிகள், திரை
உலகினர் உண்மையில் ஈழத் தமிழரின் சம உரிமைக்காக என்ன

செய்கிறார்கள் ? ஈழப் பிரச்சனை குறித்து அவர்களது காரசாரமான பேச்சுகள்
அவர்கள் சுயலாபத்துக்காகவா ? அல்லது உண்மையிலேயே உள்

மனத்திலிருந்தா ?

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு
அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ?

தொப்புள் கொடி உறவுகளான தமிழகப் பொது மக்களுக்கு ஈழப் போர் IV க்குப்
பின்தான் ஈழத் தமிழர்களைப் பற்றிய கவனம் திரும்பியிருக்கிறது. அது பண்டைய
கால உறவாக தோள் கொடுக்க உருவாகுமா ?

பொருளாதாரம்

ஈழத் தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரியது. பல்வேறு இன ஒழிப்பு
நடவடிக்கைகளால் அவர்களது பொருளாதாரம் முடங்கி உள்ளது.

அவர்களுக்கான அடிப்படையான கட்டமைப்பு உருக்குலைந்து கிடக்கிறது. சம
உரிமைக்காக, பிரதிநிதித்துவத்துக்காக போராட அவர்களது பலவீனமான

பொருளாதாரம் இடம் கொடுக்காது.

தீவிரவாத முத்திரை

ஈழத்துக்கான போராட்டத்துக்கு, சம உரிமைக்கான நடவடிக்கைக்குத் தீவிரவாத,
பிரிவினை முத்திரை குத்தப்பட்டு உள்ளது.

ஈழப் போராளிகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 32. ஒரு
இனத்துக்காக, மொழி சார்ந்த இனத்துக்கான சமஉரிமைப் போராட்டம் உலக

நாடுகளால் தீவிரவாதமாக, பிரிவினையாக எண்ணப்படுகிறது.

XVIII. ஈழப் போராட்டத்தின் பலம்

1. பூர்வீக பூமி

2. புலம் பெயர்ந்த தமிழர்கள்

3. அரசுக்குப் போராளிகள் மீதான பயம்

4. மீள் உருவாக்கம் (அ) மீள் எழுச்சி

5. கலையப் போகும் நல்லவன் வேஷம்

பூர்வீக பூமி

ஈழத்தமிழர்களின் ஒரே பலம் இது தான்.

சிங்களர்கள் தான் இலங்கையில், வெளியிடத்தில் இருந்து வந்து
குடியேறியவர்கள்.

ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வீகக் குடிகள், குடியமர்த்தப் பட்டவர்கள்
அல்ல.

துட்டகமுனு (கி.மு. 49) காலத்திலிருந்து சிங்களர்கள் அவ்வப் பொழுது
ஈழத்தைக் கைப்பற்றுவதும் பிறகு அங்கிருந்து தமிழர்களால் விரட்டியடிக்கப்

படுவதுமாகத் தான் இருந்திருக்கிறது.

ஆங்கிலேய அரசு செய்த வரலாற்றுப் பிழையால் சிங்களவர்களின் இனவெறி; ஈழத்
தமிழர்களை சம உரிமை இல்லாமல், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் ஈழத்
தமிழர்களை அடக்கி வைத்திருக்கிறது.

சொந்த மண்ணில் அடிமையாய் வாழும் ஈழத் தமிழர்களை அடிமைத் தளையில் இருந்து
விடுவிக்கப் போராளிகள் எடுத்த முயற்சி, பல காரணங்களால்

நிறைவுபெற வில்லை.

ஆனாலும் சரித்திரத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, ஈழத் தமிழர் வாழ்க்கை
மீண்டும் வலுப்பெற்று உயிர் பெறும். அது காலத்தின் கட்டாயம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள்

கண்ணீரும் கம்பளையுமாக ஈழத்தை விட்டு 1983 இனக் கலவரத்தில்
வெளியேறியவர்கள் இவர்களுடைய பங்களிப்பினால் தான் போராளிகளின் பொருளாதாரம்
1984-85ல் சீரடைந்தது.

ஈழத் தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் நிறைவேறுவது இவர்கள் கையில் தான்
இருக்கிறது.

தாயகத்திற்காகத் தங்களை வருத்தி நிதி உதவி செய்யும் இவர்கள்
வணக்கத்துக்குரியவர்கள்.

ஈழத்தைச் சுற்றியே உலவும் இவர்களது மனம் தான் ஈழப் போராட்டத்துக்கான
மூலதனம் & பலம்.

சமீபத்தில் ஈழ மக்களுக்கு இவர்கள் அனுப்பிய 800 டன் நிவாரணப் பொருட்கள்
வணங்காமண் (கேப்டன் அலி) கப்பல் மூலம் சென்று பல பிரச்சினைகளைச்
சந்தித்துத் தற்சமயம் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

அரசுக்குப் போராளிகள் மீதான பயம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். ஈழப்போர் IV
முடிவுக்கு வந்த பிறகும், ராஜபக்சே கூட்டத்திற்கு எந்த இடத்தில் இருந்து

போராளிகள் தாக்குவார்களோ என்ற பயம் விலகவில்லை.

எனவேதான் முள் வேலிக்குள் அடைபட்டிருக்கும் 3 லட்சம் பேரில் பலர் போராளி
என்ற முத்திரையில் காணாமல் போகிறார்கள். வெள்ளை வேனும் இன ஒழிப்பு
நடவடிக்கையில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.

உள் நாட்டில் போராளிகளைத் தேடும் சிங்கள அரசு, வெளி நாடுகளிலும்
போராளிகளைத் தேடுகிறது. இது போராளிகளை ஒழிக்க என்று சொல்லப்பட்டாலும்,
போராளிகள் மீதான பயம் சிங்கள அரசை விட்டு அகலவில்லை என்பதையே
எடுத்துக்காட்டுகிறது.

மீள் உருவாக்கம் (அ) மீள் எழுச்சி

அடிமைத் தளையை அகற்ற அறவழியிலான ஈழத் தமிழர்களின் போராட்டம் உருவாகும்.
சில காலம் ஆகும்.

அடுத்த கட்ட அறவழிப் போராட்டம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறும்.
சிங்களர்களின் இனவெறியைத் தோலுரிக்கும். மக்களின் எழுச்சியாக மீள்

உருவாக்கம் பெறும். சம உரிமை, பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம் சிங்கள
அரசை வீழ்த்தும்.

ஈழத் தமிழர்களின் மகிழ்ச்சி, மீள் எழுச்சியின் மூலம் மீள் உருவாக்கம்
பெறும்.

கலையப் போகும் நல்லவன் வேஷம்

உலக நாடுகளில் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நல்லவன் வேஷம் போடும்
சிங்கள அரசின் வேஷம் காலத்தினால் அழிக்கப்படும். அவர்களே அவர்கள் வேஷத்தை
அழிப்பார்கள்.

அவர்களது இனவெறி பிடித்த ஜேவிபி அமைப்பு மீண்டும் தன் சுய உருவத்தைக்
காட்டும். ஜன நாயகப் பாதையில் பயணிப்பது சிங்களவர்களுக்குப் பிடிக்காது.

அகிம்சையையும், அமைதியையும் போதிக்கும் புத்த மதத்தில் உள்ள
சிங்களர்களுக்கு அமைதி, அகிம்சை பிடிக்காது. அதுவரை காத்திருந்து
பார்ப்போம்.

XIX. நிறைவுரை

ஈழம் தமிழர் பூமி. சிங்களவர்கள் வந்தேறிகள். இலங்கைக்கு சுதந்திரம்
வழங்கியபோது சிங்களர்களிடம் ஆட்சியை இங்கிலாந்து அரசு கொடுத்தது
வரலாற்றுப் பிழை. சிங்களரின் இனவெறி என்றும் ஓயாது. இத்தனை இடர்பாடுகளைத்
தாண்டி தமிழ் ஈழ மக்கள் சம உரிமை அனுபவிக்க, சுதந்திரமாக காலம் கனிய
வேண்டும். ஈழத் தமிழர்களும், அறவழிப் போராட்டத்தில் இழந்த சம உரிமைகளைப்
பெற்று மீள் எழுச்சியடைய வேண்டும். தமிழ் ஈழம் மீள் உருவாக்கம் பெற
வேண்டும். அதற்கான காலம் கனியும்.

http://muniappanpakkangal.blogspot.com/2009/10/blog-post_26.html

ஏமாறுவதற்கு என்றே பிறந்தவன் தமிழன்

ஒக்ரோபர் 30, 2009

தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !

தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் பிறர் தள்ளப் பயணிக்கும் நிலையிலும்
ஈழத் தமிழருக்காகப் பேசவும் அவர்களை விலை பேசவும் விமர்சிக்கவும் மனம்
கொண்ட துணிச்சல் மிக்கவர் தமிழக முதலமைச்சர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

சிங்களத்தோடு ஒத்துப் போகவும் ஈழத் தமிழரை மட்டுமல்ல இந்தியத் தமிழரையும்
கொன்று வரும் மகிந்த அரசைத் துதிபாடித் துணை நிற்கும் துணிச்சலும்
அவருக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். கறுப்புச் சட்டையில்
புரட்சி செய்து இன்று காவித் துண்டில் தமிழரின் மரண காவியம் படைக்கும் பண்பாளர்.

எங்கே மகிந்தவை உலக நாடுகள் ஈழத் தமிழின அழிப்புப் போரில் இழைத்த
போர்க் குற்றங்களுக்காக போர்க் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தி விடுமோ
என்ற கவலை அதில் முக்கிய பங்களிப்புச் செய்த இந்திய மத்திய அரசுக்கும்
மத்திய அரசியல் முக்கிய பங்காளியான கலைஞருக்கும் ஏற்படுவது இயற்கையே.

இதன் காரணமாகவே இந்தியப் பாராளுமன்றக் குழு என்ற பெயரில் தி.மு.க.
தேர்தல் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை அவசர அவசரமாக தாமாகவே
இலங்கைக்கு அனுப்பி வைத்தார் அல்லது மத்திய அரசின் முக்கியமாகச் சோனியா
அம்மையாரின் ஆணையை ஏற்றுச் செயற்பட்டார் எனினும் தவறில்லை.

இவர்களின் தேவை ஈழத் தமிழனின் உயிரோ உடமையோ அல்ல, மாறாக மகிந்த
சிக்கிவிடக் கூடாது அப்படிச் சிக்கிவிட்டால் இறுதிக் கட்டப் போரில்
இந்தியாவின் பங்களிப்பு உலகின் கவனத்துக்குக் கொண்டு வர இலங்கை அரசு
தயங்காது என்பது இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஐ.நா.வில்
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட உள்ள காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தியப் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இலங்கை விடையம்
விவாதிக்கப்பட வேண்டும் எனக் காட்டிய ஆர்வத்தை முறியடிக்கவுமே கலைஞரின்
இம்முயற்சி என்பது அங்குள்ள எதிர்க் கட்சிகளின் குற்றறச்சாட்டாக உள்ளது.
வட மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை
அடக்கவும் இப்படியான ஒரு நாடகம் தேவையாக இருந்தது.

இந்தியத் தொலைக் காட்சி ஒன்றின் செய்மதி விமர்சகர் இதனை பாராளுமன்றத்தில்
எதிர்கட்சிகள் எடுக்கும் நிலையில் ஒரு உண்மையான பாராளுமன்றக் குழு
உருவாகி அதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனில்
அது உலக அளவில் பாரிய தாக்கங்களை ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி
விடும் அதனைத் தடுக்கவே குறிப்பிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் குழு
உருவானது என்பற கருத்தைத் தெரிவித்தார். இக்கருத்தை நாம் இன்னும் ஒரு படி
மேலே போய்ப் பார்ப்போமேயானால் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா., அமெரிக்கா போன்ற
நாடுகளின் இலங்கைக்கு எதிரான அண்மைக்கால அறிக்கைகளும் போக்குகளும் தமிழர்
சார்பாகவும் சிங்களத்துக்கு எதிராவும் அமைய முக்கிய காரணியாக இருப்பது
இடம் பெயர்ந்த தமிழரின் மீளக் குடியமர்வும் அவர்கள் துயருறும் முட்கம்பி முகாம்களுமே.

இவற்றை வெளி நாட்டவர் பார்த்துவிடவோ அவை பற்றி எதுவும் கேட்டுவிடவோ
கூடாது என்பதில் இலங்கை இந்திய அரசுகளுக்கு அதீத கவனம் உண்டு என்பதை
முதலிலேயே குறிப்பிட்டுள்ளோம். எனவே அவை பற்றிய நற்சான்றிதழ் இலங்கைக்கு
மட்டும் அல்லாது இந்தியாவுக்கும் பெரும் நன்மை அளித்து விடும் என நினைப்பது நியாயமே.

இந்தக் குழு புறப்படும் முன்னர் செய்தியாளருக்குத் தெரிவிக்கையில்;
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் தமது தரப்பான எல்லா ஏற்பாடுகளும்
தயார் நிலையில் உள்ளன எனத் தெரிவித்தமை இலங்கை அரசின் முழு ஈடுபாடும்
இதன் பின்னணியில் இருந்ததைக் காட்டுகிறது.

கொழும்பில் இவர்கள் விருந்துண்டு கொண்டாடிப் பொன்னாடை போர்த்திய கண்
கொள்ளாக் காட்சியையும் காளைபோல் சென்ற திருமாவளவன் மகிந்தவால்
காயடிக்கப்பட்ட காளையாக மீண்டதையும் கலைஞரும் கனிமொழியும் மணக்கும்
தமிழால் தமிழன் பிணக் குவியல் மேல் மகிந்த புகழ் பாடி செம்மொழி திருவிழா
எடுப்பதும் எம்முன் விரியும் காட்சிகள்.

* கலைஞர் தொலைக் காட்சியில் அவரது கரகரத்த சிம்மக் குரலில் “
தமிழர்களே ! தமிழர்களே! என்னைக் கல்லில் கட்டிக் கடலில் போட்டாலும்
தெப்பமாக மாறி உங்களைக் காப்பேனே அல்லாது உங்களை ஒரு போதும் கவிழ்த்து
விடமாட்டேன்“ என்று ஒலிப்பதை இலவசமாக இந்தியத் தமிழன் கேட்பதோடு புலம்
பெயர் ஈழத் தமிழரும் பணம் கொடுத்துக் கேட்கும் கொடுமை இன்னும் பல
ஆண்டுகள் தொடரும். ஏன் என்றால் தமிழன் ஏமாறுவதற்கு என்றே பிறந்தவன்.

அன்று சரத் பொன்சேகர தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என விமர்சித்ததை
இன்று எவராவது நினைத்துப் பார்த்தால் ,சரத் பொன்சேகா எத்தனை துல்லியமாக
இவர்களை எடை போட்டுள்ளார் என்பது தெரியும். இன்னும் தான் எம்மவரில் பலர்
கலைஞரைப் பகைக்காதே தூற்றாதே இந்தியாவே எமது ஆபத்பாந்தவன்
எனப்பரிதவிப்பது பாவமாகத் தெரிகிறது. அற்பத் தமிழா உனக்கு வலிக்கிறது என அழக்
கூடவா பிறரது அனுமதி வேண்டும்?

த.எதிர்மன்னசிங்கம்.

வேண்டும் தமிழ் ஈழம்

ஒக்ரோபர் 30, 2009

வேண்டும் தமிழ் ஈழம்

ஈழத்து வேந்தன்
எதிர்ப்போருக்குக் காலன் என் தமிழன் இராவணன்
இறுதி வரை போரிட்டான்.

அன்று தொடங்கிய ஆக்கிரமிப்பு இன்றுவரை தொடர்கிறது
ஈழத்தில் !

குலத்தை அழிக்கும்
கோடாரிக் காம்புகளாய் அன்று வீடணன்
இன்று கருணா

கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு கொண்டாட்டம் -அவன்
குடிக்கின்ற இரத்தமெல்லாம் தமிழ் இரத்தம் .

நம் இரத்தங்கள்-அங்கே
நடைப்பிணங்கள்
நம் சோதரிகளோ-அங்கே
சீருடை கயவர்களால்
குதறப்படுகிறார்கள்

வீடு, குடும்பம்
உயிர் ,உடைமை
சொத்து ,சுகம்
எல்லாம் அவர்களுக்கு
கனவாய் போனது

செத்தது போக
மிச்சம் இருக்கும்
எலும்புக் கூடுகளோ
முள் வேலிக்குள் முடங்கிப்போனது

உலகில் அழிந்து வரும்
உயிரினங்களின் பட்டியலில் இன்று தமிழினம் !

இந்த இழிநிலைக்கு
பின்னாலும் இருக்கின்றோம் தமிழர்களாய்

நடுங்க வைத்த
தமிழன்-இன்று
நடுங்குகிறான்

நாமமது தமிழர் என
வாழ்கின்றார்
சீச்சீ … -வெட்கக்கேடு
புறப்பாட்டு பாடியவன்
தமிழன் என்றால்
புலிக் கொடியை நாட்டியவன் தமிழன் என்றால்
கரிகாலன் வழிவந்த
தமிழன் என்றால்
கண்ணீரைத் துடைத்தெழுவோம்

ஓய்ந்து விடவில்லையடா
எங்கள் உரிமைப் போர்
மாய்ந்து விடவில்லையடா எங்கள் மாவீரன்
வீரத்தின் இன்னொரு பேர் எது தெரியுமா ?
பிரபாகரன்
-காட்டுக்கோட்டை . கண்ணதாசன்

”பிரபாகரன் தயார்!” — நெடுமாறன்

ஒக்ரோபர் 30, 2009

ழத் தமிழர் பிரச்னையை அணையாத தீபமாகக் கொண்டுசெலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல்ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச் சரடுவைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் கருணாநிதிக்கு முதல் எதிரியானார்!

‘முள்வேலி முகாமில் இருந்து மூன்று லட்சம் தமிழர் களை முழுமையாக வெளியே அனுப்பு’ என்ற முழக்கத் துடன் டாக்டர் ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் மற்றும் நெடுமாறன் ஆகிய நால்வரும் தமிழகத்தின் நான்கு பகுதிகளில் இருந்து புறப்பட்டு பிரசாரம் செய் கிறார்கள். இந்த ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்த நெடுமாறனைச் சந்தித்தோம்…

p14a.jpg

”தமிழக எம்.பி-க்கள் ஈழத்து முகாம்களை நேரில் பார்த்துத் திரும்பிய பின்னால், அங்கே இருக்கும் மக்கள் அவரவர் வீடுகளுக்குப் படிப்படியாக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். இது தூதுக் குழுவுக்கும் கருணாநிதிக்கும் கிடைத்த வெற்றிதானே?”

”அப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை! கடந்த மாதம் செப்டம்பர் 15-ம் தேதி கிழக்கு மாகாண முகாமில் இருந்த மக்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் சென்றது சிங்கள ராணுவம். ஆனால், நடுவழியில் வேறு முகாமில் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இரண்டாயிரம் பேர் முகாமில் இருந்து விடுவித்ததாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தங்களது வீடுகளுக்குப் போய்ச் சேரவில்லையே? இதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், யாழ்ப்பாணம் முகாமில் இருந்த 568 பேர், அவர்களது வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்ததாகச் சொல்லப்பட்டது. அவர்களும் போய்ச் சேரவில்லை. அது மாதிரிதான் இப்போதும் நடக்கிறது. இந்த உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்ல அங்கு நடுநிலையாளர்கள் யாரும் இல்லை.”

”யாருமே பார்க்க முடியாத முகாம்களை, தமிழக எம்.பி-க்கள் போய்ப் பார்த்ததே சாதனை அல்லவா?”

”அங்கே உள்ள தமிழர் கூட்டமைப்பு எம்.பி-க்கள், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர், ஐ.நா. அதிகாரிகள், சர்வதேசப் பார்வையாளர்கள் என யாரையும் அனுமதிக்காத ராஜபக்ஷே, கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அனுமதி கொடுத்திருப்பதன் உள்நோக்கம் என்ன?

தமிழக எம்.பி-க்கள் அனைத்து முகாம்களையும் போய்ப் பார்த்தார்கள் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல. முகாமில் உள்ள அனைவரின் பெயர்ப் பட்டியலையும் வாங்கி, தங்களுக்கு விருப்பமான பெயர்களைச் சொல்லி, அவர்களை அழைத்து கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் ராணுவம் கூட்டிவைத்த மக்களிடம் கருத்துக் கேட்டால், எப்படி உண்மையாக இருக்க முடியும்?

கருணாநிதிக்கு எம்.பி-க்கள் கொடுத்த அறிக்கையில், ‘அனைவரும் ஒரே உடையுடன், அழுக்கு உடையுடன் இருக்கிறார்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மதிப்புள்ள உடைகளை அவர்களுக்கு அனுப்பிவைப்பதாக கருணாநிதி பார்வையிட்டு, இங்கு புகைப்படங்கள் வந்தனவே. அந்தத் துணிமணியாவது ஒழுங்காகக் கிடைத்தனவா என்று கேட்டார்களா? கிடைத்திருந்தால், அந்த மக்கள் ஏன் அழுக்காக இருந்திருக்க வேண்டும்? காயம்பட்டவர்களுக்கு ஒழுங்காக மருந்து கிடைத்ததா என்று கேட்டு, வாங்கிக் கொடுத்ததா இந்தக் குழு? உலகம் அறிந்த பிரபாகரனின் பெற்றோரை இந்தக் குழு பார்த்ததா? பிறகு, எப்படி இவர்களை உண்மை அறியும் குழுவாகச் சொல்ல முடியும். எனவே, இது சுற்றுலாக் குழுதான்!”

”அங்கு சாந்தி நிலவுவதாக மகிழ்ச்சியைத் தெரிவித்து இருக்கிறாரே முதல்வர்?”

”மயானத்தில்கூடத்தான் சாந்தி நிலவும். ஈழ பூமி இப்போது அப்படித்தானே இருக்கிறது. வாய்விட்டுச் சொல்லக்கூட முடியாத சோகத்தில் இருப்பவரைப் பார்த்து சாந்தி நிலவுவதாக கருணாநிதி சொல்வது அவரது கற்பனை வளமாக இருக்கலாம். யதார்த்தம் அதுவல்ல.

ஓர் உதாரணத்தை மட்டும்தான் அவருக்குச் சொல்ல முடியும். சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று இறந்துபோன மனைவி கமலாவின் உடலைப் பார்க்க ஜவஹர்லால் நேரு சென்றார். அதற்குப் பக்கத்து நாடுதான் இத்தாலி. அந்த நாட்டின் கொடுங்கோலன் முசோலினி, இரங்கல் செய்தி கொடுத்தார். தன்னுடைய நாட்டுக்கு நேரு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் அபிசீனியா மீது போர் தொடுத்து, அந்த மக்கள் மீது நச்சுக் குண்டுகளை முசோலினி வீசியிருந்தார். ‘ரத்தக் கறை படிந்த பாசிஸ்ட் முசோலினியின் அழைப்பை ஏற்று அவர் கரங்களைக் குலுக்க மாட்டேன்’ என்று கம்பீரமாக மறுத்து சந்திப்பைத் தவிர்த்தார் நேரு. அந்த மனிதநேயத்தை கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த முன்மாதிரியைப் பின்பற்றும் பக்குவம் கருணாநிதிக்கு இருந்திருக்க வேண்டும்!

அபிசீனிய மக்களுடன் நேருவுக்கு எந்த ரத்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுடன் கருணாநிதிக்குத் தொப்புள்கொடி உறவு உண்டு. ரத்தக் கறை படிந்த ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்க கருணாநிதிக்கு எப்படி மனம் வந்தது?”

”அங்கு சகோதர யுத்தம் நடந்ததால் போர் வெற்றி பெறாமல்போனதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?”

”இந்தப் பொய்யான குற்றச்சாட்டை பல ஆண்டுகளாக அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சகோதர யுத்தத்தைப் பின்னால் இருந்து நடத்தியதே இந்தியப் புலனாய்வு அமைப்புதான். திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்துப் போராளி இயக்கங்களும் ஒன்று சேர்ந்து வைத்த கோரிக்கைகளை சிங்கள அரசு ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை நடக்கும்போதே வவுனியாவில் 300 தமிழர்களைக் கொன்றார்கள். இதனால் அனை வரும் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள். எனவே, போராளிகளின் ஒற்றுமையைச் சிதைக்க உளவுப் பிரிவு செயல்பட்டது. அன்றைக்கு கருணாநிதி, வீரமணி ஆகியோருடன் நானும் சேர்ந்து டெசோ அமைப்பை வைத்திருந்தோம். ‘போராளிகளைப் பிளவுபடுத்தாதே’ என்று ஊர் ஊராகப் போய்ப் பேசினோம். அந்த உண்மையை கருணாநிதி இப்போது மறைக்கிறார்.

மேலும், சகோதர யுத்தம்பற்றி பேசுவதற்கு அவருக்குத் தகுதியே இல்லை. தன்னுடைய குடும்பத்தில் உள்ள சகோதர யுத்தத்தை முதலில் அவர் அடக்கட்டும்!”

”முதல்வரைக் கொல்லச் சதி நடப்பதாகவும் அதில் உங்களுக்குப் பங்கு இருப்பதாகவும் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறாரே?”

p14b.jpg”அரசியலில் நெருக்கடி வரும்போதெல்லாம், கட்சிக்குள் தனக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் தன் உயிருக்கு ஆபத்து என்று நாடகம் ஆடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை. தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்தபோது, தன்னைக் கொல்ல குடமுருட்டி பாலத்தில் குண்டுவைத்ததாக அவர்தான் சொன்னார். அதை வைத்தவர்களை அவரால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. சொந்தக் கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டு வைகோ விலக்கப்பட்டார். ‘வைகோவின் ஆதாயத்துக்காக புலிகள் என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்’ என்று சொன்னவரும் அவர்தான். பின்னர் வைகோவை, சிறையில் போய் பார்த்தவரும் அவர்தான்.

தூத்துக்குடி கே.வி.கே.சாமி முதல் தா.கிருஷ்ணன் வரை எத்தனை முக்கியத் தலைவர்கள் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய உட்கட்சிக் கொலைகளைத் தடுக்க முடியாதவர், தனது உயிருக்கு ஆபத்து என்று ஓலமிடுவது அவருக்குத் தனது கட்சிக்காரர்கள் மீது உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது!”

”இன்றைய நிலையில் இலங்கையில் போர் முடிந்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”

”தமிழர்கள் இன்னமும் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த நிலைமை மாறவில்லையே! தமிழ் மக்கள் இதுவரை பட்ட கஷ்டத்துக்கு என்ன அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது? அதைச் சொல்ல ராஜபக்ஷே தயாராக இல்லை. எத்தனையோ ஜனாதிபதிகள் இதுவரை வந்து போய்விட்டார்கள். ஒப்பந்தங்கள் போட்டார்கள். ஆனால், அதை அவர்களே மதிக்காமல் காலில் போட்டு மிதித்தார்கள். வடக்கு, கிழக்கு மாகாணம் இணைப்பு என்பதுதான் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம். அதை ராஜபக்ஷே முடக்கியபோது இந்திய அரசு தட்டிக்கேட்டதா? தனி நாடு கோரிக்கையைக்கூடத் தள்ளிவைத்துவிட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய மாநிலம் என்று புலிகள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தைக் குலைத்தது சந்திரிகாதானே. எனவே, தமிழர்களுக்கு அரசியல் தீர்வை இவர்கள் தர மாட்டார்கள். அதுவரை போராட்டம் ஓயாது!”

”பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால், அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

”இந்தியாவும் இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்துகொண்டு இருக்கிறது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும்.

மே 17-ம் தேதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20-ம் தேதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18-ம் தேதி லண்டனில் 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்துவிட்டார், புலிகள் தோற்றுவிட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. எனவேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!”

”புலிகள் அமைப்பு இன்னமும் இருப்பதாகச் சொல்கிறீர்களா?”

”அதே வலிமையுடன் இருப்பதாகவே சொல்கிறேன்.ஒன்றே கால் லட்சம் வீரர்களுடன் போன இந்திய அமைதிப் படையை இரண்டாயிரம் பேரை வைத்து எதிர்கொண்டார் பிரபாகரன். 650 புலிகள் வீரச் சாவை அடைந்தார்கள். பலரும் சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பினார்கள். ஆனால், மிச்சம் இருந்த சொற்பத் தொகையான புலிகளை மட்டும் வைத்து கெரில்லா தாக்குதல் மூலமாக அமைதிப் படையைத் திருப்பி அனுப்பினார் பிரபாகரன். ‘புலிகளால் இனி தலையெடுக்க முடியாது. பிரபாகரன் கதை முடிந்துவிட்டது’ என்று சென்னையில் வைத்து ராணுவத் தளபதி கல்கத் சொன்னார். அதன் பிறகுதான் தமிழீழத்தின் முக்கியப் பகுதிகள் அத்தனையையும் பிடித்தார்கள். எனவே, இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை!”

”இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் அரசியல்ரீதியாக அணிகளை மாற்றிக்கொள்ள இருக்கிறார்கள். இது உங்களது போராட்டத்தைப் பாதிக்காதா?”

”இந்த அமைப்பை ஆரம்பிக்கும்போதே அவர்கள் வெவ்வேறு அணிகளில்தான் இருந்தார்கள். அரசியல் எல்லைகள் கடந்து இனத்துக்காகச் சேர்ந்து நிற்பதாக முடிவெடுத்தார்கள். இன்று அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம். தேர்தல் நேரத்தில் அவர்கள் சில முடிவுகளை எடுக்கலாம். ஆனால், ஈழத் தமிழர்க்குப் போராட அவர்கள் ஓர் அமைப்பாகவே என்றும் இருப்பார்கள். யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம்!”

அச்சில் ஏறாத இந்த செய்தி

ஒக்ரோபர் 29, 2009

sun_tv.jpg

மாம் இந்த செய்தியை இன்று நீங்கள் எங்குமே படித்திருக்க முடியாது.

தென்னிந்தியாவில் கொடி கட்டிப் பறக்கும் டிவி சேனல் சன் டிவிக்கு டெல்லி உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இதற்கு காரணம் பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான டி-சீரிஸ் நிறுவனம் தான்.

டி- சீரிஸ்(t-series) நிறுவனம் ஒரு புகழ் பெற்ற பொழுது போக்கு இசை நிறுவனமாகும். திரை ப்பாடல்கள், காட்சிகள்,ஆல்பங்கள் போன்றவை மட்டுமல்லாமல் டிவி,கேசட்,சிடிபிளேயர் போன்றவைகளையும் தயாரித்து வருகின்றன.
Tseries-logo.gif

இதன் படைப்புகளை பல முன்னணி சேனல்களில் நாம் காணலாம்.அதை ஒளிபரப்ப அனுமதி மற்றும் ஒளிபரப்ப உரிமை ஒப்பந்தம் ஆகிய நடைமுறைகளுக்குப் பின்தான் ஒளிபரப்ப வேண்டும்.ஆனால் ஏராளமான சேனல்களில் இவை ஒளிபரப்பாகி வந்தன.

எவை உரிமை பெற்று செய்கின்றன,எவை அனுமதிக் காலம் கடந்தும் ஒப்பந்தக் காலம் கடந்தும் ஒளிபரப்புகின்றன என்று ஆய்வு செய்த போது விதிமுறைகளை மீறி சன் நெட் ஒர்க் ஒளிபரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

டி-சீரிஸின் தயாரிப்புகள்,பாடல்கள்,காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை,இவற்றை விநியோகம் செய்து பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் விதிமுறைகளை மீறி டிவி சேனல்கள் ஒளிபரப்புவது சட்ட விரோதம் என்று சென்னையை தலைமை இடமாகக் கொண்ட சன் நெட் வொர்க் தலைமைக்கும் ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ‘என்டிவி’ சேனலுக்கும் டி-சீரிஸ் நிறுவனம் பலமுறை நினைவூட்டுக் கடிதம் சட்டப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பு போன்றவை அனுப்பியும் அவை தங்களது இந்த உரிமை மீறலை தொடர்ந்து கொண்டிருந்தன.

இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் டி-சீரிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்ததுடன் இந்த வழக்கு தொடர்பான ஆடுக்கடுக்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்தது.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உரிமை மீறி ஒளிபரப்பு செய்ய சன் நெட் வொர்க் மற்றும் என் டிவி 24 தெலுங்கு நியூஸ் சேனலுக்கும் இடைக்காலத்தடை ஆணை எண்கள் CS(OS)1742/2009.CS(OS)1459/2009 1A 10152/2009) மூலம் தடை விதித்துள்ளது.

இதனால் இனி மேற்கண்ட இரண்டு சேனல்களிலும் முறையான அனுமதி பெரும் வரை இனி டி-சீரிஸ் தயாரிப்புகளின் பாடல்கள்,காட்சிகள் என்பனவற்றை நாம் காண முடியாது.

இது குறித்து டி சீரிஸ் நிறுவனத்தின் டைரக்டர் திவ்யா கோஸ்லாகுமார் கூறும்போது…

எங்கள் நிறுவனம் இசையுலகில் நல்ல பெயர் பெற்றுள்ள ஒன்றாக விளங்குகிறது.’டி-சீரிஸ்’ நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்தும் போது, உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுத்தான் ஒளிபரப்ப வேண்டும்.அப்படி செய்யாமல் ஒலி,ஒளிபரப்புவது காப்புரிமை சட்ட மீறலாகும்.எங்கள் பாடல்கள் மற்றும் காட்சிகளை நம்பி பல நிறுவனங்கள் மூதலீடு செய்துள்ளன இந்நிலையில் எங்கள் படைப்புகளை விதி மீறி ஒளிபரப்புவது,காப்பி எடுத்து பயன்படுத்துவது போன்றவைகளை எங்களால் அனுமதிக்க முடியாது என்றார்.

டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்த இடைக்காலத்தடை காப்பியடிப்பதையே காப்பிரைட்ஸாக எண்ணிச் செயல்படுவோர்க்கு நல்ல பாடமாக இருக்கும் என்று

சாவீட்டில் கொட்டி மேளம் தட்டித் தாலி கட் டும் கருணாநிதி: தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

ஒக்ரோபர் 29, 2009

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். கருணாநிதி என்ன
பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக
இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்”
“கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம்
வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு
எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார்.

சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில்
மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில்
குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது கருணாநிதி டில்லியில் கூடாரமிட்டு
மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இப்போதெல்லாம் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல்
படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல், யார் விபீஷணன்
என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் கருணாநிதியை விபீஷணன், எட்டப்பன்,
காக்கைவன்னியன் ஆகியோரது மொத்த உருவம் எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

முதலில் எட்டாவது உலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை
நடைபெறும் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே வெறுமனே
“உலகத்தமிழ் மாநாடு” என அறிவித்தார். இப்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு
எதிர்வரும் யூன் 24 முதல் 27 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது சாவீட்டில் கொட்டு மேளம் தட்டித் தாலி கட்டின கதையாக இருக்கிறது!

ஐந்து தடவை முதலமைச்சராக இருந்த போது வராத தமிழ்ப் பற்று இப்போது
கருணாநிதிக்கு பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. தண்ணீரில் மூழ்கினவன் ;
துரும்பைப் பிடித்தாவது கரைசேர நினைப்பது போல துருப்பிடித்துப்போன தனது
படிமத்தைத் துலக்கவும் – தமிழினத் தலைவர் அல்லர் தமிழினக் கொலைஞர் – என்ற
வரலாற்றுப் பழியைப் போக்கவும் இந்த உலகத்தமிழர் செம்மொழி மாநாடு உதவும் என கருணாநிதி கனவு காண்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ், தமிழர் என்ற உணர்வு
கருணாநிதியால் அமைச்சர் பதவிகளாக, கோபாலபுரங்களாக மாற்றப்பட்டு விட்டன.
பதவி ஆசை காரணமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ மக்களையும்
சிங்கள பேரினவாதத்துக்குக் காட்டிக் கொடுத்து விட்டார்.

தமிழ்மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித்
திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த கருணாநிதி, மனிதச்சங்கிலி, பதவி
விலகல், உண்ணாநோன்பு, பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என நீண்ட நாடகத்தை
அரங்கேற்றி சிங்கள – பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்குத் துணைபோனார்!

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம்,
போர்க்கப்பல்கள், ராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி
தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய
அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம்.
அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய
காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர்
கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை
படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

அண்மையில் ஒரு திமுக – காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி
அதில் அரசியல் குளிர் காய நினைத்தார். ஆனால் குழுவில் இடம்பெற்ற
காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம். ஆரோன் ‘இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப்
போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை’ என இனவெறி பிடித்த
ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இன்னொரு காங்கிரஸ்
உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் ‘நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம்
அனைத்துலக தரத்தில் சிறப்பாகவே உள்ளது’ என்று திருவாய்மலர்ந்து வதை
முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களது வெந்த நெஞசங்களில் வேலைப் பாய்ச்சினார்!

யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர்.
பாலுவிற்கு வலம்புரி இதழ் ‘சனீஸ்வரன்’ என்ற பட்டத்தை வழங்கியது. மேலும்
செய்தியாளர்களிடம் “இலங்கையும் – தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி
இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும் தமிழகம் இலங்கையில் முதலீடு
செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தார்.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்ற குழுவினர், திருமாவளவன் நீங்கலாக,
நவீன ஹிட்லர் மகிந்த ராஜபக்சவின் குருதி நனைந்த கைகளைக் குலுக்கிப்,
பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி, பரிசுகள் பெற்று ஈழத்தமிழர்களை
அவமானப்படுத்தித் திரும்பினார்கள்.

ஆனால் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் அவரைப் பாராட்டித்
தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ‘இலங்கைத் தமிழருக்கு நான்கே
நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர்
கலைஞர்!’ என்ற மலிவான அரசியல் பரப்புரை செய்து மகிழ்ந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு பழம்பாடல் நினைவுக்கு வருகிறது. அது முதல்வர்
கருணாநிதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாவோ – நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா மூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

ஆலமரத்தைப் பலாமரமாகச் செய்தல் முடியுமோ? நேராக்குவதற்கு இயலாத நாயினது
வளைந்த வாலை தேராக நிமிர்த்த முடியுமோ? கருமை நிறமுடைய காகத்தை கிளியைப்
போலும் பேசும்படியாகச் செய்வித்தல் ஆமோ? கருணை இல்லாத மூர்க்கனைச்
சீர்படுத்த முயலுமோ? ஆகாது என்பதாம்.

இப்போது நடைபெற இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனவரி 2011 ல்
நடத்தலாம் என உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா
அவர்களின் வேண்டுகோளை முதல்வர் சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டிப் புறந்தள்ளி விட்டார்.

இதனை அடுத்து உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும்
முனைவர் வா.செ. குழந்தைசாமியையும் பொருளாளர் இரா.
முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர்
கருணாநிதி மாநாட்டை நடத்த மெத்தப் பாடுபடுகிறார். இவர்கள் தமிழகத் தமிழர்
என்பதால் முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு வெளியே வலை வீசி இருக்கிறார்.
இதில் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.

“தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது
பொருத்தமற்றது” என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு கடந்த
ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இலங்கையில் தமிழர் அரசியல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள்
திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்துப் பலத்த விமர்சனம்
உள்ளது. இந்த நிலையில், நான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து
கொள்வது வில்லங்கமான காரியம். எனது நிலைப்பாடு குறித்து மாநாட்டு
ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.

உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி
அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும்.
செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான
கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும் அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான
சூழ்நிலையும் அவசியம் என்று சிவத்தம்பி கூறியிருந்தார்.

ஆனால் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதைத் தாம்
இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சிவத்தம்பி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனது குத்துக் கரணத்தை நியாயப்படுத்தத் தான் உலகத்தமிழ்ச் செம்மொழி
மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னது கிடையாது அப்படியாக
யாரும் பொருள் கொண்டிருந்தால் தனது சொற்பதத்தில் உள்ள குறைபாடு காரணம்
எனத் தமிழறிஞர் சிவத்தம்பி சமாளிக்கிறார்.

எமது முந்திய அறிக்கையில் கூறியிருந்ததை மீண்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர்,
அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ்
மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்குச் சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர
நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ்
மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது.
பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ்
இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை.
அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர்
அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை.

ஏன் தமிழ்நாட்டில் தமிழில் ஒரு தந்தி கூட அடிக்க முடியாது. இப்படி
எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில்
உள்ளது. இந்த அழகில் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி நாடு நடத்த நினைப்பது
உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும்
கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை.
அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.

கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில்
தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம்
இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

எனவே தமிழீழ மக்கள் விடுதலை பெற்றுப் பாதுகாப்போடும் மானத்தோடும்
மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை கருணாநிதி நடத்த இருக்கும்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள்,
தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க
வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!

கருணாநிதியின் அழுத்தத்துக்கோ இழுப்புக்கோ பேராசிரியர் சிவத்தம்பி
வளைந்து கொடுத்துத் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம்.

ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டியது ..

ஒக்ரோபர் 29, 2009

வரலாறு கொடுத்த வாய்ப்பு பயன்படுத்துவார்களா தமிழர்கள்? ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டியது ..

நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும்அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய
நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது.

அமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார்.ஐரோப்பியி யூனியன் "ஜி.எஸ்.பி. பிளஸ்’ சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கு அப்பால் பிரிட்டன் இலங்கைத் தலைவர்கள் பலரின் பிரிட்டனுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. ஜனாதிபதியுடன் ஜப்பான் பயணம் செய்யவிருந்த பலருடைய விசா விண்ணப்பங்களை ஜப்பான் நிராகரித்ததுடன் ஜப்பான் சென்ற பிரதமரையும், அரை மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் தாமதப்படுத்தி கைவிரல்
அடையாளங்களைப் பதிவு செய்து அவமானப்படுத்தியுள்ளது.

இந்திய அழுத்தம்

இந்தியா இவற்றுடன் இணைந்து செயற்படாவிட்டாலும் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு ஆகியன தொடர்பாகக் கடுமையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியப் பிரதமரின் கடிதம் நேரடியாகவே ஜனாதிபதியிடம்கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது ஐ.நா. பயணத்தைக் கைவிட்டு பிரதமரை ஐ.நாவிற்கு அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல தலைவர்களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் அஞ்சியிருக்கலாம்.
இதற்கு அப்பால் சர்வதேச சக்திகளின் கூட்டு அழுத்தம் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அடுத்தடுத்து இலங்கை வருகின்ற ஐ.நாவின் பிரதிநிதிகள் முன்னரைப்போன்று அல்லாமல் காட்டமான அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை செயற்படாமை

சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது, சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து செயற்பட இலங்கை மறுக்கின்றமையாகும். சர்வதேச சக்திகளிடம் குறிப்பாக மேற்குலக சக்திகளிடம் தமது ஆதிக்கத்தை உலகில் மேலோங்கச் செய்வதற்கு அரசியல், பொருளாதார ரீதியாக சில பொறிமுறைகள் உண்டு. ஜனநாயகம், மனித உரிமைகள்,
சட்டவாட்சி, ஊடகச் சுதந்திரம், திறந்த பொருளாதாரம், உதவி வழங்குதல் என்பவையே அப் பொறிமுறைகளாகும். இப் பொறிமுறைகள் உயர்ந்தபட்சம் செயற்படும்போதுதான் தமது ஆதிக்கத்தை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இப்பொறிமுறைகளைப் பின்பற்ற இலங்கை அரசு மறுப்பதுடன், இவ்வழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக மேற்குலகத்தினதும், பிராந்திய சக்தியினதும் எதிர் சக்திகளோடு உறவு கொள்ளவும் அது முயற்சிக்கின்றது. போர்க்காலத்திலும் இந்த உறவினைப் பயன்படுத்தியே மேற்குலக, பிராந்திய சக்திகளின் எதிர்ப்பினை அது தடுத்து வந்தது. தற்போதும் அதன் தொடர்ச்சியையே அது பேண
முயற்சிக்கின்றது. மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் ஆசிய மட்டத்தில் எதிர்நிலையில் உள்ளவை என கருதப்படுபவை, சீனா, ஈரான், மியன்மார் என்பவைதான். இச்சக்திகளின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் வளரக் கூடாது என்பதற்காகத்தான் போர்க் காலத்தின்போது அரசு பக்கத்தில் மேற்குலகச் சக்திகள் நின்றன.

இலங்கைத்தீவு தென்னாசியாவின் கேந்திர மையத்தில் இருப்பதனால் எதிர்நிலை சக்திகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்போது முழு தென்னாசியாவில் மட்டுமல்லாமல் கிழக்காசியா, மேற்காசியா என்பவற்றிலும் மேற்குலகின் ஆதிக்கத்திற்கு அது பாதிப்பைச் செலுத்தும் என்பது அவற்றிற்கு நன்றாகவே
தெரியும்.

இத்தகைய கேந்திர அரசியல் நோக்கு காரணமாக முழு இலங்கைத் தீவும் தமக்குத் தேவை என்பதாலேயே தமிழ் மக்களின் தமிழீழ கோரிக்கையை ஆதரிக்க இவை முன்வரவில்லை. எனினும் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இல்லாவிட்டால் அரசினைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதாலும், மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாலுமே போரை நிறுத்த அவை முனைந்தன. ஆனால் இந்திய ஆதரவு கிடைக்காததினால் அது இயலவில்லை.சர்வதேசக் கூட்டுப் பொறிமுறையின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் முயற்சி இரண்டாவது காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து சென்றுவிடும் என்ற அச்சமாகும். சர்வதேச சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு கூட்டு பொறிமுறைக் கருவியாக ஐக்கிய நாடுகள் சபையினையே பயன்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இங்கை செயற்படாதபோது அதனைத் தடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து போவது தவிர்க்க முடியாததே. போர்க் காலத்தில் சட்ட திட்டங்களை மறுப்பதற்கு நியாயம் கூறினாலும், போர் இல்லாக் காலத்தில் அதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது நம்பகத்தன்மையை வெகுவாகவே பாதிக்கும். அதுவும் வேறு, வேறு நாடுகளில் வேறு, வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றும்போது கண்டனங்களும், எதிர்ப்புகளும் வருவதற்கு அதிகமாகவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அரசியல் காரணங்களுக்காக சூடான், மியன்மார் விடயங்களில் தீவிரமான போக்கினையும், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கினையும் கடைப்பிடித்து வந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவே. இதனால் பலத்த கண்டனங்களை அது எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் அதன் செயலாளரினதும் நம்பகத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கையாலாகாதவர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஐ.நா. செயலாளருடன் இணைந்து தான் முன்னர் வெளியிட்ட கூட்டறிக்கையை இலங்கையரசு பின்னர் சிறிது கூட கணக்கில் எடுக்காததினால் அவரின் நம்பகத்தன்மை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.சர்வதேச சக்திகள் தமது கூட்டு ஆதிக்கத்தை முன்னர் கூறியமை போல ஐக்கிய நாடுகள் சபையினூடாகவே செயற்படுத்துவதினால், ஐ.நாவின் நம்பகத்தன்மை ஒரு மட்டத்திற்கு மேல் சரிந்து செல்வதை அவற்றால் அனுமதிக்க முடியாது. இதனாலேயே அவசர அவசரமாக பல முனைகளுக்கு ஊடாக அழுத்தங்கள் பீறிட்டுப் பாய்கின்றன.

உண்மைகளைப் படுக்கை விரிப்புக்குள் மறைத்தல், வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக செயற்படுதல் என்பவைதான் சர்வதேச சக்திகளை அதிக கோபத்திற்குள்ளாக்கியிருக்கின்றன. ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டமை, யுனிசெவ் அதிகாரியின் விசா இரத்து செய்யப்பட்டமை, பத்திரிகையாளர் திஸாநாயகத்திற்கு 20 வருட தீர்ப்பு வழங்கப்பட்டமை போன்ற அண்மைக்கால நிகழ்வுகள் சர்வதேச சக்திகளை உசுப்பேற்றி விட்டுள்ளன.

புலிகளின் மீள் எழுச்சிக்கான வாய்ப்புப் பற்றிய அச்சம்

மூன்றாவது தமிழ் மக்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் சிறிதளவாவது முன்னேறாவிட்டால் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அச்சமாகும். புலிகள் திரும்ப மீள எழுவார்களேயானால் நியாயம் அவர்களின் பக்கமே இருக்கும். இது எதிர் நடவடிக்கைகள் எவற்றையும் அவர்கள் மீது எடுக்க முடியாத நிலையை
ஏற்படுத்தும். அதற்கான தார்மீக உரிமையும் அற்றுப் போயிருக்கும்.தமிழ் மக்கள் தற்போது புலிகள் இல்லாத வெற்றிட நிலையினை அனுபவ ரீதியாகவே உணர்ந்து வேதனைப்படுகின்றனர். அவர்கள் மீள எழும்புவார்களாக இருந்தால் முன்னரைவிட மிகப்பெரிய ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். புலிகள்
தனித்துப் போராடுவதற்குப் பதிலாக உலகத் தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடக் கூடிய சூழல் ஏற்படும். உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும். வெறுமனே தேசிய இனத்தின் போராட்டமாக இல்லாமல் மனித தர்மத்திற்கான போராட்டமாக அது வளர்ச்சியடையும். இவ்வாறான நிலை வருமாக இருந்தால், அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல எவராலுமே இப்போராட்டத்தை தடுக்க முடியாது போகலாம். இவ் எழுச்சி தமிழீழம் நோக்கி
நகர்வதையும் தடுக்க முடியாது. இந்தச் சூழல் வருவதை மேற்குலகோ, இந்தியாவோ விரும்பவில்லை.

ஒருபுறம் சீன, பாக். ஆதிக்கம் மறுபுறம் மேற்குலக ஆதிக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது சீனாவினதும், பாகிஸ்தானினதும் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவதை எவ்வாறு தடுப்பதென்பதாகும். சிங்கள சமூகமும், இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை இலங்கை எடுப்பதையே விரும்புகின்றது. சிங்கள சமூகம் என்றைக்குமே இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. இதனால் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையைக் கொண்டு வருவதில் இந்தியா தோல்வியையே தழுவி வருகின்றது.
இத்தோல்வி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியிலிருக்கின்ற எல்லாக் காலங்களிலும், இந்தியாவிற்கு ஏற்படுவது வழமைதான். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு மேற்கின் ஊடுருவலுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு சீனாவின் ஊடுருவலுக்கும் இந்தியா
முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குலகத்தின் ஊடுருவலின் போது இந்தியா, இலங்கை அரசிற்கு எதிராக கடுமையான நிலையினையே எடுப்பதுண்டு. இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியையும் அதற்காக உச்ச வகையில் பயன்படுத்துவதற்கு இந்தியா தவறுவதில்லை. சிங்கள சமூகத்திடமும் மேற்குலக எதிர்ப்பு நிலை தீவிரமாக இருப்பதினால் சிங்கள இனவாத சக்திகள் அதற்கு வலிமையான ஆதரவினை வழங்கி நிற்கும். இதனால்
இந்தியாவின் செயற்பாடும் இலகுவாகவிடும்.

சலுகைகள் மூலம் சமாளிப்பு

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக் காலத்தில் அதன் சீன, பாகிஸ்தான் சார்பு நிலைக்கு எதிராக இவ்வாறான எதிர்ப்பு நிலையினை எடுக்க முடியாது.சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை சிங்கள இனவாதிகள் ஆதரிப்பதாலும், ஐக்கிய தேசிய கட்சி சீனா, பாகிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்க தயாரில்லாமல் இருப்பதனாலும் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுக்க இந்தியவால்
முடிவதில்லை. இதனால் பல சலுகைகளைக் கொடுத்து இலங்கை ஆட்சியாளர்களை வளைத்துப் போட
இந்தியா முயற்சிப்பதுண்டு. இவ்வளைப்பின் மூலம் தனக்கெதிராக செல்லவிடாது அது இலங்கையைத் தடுப்பதுண்டு. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் (1974), கச்சத்தீவு ஒப்பந்தம் (1974) என்பவற்றை இந்த வகையிலேயே அதிக விட்டுக் கொடுப்புகளைக் கொடுத்து அது கைச்சாத்
திட்டிருந்தது. இதற்காக மலையக மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுக்கவும் அது தயங்கவில்லை. இவ்வாறான வரலாற்று நிலையே தற்போதும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
வன்னிப் போரின் போது தமிழ் மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுத்து இலங்கை அரசுடன் இணைந்து போரை அது நடத்தியது. எனினும் சீன ஊடுருவலையோ, தென்னிலங்கை அதிகளவில் சீனா நோக்கிச் சரிவதையோ இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த ஊடுருவல் இந்தியாவின் கைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. மியன்மார் போன்ற நிலைக்கு அது இன்னமும் வராவிட்டாலும் அதனை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவை முடக்கும் முயற்சி

இலங்கை அரசு தென்னிலங்கைக்குள் இந்தியாவைக் கால் பதிக்க விடாமல் வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு வடக்குகிழக்கு மட்டும் போதுமானதாக இல்லை. அதற்கு முழு இலங்கையுமே தேவை. வடக்கு கிழக்கு மட்டும் தேவையாக இருந்திருந்தால், தமிழ் மக்களின் போராட்டத்தை அது ஆதரித்திருக்கும்.வட கிழக்கில் வலிமையாக கால்பதிப்பதற்கும் தமிழ் மக்களின் ஆதரவும் அதற்கு இல்லை. சம்பூர் பிரதேசத்தை அணு மின் நிலையத்தைச் சாட்டாக வைத்து இந்தியா ஆக்கிரமித்தமை தமிழ் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.இந்தியாவின் நலன்களுக்காக போரின் போது தமிழ் மக்களின் நலன்களை அது விலையாக கொடுத்தமையையிட்டும், தமிழ் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.

கிழக்கில் புலிகள் கருணா முரண்பாட்டுடன் கால் பதிக்க இந்தியா விரும்பியது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில் இருந்ததினால் பிள்ளையானைத் தனக்குச் சார்பாக பயன்படுத்த முனைந்தது. ஆனால் தற்போது மஹிந்தர் அரசு இதனை விரும்பாததினால் கருணாவை இதற்கு எதிராக இலங்கை
திருப்பி விட்டுள்ளது. கருணா அம்பாறை மாவட்டம் முழுவதும் பிள்ளையானுக்கு எதிராக தற்போது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். படையினரும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். உண்மையில் இங்கு பிள்ளையானும், கருணாவும் மோதவில்லை. மாறாக இந்தியாவும்,
இலங்கையுமே மோதுகின்றன. இந்திய சார்பு சக்திகள் வலிமையுடன் இலங்கையில் இருப்பதனை இலங்கை அரசும் இராணுவமும் அறவே விரும்பவில்லை.இந்தியா பயன்படுத்த வடக்கில் எவருமில்லை
வடக்கில் இந்தியா பயன்படுத்துவதற்கு எவருமேயில்லை. டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்த முனைந்த போதும் இலங்கையரசுடன் முரண்படக் கூடாது என்பதற்காக அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்கும் வரை தமிழ்
மக்களின் மத்தியில் ஒரு தளத்தினை ஒரு போதும் அதனால் அமைக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்காக இந்தியாவை சார்ந்து நின்றாலும் இந்தியாவின் எடுபிடியாகச் செயற்பட அதனால் முடியாது. அதற்குரிய வலிமையும் அதனிடம் கிடையாது. இந்தியாவிற்கு தேவையானபோது ஆயுதம் தரிக்கக் கூடிய அமைப்பே தற்போது அவசியம். அதனாலேயே பிள்ளையானை ஆதரிக்க அது முற்பட்டது. ஆனால் வடக்கில் அதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழகத்தின் நெருக்கடி

அடுத்தது தமிழ் நாட்டிலிருந்து எழும் நெருக்கடியாகும். தமிழ் நாட்டுத் தேர்தல் அரசியல் எப்படித்தான் இருந்தாலும் தமிழக மக்கள் இலங்கை தமிழர்களோடுதான் நிற்கின்றனர். போரில் தமிழ் மக்களின் அழிவும், புலிகளின் தோல்வியும், தமிழக மக்களை வெகுவாகவே பாதித்திருக்கின்றன. தங்களால்
இவற்றைப் பாதுகாக்க முடியவில்லையே என அவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றிற்கும் இந்திய அரசே காரணம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புலிகள் மீதிருந்த அதிருப்தி எதுவும் தற்போது தமிழக மக்களுக்குக் கிடையாது. மாறாக அனுதாபமேயுள்ளது. இதனை ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போதும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராகுல்
காந்தியைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருந்தனர். இறுதியில் இதற்கு முகம் கொடுக்க முடியாமல் இரண்டு மணிநேர நேர்காணலை 41 நிமிடத்துடன் முடித்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது.

எனவே தமிழ் நாட்டு அதிருப்தியையும், சமாளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவிற்கு உள்ளது. இல்லையேல் விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழ் நாட்டிலும் ஏற்படலாம் என அது அஞ்சுகின்றது. சிங்கள சக்திகளை பாதுகாக்கச் சென்று தமிழ் நாட்டை இழந்துவிட வேண்டாம் என இந்தியா ஆய்வாளர்கள்
இந்தியரசிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.மற்றைய விடயம் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அம்சமாகும்.இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காத வரை புலிகள் மீள் எழுவதற்கான வெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். புலிகளின் வெற்றிடத்தை புலிகளிலிருந்து உருவாகும், புதிய புலிகளால் நிரப்ப முடியுமே தவிர ஏனைய அமைப்புகளினால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஏனைய அமைப்புகளின் கையாலாகாத நிலை போர் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே தெளிவாகத் தெரியத்
தொடங்கிவிட்டது. பேரின வாதத்திற்கு எதிராக சிறிய துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் அந்த அமைப்புகள் உள்ளன. புலிகள் வலிமையோடு இருக்கின்ற வரை தனது கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா எவ்வளவோ முயற்சி செய்தும் தனித்துப் போட்டியிட அரசு சம்மதிக்கவில்லை.

புலி எதிர்ப்பு சக்திகள் வாய் பொத்தி மௌனம்

13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்த புலம்பெயர் நாடுகளின் புலி எதிர்ப்பு சக்திகள் இன்று வாய் பொத்தி மௌனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ் நாட்டில் மாநாடு நடத்த முயற்சி செய்தும் இந்திய உளவுப் பிரிவு அதனை இடையில் குழப்பவிட்டது.
புலிகள் வலிமையாக இருந்த போதுதான் புலி எதிர்ப்பு சக்திகள் இலங்கை அரசிற்கு தேவைப்பட்டன. தற்போது அத்தேவை இல்லாததினால் சிறியளவிற்கு கூட இச்சக்திகளுக்கு மதிப்பினை இலங்கை அரசு கொடுப்பதில்லை.புலிகளின் மீள் எழுச்சி முன்னைய புலிகளைப் போல ஒருபோதும் இருக்காது.
சர்வதேச ரீதியாக வலுவான நியாயத்தைக் கொண்ட உலகத் தமிழர்களையும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்த பேரெழுச்சியாகவே அது இருக்கும். இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும் பலம் கொண்டவர்களாகவே அவர்கள் விளங்குவர். இது இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் மட்டுமல்லாமல் மஹிந்தருக்கும் நன்றாகவே தெரியும். இந்திய ஆட்சியாளர்கள்,அதுவும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதனை அறவே விரும்பவில்லை.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தினையாவது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்குள்ளது. ஆனால் மஹிந்தர் அரசு அதற்கும் தயாரில்லாமல் இருப்பது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலைத் தருகின்றது. மொத்தத்தில் தற்போதைய போக்கு தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் போக்காகும். மஹிந்தர் ஆட்சி இலங்கையில் இருக்கும் வரை இப்போக்கு வளர்ந்தே செல்லும். மேலும் சில வருடங்களுக்கு மஹிந்தர் ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. எனவே மேற்குலக இலங்கை முரண்பாடு, இந்திய இலங்கை முரண்பாடு
தொடர்ந்தும் வளர்ச்சிடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

வரலாற்று வாய்ப்பு இது!

வரலாறு, சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்கிக் கொடுக்கும். தற்போதும் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழ் மக்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த போகின்றனர்? இதுதான் இன்று எழும் மிகப்பெரிய கேள்வி.

தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் தளம் இன்று மூன்று பிரதான இடங்களில் விரிந்து காணப்படுகின்றது. தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் என்பவையே அம்மூன்றுமாகும். தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், புலம்பெயர் நாடுகளில் புலம்பெயர் மக்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவு சக்திகளுக்கும் இது தொடர்பான மிகப்பெரும் பொறுப்புக்கள் உள்ளன.இவை மூன்றிலும் தலைமை சக்தியாக இயங்கக் கூடிய தளம் புலம்பெயர் தளம்தான்.இதுவே மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து தலைமை கொடுக்கும் தகைமையில் உள்ளது.

புலம்பெயர் மக்கள் தலைமை சக்தியாக இருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய சக்திகள் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தளமாக புலம்பெயர் தளமேயுள்ளது. புலிகளின் தோற்கடிக்கப்படாத பிரிவினரும் அங்குதான் பெருமளவில் உள்ளனர். தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியுமே தவிர, தீவிரமான பணிகளை குறிப்பட்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. இராணுவ நிர்வாகம் அவற்றை அனுமதிக்கப் போதில்லை. இரண்டாவது தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய மிகப் பிரதான பணி சர்வதேச அரசியலை எமக்குச் சார்பாகத் திருப்புவதுதான். ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இப்பணியினை செய்யாமல், அதில் வெற்றி பெறாமல், எதிர்காலத்தில் ஓர் அடி கூட தமிழ்த்தேசிய அரசியலினால் முன்னோக்கி நகர முடியாது. இப்பணி அதிகளவில் புலைமை சார்ந்த அரசியல் இராஜதந்திரப் பணியாகவும், மக்களை இணைத்து போராட்டங்களை நடத்தும் வெகுஜனப் பணியாகவும் இருப்பதினால் புலம்பெயர் நாடுகளே அதற்கு ஏற்ற தளங்களாக இருக்கின்றன.

புலம்பெயர்ந்த மக்களின் பொறுப்பு

புலம்பெயர் மக்கள் இந்த வரலாற்றுப் பொறுப்பைச் சீராக மேற்கொள்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கூடிய வகையில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்தல் வேண்டும். இராணுவ ரீதியான வெற்றிகளை மட்டும் கேட்டுப்
பழகியவர்களுக்கு இந்த அரசியல் வேலைகளின் நுண் தளங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது. இதுவரை கால தியாகங்களை ஒரு சரியான பாதையில் கொண்டு வந்து நிறுத்தி நகர்த்துவதற்கு எங்களது அரசியல் பார்வைகளை விரித்துக் கொள்வது அவசியமானதாகும். மாற்று அரசியல் சக்திகளெனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் உப்புச்சப்பற்ற 13ஆவது திருத்தத்திற்குப் பின்னால் நகர்வதை விடுத்து தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து சரியான பாதைக்கு வரத் தவறக் கூடாது. அவ்வாறு
தவறுவார்களேயானால் மீண்டும் ஒரு தடவை வரலாறு அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னோக்கி நகரப்பார்க்கும்.

கூட்டமைப்பின் கடமை

தாயகத்தில் தமிழ்த்தேசிய உணர்வை விழிப்புடன் வைத்திருக்க வேண்டியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே ஆவர். அவர்கள் அப்பொறுப்பை உண்மையில் உணர்ந்திருக்கின்றார்களா என்பது சந்தேகம் தான். இல்லையேல் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் ஜனாதிபதியுடன் பேசச் செல்வது, நிவாரணப் பொருட்களுக்கு கையேந்த அடிபடுவது போல ஜனாதிபதியின் கையைப்பற்ற முன்னிற்பது, தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்து விட்ட ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை பக்திப் பரவசத்துடன் பாடுவது எல்லாம் நடந்திருக்காது. ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் பேச வந்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியென தொழிற்சங்க தலைவர்களின் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்றார். தம்மோடு வலிமையாக மோதிக் கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறி சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளுவதற்கு அரசிற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த எந்தக் கோரிக்கைக்கும் தெளிவான பதில் எதையும் ஜனாதிபதி வழங்கவில்லை. பேச்சு நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அகதி முகாம்களுக்கு அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் காவலில் இருக்கும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பனர் கனக ரத்தினத்தையும் விடுவிக்க செய்ய முடியவில்லை.கூட்டமைப்பின் இயலாமை தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசுவது அவசியம் தான். பேச்சுக்கு ஒரு சாட்சி தேவை என்ற வகையில் வெளி மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும.குறைந்தபட்சம் சரியான நிகழ்ச்சி நிரல்களுடன் ஒரு தொடர் பேச்சுக்குச் சென்றிருக்க வேண்டும். வெறுமனே அரசு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் பேசக் சென்றிருக்க கூடாது.
ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக அரசிற்கே நன்மையைக் கொடுத்துள்ளது. அரசும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை பேச்சுக்குச் செல்லவில்லை. அத்தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், தமிழ் மக்கள் தங்களோடு நிற்கின்றனர் என அது பிரசாரம்
செய்திருக்கும். அது நடைபெறாததினாலேயே பேச்சுக்குச் சென்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையாவது செய்வதற்கு முன்னர் தமது அந்தஸ்தையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்வது அவசியம். இவ்வளவு காலத் தியாகங்களைப் போட்டுடைக்கும் செயல்களில் அது இறங்கக் கூடாது.அமைப்பு, தொழிற்பாடு என்பவற்றை பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமானது. விடுதலைக்காக போராடும் மக்களின் ஒரு பகுதிப் பொறுப்பினை ஏற்றிருக்கும் அமைப்பு என்ற வகையில் இவை உச்ச நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சாதாரண அரசியற் கட்சிக்கு இருக்க வேண்டிய பண்புகள் கூட அதனிடம் இருக்கவில்லை. பல்வேறு அமைப்புகளை இணைத்த ஒரு கதம்பக் கூட்டமாகவே அது உள்ளது. அவற்றுடன் இணைந்த அமைப்புகளும்
வெறும் பெயர்களுடன் இருக்கின்ற அமைப்புகளே தவிர தம்மளவில் உள்ளார்ந்த வலிமையானவையாக இல்லை.

இக்குறைபாடு அதன் தொழிற்பாடுகளிலும் பாதிப்புச் செலுத்துகின்றது.முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்று எதுவும் அதனிடன் கிடையாது. அவ்வப்போது கைக்கு வந்தவற்றை மேற்கொள்கின்ற போக்குத்தான் அதனிடம் உள்ளது.

இதனால் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ, வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கச் செல்லும் போதோ, அரசுடன் பேசுவதற்குச் செல்லும் போதோ போதிய ஆயத்தங்களுடன் அது செல்வதில்லை. அதற்கான ஆவணங்களை தேடி தயாரிப்பதுமில்லை. அவற்றை மேற்கொள்வதற்காகத் தங்களுக்குள் ஒழுங்காகக் கூடுவதுமில்லை. அதற்கேற்ற ஒழுங்குவிதிகளும் அதனிடம் கிடையாது. 22
நாடாளுமன்ற உறுப்பனர்கள் இருந்தும் 10 பேரைக் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றாகக் காண முடியாது. அங்கு உரையாற்றும் போது ஏனோ தானோ என்ற வகையில் உரைகள் ஆற்றப்படுகின்றனவே தவிர திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி ஆற்றப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பழைய தமிழரசுக் கட்சிக் காலத்தில் அப்போதைய உறுப்பினர்கள் இதனை நன்றாகவே
பயன்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது கேள்வி நேரம் பற்றி சிறிய அக்கறை கூட செலுத்தப்படுவதில்லை.

தமிழ் மக்களின் போராட்டம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்ற கட்டத்திற்குள் சென்ற பின்னர் நாடாளுமன்றக் கட்சிகளிàல் பெரியளவிற்குச் சாதிக்க முடியாது என்பது உண்மைதான். நாடாளுமன்ற அரசியல் என்பதே சமரச அரசியல் அப்பிரிவால் என்பதால், தமிழ்த் தேசியக் அரசியலில் பிரதான
பாத்திரத்தை வகிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் சிறந்த துணைப் பாத்திரத்தை அதனால் வகிக்க முடியம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணை பாத்திரத்திற்கு ஏற்ற அமைப்பாகவும் இல்லை என்பது தான் கவலைக்குரியது. இதனை சமாதான காலத்தில் நன்றாகவே அவதானிக்க கூடியதாக இருந்தது.

துணைப் பாத்திரத்தையாவது சரியாக ஆற்றுவார்களா இவர்கள்?

புலிகள் இல்லாத தற்போதைய நிலையில், தமிழ்த்தேசியக் கூடடமைப்பை எப்படியாவது துணைப் பாத்திரத்தை ஆற்றக்கூடியதாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு உடனடியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பன் ஒரு மாநாட்டைக் கூட்டி கட்சியின் இலக்கு, கொள்கை, வேலைத் திட்டம், அமைப்பு வடிவம் என்பவற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்வது அவசியமானதாகும். பழையவர்கள் ஒழுங்காக செயற்படாவிட்டால் புதியவர்களை இணைத்தாவது கட்சியின்
செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது அவசியம். தமிழ் சிவில் சமூகம் விழிப்புடன் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கும் போதே இவை சாத்தியமானவையாக இருக்கும்.

பிரதான பாத்திரத்தைப் புலிகள் அல்லது அதனிடமிருந்து தோற்றம் பெறும் புதுப் புலிகள் தான் ஆற்றமுடியும். ஒரு விடுதலை இயக்கத்தை வெளிப்படையச்செயற்படுத்தும் களம் இலங்கையில் இல்லாததினால், புலம்பெயர் நாடுகளிலேயே ஒரு குறிப்பட்ட காலத்திற்கு அதனை இயக்க வேண்டியுள்ளது. முன்னர் கூறியது போல இன்றைய காலகட்டம் இராணுவச் செயற்பாடுகளை விட அரசியல் ரீதியான இராஜதந்திரச் செயற்பாடுகளை வேண்டிய நிற்பதால், அதற்கேற்றவாறு
விடுதலை இயக்கத்தினைப் புனரமைத்துக் கொள்வதும் அவசியமானதாகும். அடுத்தது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும். இந்தியா தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செல்வதைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முக்கியமானவையாகும். தமிழக சிவில் சமூகம் இனறு மிகவும் விழிப்புணர்வு நிலையில் இருக்கின்றது. ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போது அதனைத் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கருணாநிதியின் வங்குரோத்துத்தனமான செயற்பாடுகளினால்தான் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியவில்லை. அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிராமல் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அறிவூட்டி அமைப்பாக்கும் போதே அங்கு வினைத்திறன் மிக்க வினைபயன்களை எதிர்பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

தலைமை, தாயகம், தமிழகம் மூன்று தளங்களில் பொறுப்பு

இவை எல்லாவற்றிற்கும் முதலாவது நிபந்தனை தலைமை அமைப்பை மீண்டும் சீர் செய்வதே. அதனைச் சீர்செய்து தலைமை, தாயகம், தமிழகம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கிணைத்து முன்னேறும் போது காத்திரமான பாய்ச்சலை மேற்கொள்ள முடியும். இரண்டாம் கட்ட பணியென்பது திட்டமிட்ட வகையில் இராஜதந்திரப் போரை நடத்துவதே. உலகெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை இணைத்து முன்னேறும் போது இரண்டாம் கட்டப் பணிகளிலும் எம்மால் இலகுவாக முன்னேற முடியும்.

எம் இனமே..எம் சனமே…..இனி என் செய்வாய்?

ஒக்ரோபர் 29, 2009

உலகில் இன்றைய நாளில் மூன்று இடங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு நின்றிருக்கும் ஈழத்தமிழர்களை யாரும் தமது நாடுகளில் சேர்த்துக்கொள்ளத் தயாராய் இல்லை.!

முதலில் இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஏதிலிகளின் படகு ஒன்று இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது………எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் ஒரு சிறு பெண். இந்தோனேசியாவின் அரசாங்கமும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.

மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது.

அவர்கள் மனிதர்கள்…இரத்தமும் , சதையுமாக வாழும் மனிதர்கள்…நேற்றுவரை சொந்த இடத்தில் சுகமாய் வாழ்ந்த மனிதர்கள்…..குப்பைகளல்லர்…நினைக்கையிலேயே நெஞ்சு கொதிக்கிறது.

அந்தப் படகில் இருக்கும் 266 பேரும் நானும் ஒரே இனம்…ஒரே மொழி பேசுபவர்கள்.

அடுத்து கனடாவில் ஓஷன் லேடி கப்பலின் மூலமாக கனடா வின் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட ஏதிலிகள்…..

கைகளை , கால்களை சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்களாம் அங்கே……….இன்னமும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களில்லை……..நாடின்றி , சிறைச்சாலையில் வாடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்…அவர்களும் நாமும் ஒரினம்..!

பிரிதொன்று…..

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்த 78 தமிழர்களின் அரசியல் தஞ்சத்தை நிராகரிக்கப் போவதாகவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போவதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ருட் அறிவித்திருக்கிறார். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

உலகில் எங்கேயுமே ஈழத்தமிழர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள்…அவர்கள் கேட்கும் அரசியல் தஞ்சம் கூட அனுமதிக்கப்படாமல் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்….!

அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

நாங்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று கேட்டது மட்டும் தானே?

எங்களின் பூமியை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்றது மட்டுந்தானே?

அதற்காகவா இந்த உலகம் இப்படி அவர்களைத் தண்டித்தது?

காடுகளில் , மழைகளில் கால்கடக்க நடந்து , செடிப்புதர்களின் நடுவில் ஒளிந்து , தாலியை , சொந்தமான பூமியை விற்று அதைக் காசாக்கி படகுக் காரர்களிடம் கொடுத்து வேறொரு ஊருக்கு அரசியல் தஞ்சம் கோருவது எதனால்?

இலங்கை இராணுவம் கண்டால் தம் கதி அதோ கதிதான் என்று தெரிந்தும் ப்டகுகளில் அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்வது எதனால்?

சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கவா? கேளிக்கைகளில் வாழ்க்கையைக் கழிக்கவா? இல்லையே….சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை…தாங்கள் காக்கை குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற எண்ணத்தில் தானே? உயிர்ப்பயத்தில் தானே ?

இனிமேல் தன் சொந்த நாட்டில் தன்னால் வாழவியலாது என்ற காரணம் தானே?

அடேய் , என் இனத்தையாடா குப்பையென்றாய்? என் சனங்களையாடா ஆடுமாடுகளைப் போல் திரும்பிப் போ என்றாய்……? என் சனமே , வா வந்து என் பூமியில் வாழு என்று திமிர்க்குரலில் சொல்ல தமிழகத்தானுக்குத் தான் தைரியம் உண்டா ? தமிழகத்தை ஆள்பவனுக்குத் தான் திராணி உண்டா? அக்கறை உண்டா?

அதுசரி , தமிழகத்தான் எங்கே தன் பூமியை ஆள்கிறான்? சுதந்திரம் பெற்றது முதலாய் செங்கோட்டையின் அடிமைதானே அவன்? ஒரு அடிமை எப்படி அகதிகளை ஆதரிக்க இயலும்…? ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே…அடிமைகளல்லர்..!

பரணி , புறநானூறு இவையெல்லாம் போற்றி வளர்த்தோம்…….

அதனால் புண்ணியம் என்ன கண்டோம்?
இன்றோ போக்கிடம் இன்றித் திரிகிறோம்…யார்க்கும்
இனி நாங்கள் வேண்டாதவர்களாகிப் போனோம்………! சீக்கிரம்
இன்னொரு சுனாமி வந்து சூறையாடிப் போகட்டும்…
இருக்கும் இன அடையாளங்கள் இல்லாது போகட்டும்…!

என் இனமே…என் சனமே.
என்ன செய்து இனி
எம் உடமை காப்பாய்?

என் இனமே..என் சனமே.
என்ன செய்து இனி
எம் பெருமை சேர்ப்பாய்?

என் இனமே..என் சனமே..
என்ன செய்து இனி
எம் நிலத்தை மீட்பாய்?

என் இனமே…என் சனமே..
என்ன செய்து இனி
எம் மக்களைக் காப்பாய்?
வேதனைத் தீயினை அணைப்பாய்?

தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "

”தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்

தியாகி அன்னை பூபதி

ஒக்ரோபர் 29, 2009


தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.

திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும்இ தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.

நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.

இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் து}க்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.

சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.

இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும்இ இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.

அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாPதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.

இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.

ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.

இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.

அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும்இ அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் து}க்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூடஇ தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய்

ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்